Israel Archives - Oruvan.com

இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானம் இல்லை – லெபனான் அமைச்சர்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், நிலப்பரப்பை மீட்பதும் இலக்காக இருந்தால், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவமானம் ஏதுமில்லை என்று லெபனானின் வெளியுறவு அமைச்சர் யூசெஃப் ராகி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லெபனான் யாருக்கும் அடிபணியவில்லை, எந்தவொரு அச்சு அணியின் கையில் உள்ள துருப்புச்சீட்டும் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லெபனானின் பேச்சுவார்த்தைக்கான முடிவு, சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல சரணடைதல் அல்ல, மாறாக அது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவி என்று யூசெஃப் ராகி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேலுடன் கையாள்வதில் லெபனான் பலவீனமாக இருப்பதாகச் சித்தரிப்பவர்களை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

லெபனானை முற்றிலும் பலவீனமான நிலையில் சித்தரிப்பது ஒரு பெரும் தவறு, அதேபோல சரணடையும் நிலையில் இருப்பதாகச் சித்தரிப்பதும் தவறானதே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிஸ்புல்லா மீதும் ராகி தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும், அமைச்சர் லெபனானுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தெளிவான கோட்டை வகுத்து, லெபனானின் வழிமுறை இப்போது ஈரானிய வழிமுறையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது என்றும், லெபனானின் நலன்கள் இனி ஈரானிய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்திற்கோ அல்லது முட்டுக்கட்டைக்கோ பணயக்கைதிகளாக இல்லை என்றும் கூறினார்.

The post இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானம் இல்லை – லெபனான் அமைச்சர் appeared first on Oruvan.com.

உடனடி வெளியேற்ற உத்தரவு – லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
லெபனானின் தெற்கில் உள்ள டைர் (Tyre) நகரில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறி ஜஹ்ரானி நதிக்கு வடக்கே செல்லுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் முன்னதாக போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாக கூறியிருந்தாலும், லெபனானை உள்ளடக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

ஆனாலும், ஈரான் மற்றும் இந்த பேச்சுவார்த்தைக்கு உதவிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர்,

அந்த ஒப்பந்தம் லெபனானையும் உள்ளடக்கியது என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, லெபனானில் இஸ்ரேல், ஈரானுடன் தொடர்புடைய ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post உடனடி வெளியேற்ற உத்தரவு – லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

ரயில் பயணத்தை தவிர்க்குமாறு ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம், ஈரான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நேரப்படி இரவு 09 மணி வரை நாடு முழுவதும் ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெஹ்ரான் தலைமையிலான அரசு, பல வாரங்களாக நாட்டின் இணைய சேவைகளை கட்டுப்படுத்தி வருவதால்,

பொதுமக்களுக்கு இத்தகைய எச்சரிக்கைகள் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

எனினும், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பாரசீக மொழி செயற்கைக்கோள் ஊடகங்கள் மூலம் இந்த தகவல்கள் வெளிவருவதாகவும்

கூறப்படுகிறது

மத்திய கிழக்கில் கடந்த ஐந்து வாரங்களாக நீடித்து வரும் போரின் பின்னணியில், இன்று அதிகாலை இஸ்ரேல், ஈரான் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேலும் அதன் வளைகுடா அண்டை நாடுகளும் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரயில் பயணத்தை தவிர்க்குமாறு ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு – கனடா, பிரான்ஸ் கண்டனம்
தெற்கு லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடா அதற்கு வலுவான கண்டனம் தெரிவித்துள்ளது.

லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கனடா எச்சரித்துள்ளது.

இந்த மாதம் தொடங்கியதிலிருந்து லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 1,072 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல், தனது வட எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு லெபனானின் சுமார் 30 கி.மீ பரப்பளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மனிதாபிமான நெருக்கடி மோசமடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கனடா அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றி, பொதுமக்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, பிரான்ஸும் இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என கோரியுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், லிட்டானி நதி வரை பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமென தெரிவித்துள்ளார். அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் உடனடியாக திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தெற்கு லெபனானில் பாலங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தரைவழி படையெடுப்பிற்கான முன்னோட்டமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என லெபனான் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லெபனானிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலில் ஒரு பெண் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.

The post லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு – கனடா, பிரான்ஸ் கண்டனம் appeared first on Oruvan.com.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம்
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற போதே இவர்கள் காயமடைந்துள்ளதாகத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஈரான் அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது .

அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்க்க அவதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தெற்கு இஸ்ரேலிலுள்ள டிமோனா நகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குறித்த ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர்.

இந்த ஏவுகணை, இஸ்ரேலிய அணுசக்தி மையத்திலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post இஸ்ரேல் மீதான ஈரானின்  தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம் appeared first on Oruvan.com.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!
ஈரானின் மிக மூத்த தலைவரும் தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.

ஈரானிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான போர் மிகவும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஈரான் பாதுகாப்புத் துறையின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அலி லாரிஜானியை குறி வைத்து இஸ்ரேலிய இராணுவம் ஒரு அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.

எவ்வாயினும், இந்தத் தாக்குதலில் அலி லாரிஜானி வீரமரணம் அடைந்தாரா அல்லது காயமடைந்தாரா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

நேற்றிரவு நடந்த தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், அலி லாரிஜானியின் படுகொலையை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. மாறாக பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் கையெழுத்துச் செய்தி ஒன்றையே ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டன.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.

வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின்படி, நகரின் மையப் பகுதிகளில் இந்த வெடிப்புகள் உணரப்பட்டுள்ளன, ஆனால் எந்தெந்த குறிப்பிட்ட இடங்கள் குறிவைக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

The post இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் உயிரிழப்பு! appeared first on Oruvan.com.

