justice Archives - Oruvan.com

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம்

மேற்கொள்கிறார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார்.

இந்த மீளாய்வுக் கூட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

The post வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம் appeared first on Oruvan.com.

சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை (25) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிற்கு முன்பாகவும்,கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா விற்கு முன்பு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகி செம்மணி வரை பேரணி இடம்பெற உள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து உலக நாடுகள் தமது கவனத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் வீதிக்கு இறங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நூற்றுக்கணக்கான உறவுகள் எலும்புக் கூடுகளாக மீட்க படுகின்றனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எமக்கு தெரியவில்லை.

எமது பிள்ளைகள்,உறவுகள் எங்கேயோ இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே எமக்கு சமூக செயற்பாட்டாளர்கள் ,தேசியத்தை நேசிக்கும் அனைவரும் எமக்கு குரல் கொடுக்க அணி திரண்டு வர வேண்டும்.நாங்கள் தனித்து போராடுவதாலே எமக்கு நீதி கிடைக்கவில்லை என்கிற தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் சர்வதேச நீதி கோரிய மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கவுள்ளது.

எனவே அனைத்து உறவுகளும் எமது சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்

The post சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு தொடர்பில் நீதியமைச்சு விசாரணை
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் முறைகேடு இருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் அளித்த முறைப்பாட்டிற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும்.

இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதற்கமைய ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக , “ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக” என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலகம்

கடந்த ஆறாம் திகதி (06.06.2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடளித்துள்ளது.

The post ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு தொடர்பில் நீதியமைச்சு விசாரணை appeared first on Oruvan.com.

லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு – நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் சிபாரிசுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்ன்ர் இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சட்டமா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இந்த வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினார்.

பிரேம் ஆனந்த உதலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணாயக்கார ஆகியோரே சட்ட மாஅதிபரின் கடிதத்திற்கு ஏற்ப செயற்படுத்த வேண்டியவர்கள்.

பிரேம் ஆனந்த உதலாகம இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன் திஸ்ஸ சிறி சுகதபால கல்கிசை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியாவார். பிரசன்ன நாணாயக்கார முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபராவார்.

லசந்த விக்ரமதுங்கவின் சாரதியாக பணியாற்றிய தேவ முல்லகே கருணாரத்னவை கடத்திச்சென்று அச்சுறுத்தியமை தொடர்பில் உதலாகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவர் மீதும் அவர் கொலை செய்யப்பட்டபோது அவரது வாகனத்தில் இருந்த குறிப்பு புத்தகத்தில் காணப்பட்ட குறிப்புகளை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பரிந்துரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த அரசாங்கம், இந்த விடயத்தை ஆராய்ந்து பரிந்துரையை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.

The post லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு – நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம் appeared first on Oruvan.com.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை – நீதியை நிலைநாட்டுமாறு எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன  இப்போதாவது நீதியை நிலைநாட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்விவகாரத்தை அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்

சிரச ஊடக வலையமைப்பின் மீதான கொடூரத் தாக்குதல் இடம்பெற்று 16 வருடங்கள் கடந்துள்ளன. லசந்த விக்கிரமதுங்க மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோர் நீதி மற்றும் நியாயத்திற்காக முன்நின்றார்கள்

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்றார்.

The post சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை –  நீதியை நிலைநாட்டுமாறு எதிர்கட்சித் தலைவர்  வலியுறுத்தல் appeared first on Oruvan.com.