Pillaiyan Archives - Oruvan.com

பிள்ளையானின் முக்கிய சகா காத்தான்குடியில் கைது
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (13) மாலை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் ஏழாம் திகதி கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர் கடந்த 2024 ஜூன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார்.

இதனையடுத்து அவரை கைது செய்து மூன்று நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிள்ளையானின் முக்கிய சகா காத்தான்குடியில் கைது appeared first on Oruvan.com.

பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

The post பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர் appeared first on Oruvan.com.

தீவிரமடையும் பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் – இனிய பாரதியின் சாரதியும் கைது
கொலை உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் பிரிவில் வைத்து நேற்று (7ஆம் திகதி) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிள்ளையான் குழுவின் குற்றங்கள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளின் நீட்டிப்பாக இந்தக் கைது செய்யப்பட்டுள்ளது. 34 வயதுடைய கணகர் வீதி, தம்பிலுவில் 01 ஐச்சேர்ந்த செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவரே இவ்வாறு கைதானவராவார்.

கைதானவர் கடந்த 2007, 2008, 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாகச்செயற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுவால் கொலை, கடத்தல், காணாமல் போதல், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை இயக்குதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவருக்கு 2007ஆம் ஆண்டு 17 வயது எனவும், அவர் எப்போது, ​​எந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டார் என்பது இன்னும் தெரியவில்லை.

அவரது கைது நடவடிக்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கான தற்காலிக ஏற்பாடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனியபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அத்துடன், அவரது சகாவான சிவலிங்கம் தவசீலன் மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வைத்து கைதானார். இவர்கள் இருவரும் 1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post தீவிரமடையும் பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் – இனிய பாரதியின் சாரதியும் கைது appeared first on Oruvan.com.

கொலைக் குற்றச்சாட்டுகள் – பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொலை வழக்குகள் தொடர்பாக பல குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஐந்து கொலை சம்பவங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலையும் அடங்கும் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் பல சிறப்புக் குழுக்கள் மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த விசாரணைகள் தொடர்பாக, சந்தேக நபர்கள் முகாம்களை நடத்தி வந்த இடங்கள் கண்காணிக்கப்பட்டு, பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வு மற்றும் நிதிக் குற்றப் பிரிவின் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் அறிவுறுத்தலின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொலைக் குற்றச்சாட்டுகள் – பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் appeared first on Oruvan.com.

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்
பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் ஊடாக தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடும் கோரியுள்ளார்.

பிள்ளையான் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிள்ளையான் கைது செய்யப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பகிரங்கமாக வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அடிப்படை உரிமைகள் மனுவில், தனது கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் போதுமான சட்ட அடிப்படை இல்லை என்றும் பிள்ளையான் வலியுறுத்துகிறார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அடிப்படை உரிமை மீறலை உறுதிப்படுத்தும், அதேவேளை, அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான் appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்- அரச சாட்சியாக மாறுவாரா பிள்ளையான்?
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பியபோதும், அரசாங்கம் அதற்குச் சம்திக்கவில்லை.

ஆனாலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பிலவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பில் பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் அவர் மீது கடத்தல், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் உள்ள நிலையில், உயிரத்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரத்தில் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் பிள்ளையானை அரச சாட்சியாக மடை மாற்றி தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பிரதான சக்திகளை காப்பாற்றும் நோக்கம் உள்ளதாக கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

அரச சாட்சியாக மாற்றுவது தொடர்பாகவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிள்ளையானுடன் பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனாலும் விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படும் என அரசாங்கம் கூறுகின்றது. கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் இல்லமும் பிள்ளையான் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்படுமா என்பது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனாலும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைப்பதாகவும் பேராயர் இல்லம் கூறியிருக்கிறது. அதேவேளை, பிள்ளையான் கைது விவகாரம் தொடர்பாக பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அமைதியாகவுள்ளன.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திலும் பிள்ளையான் பிரதி அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழத் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்திருந்த பிள்ளையான் சமீபத்தில் கருணா எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கிழக்கு மாகாண அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்திருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உட்பட பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பாக அமரர் சம்பந்தன் நாடாளுமன்த்தில் 2008 ஆம் ஆண்டு கூறியதுடன் பிள்ளையானைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்..

2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தாலும் 2020 இல் கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் விடுதலை செய்திருந்தார்.

இப் பின்னணியில் தற்போது அநுரவின் அரசாங்கத்தில் வேறொரு அரசியல் நோக்கில் பிள்ளையான் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்- அரச சாட்சியாக மாறுவாரா பிள்ளையான்? appeared first on Oruvan.com.

பிள்ளையான் கைது செய்யப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று இரவு பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கொழும்பிலிருந்து வந்த குற்றப்புலனாய்வுத்துறையினர் அவரை கைதுசெய்துள்ளதுடன் உடனடியாக கொழும்புக்கு கொண்டுசெல்லும் பணியையும் முன்னெடுத்திருந்தனர்.

நேற்று இரவு 8.00மணியளில் இந்த கைதுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கொழும்பு புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இநத கைதுஇடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

The post பிள்ளையான் கைது செய்யப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள் appeared first on Oruvan.com.