May Day Archives - Oruvan.com

அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்திய சம்பவம் – சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை
மே தினத்தன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு முக்கிய அரசியல் கட்சி பேரணிக்கு மக்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தியதற்கு பேருந்து சாரதிகளே முழுப் பொறுப்பு என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனை வலியுறுத்தினார்.

அரசியல் கட்சியுடன் இணைந்த இந்தக் குழு, அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்தி, உணவு மற்றும் பானங்களைப் பெறுவதற்காக சட்டவிரோதமாக அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தியிருந்தது, இது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

சம்பவம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஊடகப் பேச்சாளர், கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு நடந்து கொண்டாலும், அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்த முடியாது.

இதனை அறிந்தும் பேருந்துகளை நிறுத்தியதன் மூலம் ஓட்டுநர்கள் தவறு செய்துவிட்டதாகக் கூறினார். அந்த ஓட்டுநர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும்.

இதுபோன்ற சட்டவிரோத செயலில் சட்டத்தை அமல்படுத்தாததற்காக அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், காவல்துறை அதிகாரிகள் கடமை தவறியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

The post அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்திய சம்பவம் – சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை appeared first on Oruvan.com.

யாழில் இடம்பெற்ற கூட்டு மே தின பேரணி
தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த பேரணி நகர் பகுதி ஊடாக பயணித்து யாழ்.பொது நூலகம் முன்பாக நிறைவுபெற்றது.

பேரணியில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி! அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடணடியாக நீக்கு!

மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு! கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கு!

விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு! உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழில் இடம்பெற்ற கூட்டு மே தின பேரணி appeared first on Oruvan.com.

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி
மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் செயல்பட்டனர்.

அந்த மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுகிறது.

ஊழல் நிறைந்த, சிறப்புரிமை அரசியல் முறைமையால் பாதாலத்திற்குள் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை, மீட்டெடுத்து நிலையான ஆரம்பத்தை ஏற்படுத்துவதில் தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

இதன் தெளிவான அறிகுறிகள் இப்போது அனைவருக்கும் தெரிகின்றன.

அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத்திட்டத்திலேயே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை உட்பட விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி, உற்பத்தியாளர்கள், சிறிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் நன்மைகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் குடியுரிமை உரிமைகளை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

நாளாந்தம் மாறிவரும் உற்பத்தி அற்றலுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் உரிமைகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் அவசியத்தை நாங்கள் காண்கிறோம். 1948 மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத டிஜிட்டல் பிரவேச உரிமைகள், சுற்றுச்சூழல் உரிமைகள் உள்ளிட்ட மாறிவரும் அரசியல் கட்டமைப்புகளின் தோற்றம் மற்றும் உலக அமைதியை அடிப்படையாகக் கொண்ட புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கமைய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை இன்றைய சமூக கோருகிறது. இது குறித்த புரிதலுடன், தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சர்வதேச தொழிலாளர் தினமான இந்த சந்தர்ப்பத்தில், நாம் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

The post ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி appeared first on Oruvan.com.

மே தினத்தை முன்னிட்டு கொழும்பி விசேட போக்குவரத்து திட்டம்
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (1) விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, காலி முகத்திடல், கெசல்வத்த, ஆர்மர் வீதி, ஹைட் பார்க், தபால் அலுவலக தலைமையகம், நூலக கேட்போர் கூடம் வளாகம், விஹார மகா தேவி வெளிப்புற பூங்கா, கோஸ்கஸ் சந்தி உள்ளிட்ட பல பகுதிகளில் அரசியல் கூட்டங்கள் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் பாதுகாப்ப மற்றும் விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

The post மே தினத்தை முன்னிட்டு கொழும்பி விசேட போக்குவரத்து திட்டம் appeared first on Oruvan.com.