Katunayake Archives - Oruvan.com

110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே

அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு இனிப்புப் பண்டங்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் 5 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்தேகநபர்கள், அனுசரணையாளர் ஒருவரால் வழங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டுகளின் மூலம் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் சாதாரண உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும் என்பதுடன், பௌத்த தேரர்கள் குழுவொன்று போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமும் இதுவேயாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் எனவும், அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

The post 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது appeared first on Oruvan.com.

கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன.

உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு-கட்டுநாயக்க விமான சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ்னா 208 விமானத்தால் இயக்கப்படும் தொடக்க சேவை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பில் உள்ள சினமன் லேக்சைட் பியருக்கு பயணத்தை ஆரம்பித்திருந்தது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, சுற்றுலா துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சுனில் ஜெயரத்ன மற்றும் பிற பிரமுகர்கள் விமானத்தில் பயணித்தனர்.

இந்த விமானத்தை கேப்டன் இந்திகா பிரேமதாசவும், இணை விமானியாக இசுரு முனசிங்கவும் இயக்கினர்.

“இந்த முயற்சியின் மூலம், உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்துவதையும், பலாலி போன்ற பிராந்திய விமான நிலையங்களுக்கு செயல்பாடுகளை விரிவுபடுத்த அதிக நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இதுபோன்ற முயற்சிகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்பு 2011–2012 ஆம் ஆண்டில் நீர் சார்ந்த “ஜலதாரா” விமானங்களைத் தொடங்கியது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சேவை இடைநிறுத்தப்பட்டது.

புதிய நிர்வாகத்தின் கீழ் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் அத்தகைய சேவைகளை மீண்டும் தொடங்க உதவியுள்ளன, இது சுற்றுலாத் துறைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சினமன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே நுவரெலியா, மட்டக்களப்பு, சீகிரியா, கொக்கல, வீரவில, ஹட்டன் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட 10 இடங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.

பேரா ஏரிக்கு கூடுதலாக, கொழும்பு துறைமுக நகரத்தின் செயல்பாடுகளுக்காகவும், நகரில் இரண்டு புதிய ஹெலிபோர்ட்டுகளுக்கான திட்டங்களுக்காகவும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது, ​​ஆய்வுகளுக்குப் பின்னர் 22 உள்நாட்டு விமான நிலையங்கள் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் தொழில்களை மேலும் வலுப்படுத்த சுற்றுலா மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுடன் இணைந்து விமான இணைப்பை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்த அறிமுக நிகழ்வில் மூத்த அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஜான் கீல்ஸ் குழுமம் மற்றும் சின்னமன் ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம் appeared first on Oruvan.com.

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வேலைபளுமிக்க நேரங்களில், பயணிகளுக்கு தாமதமின்றி சேவையை வழங்குவதற்கும், நெரிசலை முகாமை செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் மற்றும் விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் வசதி கருதி இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 238 கையடக்க தொலைபேசிகள் டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று அதிகாலை துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 22 வயது தொழிலதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் appeared first on Oruvan.com.

கட்டுநாயக்க விமான நிலையம் – கோட்டை இடையே புதிய விரைவு பஸ் சேவை
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய விரைவு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 187 அதிசொகுசு சேவை கொழும்பு-கட்டுநாயக்க விரைவுப் பாதை வழியாக இயக்கப்படும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் வெளிப்புற பகுதியில் பயணிகள் பஸ்ஸில் ஏற முடியும்

பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த பஸ் சேவை 24 மணி நேரமும் இயங்கும் என

விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வசதியான சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் பயணிகளை ஊக்குவிக்கின்றனர்.

The post கட்டுநாயக்க விமான நிலையம் – கோட்டை இடையே புதிய விரைவு பஸ் சேவை appeared first on Oruvan.com.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 366 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,

இதேவேளை போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதற்காக ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று விமான நிலைய வருகைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான பெண் அங்கொடையைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்பதுடன் கைது செய்யப்பட்ட நபர் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 31 வயதுடையவர்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது appeared first on Oruvan.com.

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம் appeared first on Oruvan.com.

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நபர் கைது
கட்டுநாயக்க, அடியம்பலம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர்  தொழிலதிபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக துப்பாக்கிதாரி ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நபர் கைது appeared first on Oruvan.com.