national Archives - Oruvan.com

தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதற்கட்டமாக அடிப்படை உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் அனைத்து தேசிய அடையாள அட்டைதாரர்களையும் மீளப் பதிவு செய்து,

நவீன அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையானது நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதுடன்

விரல் அடையாளங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் வங்கிச் சேவைகள், நலன்புரித் திட்டங்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் தொலைவிலிருந்தே அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்.

The post தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம் appeared first on Oruvan.com.

சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார்.

அங்கு, வைத்திய ஆலோசனையின்படி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

The post சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான்
ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர்  அலி லாரிஜானி (Ali Larijani) வான்வழித் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் அவரது உயிரிழப்பை ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு சபை உத்தியோப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

லாரிஜானியுடன் அவரது மகனும் பாதுகாப்பு பணியாளர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹடாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை எதிரிகளை அழிக்கும் முயற்சியின் பகுதி என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.

இதேவேளைபசிஜ் துணை ராணுவத் தளபதி கோலம்ரெசா சோலிமானி (Gholamreza Soleimani) உட்பட பலர் வேறு தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரான் தலைமைக்கு எதிராகக் கருத்து தெரிவித்து, இந்தச் சம்பவத்தை வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) உத்தரவுக்கமைய, ஈரானின் மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்–இஸ்ரேல் மோதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஹார்மூஸ் நீரிணை பகுதி இன்னும் பதற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் –  ஈரான் appeared first on Oruvan.com.

போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர்
நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் பெறுபேறுகள் எட்டப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையான தேசிய மூலோபாயத் திட்டம் (SUD) குறித்த தெளிவுபடுத்தல் நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எதிர்நோக்கும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை முகாமைத்துவம் செய்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்காக இந்த தேசிய மூலோபாயத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

சான்றுகள் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல் ஆகிய சேவைகளைப் பலப்படுத்துவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

The post போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு  தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர் appeared first on Oruvan.com.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க

தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன்காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக கற்களை உடைக்கும் இயந்திரம் ஒரு வருடத்திற்கு முன்பு பெறப்பட்ட போதிலும்

இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

The post கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள்  செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம் appeared first on Oruvan.com.

விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான

குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து 03 போதைப்பொருள் பொதிகளை 36 வயதான இந்தியப் பிரஜை

நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது appeared first on Oruvan.com.

விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (13) காலை 09.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

பின்னர் இந்தியாவின் மதுரை நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்தார்.

இதன்போது குறித்த இந்திய பிரஜையின் பயணப்பை சந்தேகத்திற்கிடமானது என கண்டறிந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள், சோதனை மேற்கொண்டர்.

இதன்போது 8.542 கிலோகிராம்  நிறையுடைய குஷ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த 33 வயதான நபரே கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

The post விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது appeared first on Oruvan.com.

காற்றின் தரத்தை அறிந்துகொள்ள தேசிய இணையத்தளம்
காற்றின் தரத்தை அறிந்துகொள்வதற்காக தேசிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

காற்றின் தரம் தொடர்பில் ஒவ்வொரு பிரஜைகளும் அறிந்துகொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுவதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.

The post காற்றின் தரத்தை அறிந்துகொள்ள தேசிய இணையத்தளம் appeared first on Oruvan.com.

ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர். இதற்மைய, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியும் கிடைத்தது.

The post ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் appeared first on Oruvan.com.

வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைகள் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய காவற்படையினர் வொஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய செவ்வாய்க்கிழமை மாலை, தலைநகரைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்களிலும் நகர்ப்புற மையங்களிலும் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சுமார் 800 தேசிய காவல்படை உறுப்பினர்கள் மற்றும் 500 கூட்டாட்சி சட்ட அமலாக்க அதிகாரிகள நகரத்தில் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் சர்வாதிகாரம் என வொஷிங்டன் டி.சி. மேயர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வொஷிங்டனில் குற்றங்கள் கட்டுப்பாட்டை மீறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நியூயார்க் மற்றும் சிகாகோ நகரங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக அமையலாம் என கூறப்படுகிறது.

The post வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம் appeared first on Oruvan.com.