லெபனான் , இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் – மத்தியஸ்தம் செய்ய பிரான்ஸ் அழைப்பு
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை நடத்த தயாரென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

பாரிஸ் (Paris) நகரில் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடியதாக கூறிய அவர் லெபனான் தலைவர்கள் இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாராக உள்ளனர் எனவும் அ தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல் தனது பாரியளவிலான தாக்குதல்களையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்றும், அதேவேளை ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பும் மோதலை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி நீடித்த தீர்வை காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,

லெபனானின் இறையாண்மையை பாதுகாக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் மக்ரோன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

The post லெபனான் , இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் – மத்தியஸ்தம் செய்ய பிரான்ஸ் அழைப்பு appeared first on Oruvan.com.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.

“இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது.

நேற்று இரவு மாத்திரம் 7 முறை எச்சரிக்கைச் சங்கொலிகள் ஒலித்தன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது.

இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று அறிவித்துள்ளன.

ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on Oruvan.com.

தெற்கு லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
தெற்கு லெபனான் பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லாஹ் குழுவினரின் நடவடிக்கைகள் காரணமாக இஸ்ரேல் அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே தெரிவித்துள்ளார்.

” வீடுகளிலிருந்து வெளியேறி, லிட்டானி நதிக்கு வடக்கே உடனடியாகச் செல்லுமாறு நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என

அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் ஆரம்பித்ததிலிருந்து 486 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post தெற்கு லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு appeared first on Oruvan.com.

போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி
உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால அரசியல் சதுரங்கம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம், ஏவுகணைத் தாக்குதல்கள் மறுபுறம் என நகரும் இந்த மோதலின் பின்னணி என்ன? ஏன் இந்தத் தாக்குதல்கள்? விரிவாகப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஈரானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு வியப்பாக இருக்கலாம். 1950-களில் ஈரானை ஆட்சி செய்த Mohammad Reza Shah Pahlavi, அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அந்தச் சமயத்தில் அமெரிக்காதான் ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தையே வழங்கியது. ஆனால், இந்த இணக்கமான பொற்காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இந்த நட்பு 1979-ல் தலைகீழாக மாறியது. ஷா மன்னர் திணித்த மேற்கத்திய கலாசாரம் மற்றும் ‘SAVAK’ எனும் ரகசியப் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக வெடித்த ஈரானியப் புரட்சியால், மன்னர் பதவியிறக்கப்பட்டு, அயதுல்லா கொமேனி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி அமைந்தது.

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தஞ்சமடைந்த ஷா மன்னரை மீண்டும் ஈரானிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரானிய மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு, 52 அதிகாரிகளை 444 நாட்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு ‘ஆறாத வடுவாக’ மாறி, இரு நாடுகளையும் பரம எதிரிகளாக்கியது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதே கடந்த 20 ஆண்டுகால உலக அரசியலின் மையப்புள்ளி. 2025-ஆம் ஆண்டு மே மாதம், ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகளை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், இப்போது மீண்டும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அழித்துவிட்டதாகச் சொன்ன கிடங்குகள் ஓராண்டுக்குள் மீண்டும் எப்படி வந்தன? அன்று அமெரிக்கா சொன்னது பொய்க்கணக்கா அல்லது ஈரானின் இரகசிய தொழில்நுட்பம் அவ்வளவு வலிமையானதா?

இங்கேதான் அரசியல் சதுரங்கத்தின் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம் அரங்கேறியது. 2026 பிப்ரவரி 26-ஆம் திகதி, ஓமான் தலைநகர் மஸ்கட்டில் வைத்து இரு நாடுகளுக்கும் இடையே ரகசிய சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை வெற்றி என அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள், பிப்ரவரி 28 அதிகாலையில் அமெரிக்கா ஈரானின் முக்கிய தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது. சமாதானம் பேசிக்கொண்டே ஈரானை ரகசியமாகச் சுற்றி வளைத்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஒரு திட்டமிட்ட ‘தந்திரோபாய ஏமாற்று வேலை‘ என்றே பார்க்கப்படுகிறது.

தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையிலும், அமெரிக்கா ஏன் இஸ்ரேலுக்காக ஈரானுடன் இத்தனை பெரிய மோதலில் ஈடுபட்டுள்ளது? இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன

பாதுகாப்பு ஒப்பந்தம்: மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஒரே ஜனநாயகக் கூட்டாளி இஸ்ரேல் மட்டுமே. அதன் பாதுகாப்பை உறுதி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரிக்க முடியாத அங்கம்.

ஈரானின் அச்சுறுத்தல்: ‘இஸ்ரேல் என்ற நாடு உலக வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்பது ஈரானின் நிலைப்பாடு. ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற ஈரானிய ஆதரவு அமைப்புகளை முடக்க ஈரானை வீழ்த்துவது அமெரிக்காவின் வியூகம்.

அமெரிக்க உள்நாட்டு அரசியல்: அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க ‘Jewish Lobby’ அமைப்புகளின் அழுத்தம், எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்க வைக்கிறது.

2018-ல் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் ஈரானின் முதுகெலும்பை உடைத்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி முடங்கியதால் விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்புவதே அமெரிக்காவின் நோக்கம்.

உண்மையில், ஈரானில் உள்ள ஒருசாரார் ஆட்சி மாற்றத்தை விரும்பினாலும், பெரும்பான்மையான மக்கள் அமெரிக்காவின் இந்தத் தலையீடு தங்களது இறையாண்மைக்கு எதிரானது எனக் கருதி வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். அமெரிக்கா எதிர்பார்த்த உள்நாட்டுப் போர் ஏற்படவில்லை, மாறாக மக்கள் தேசப்பற்றுடன் அமெரிக்காவின் வியூகங்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது பதுங்கு குழிகளுக்குச் செல்லாமல், தனது அலுவலகத்திலிருந்தே தாக்குதல்களை எதிர்கொண்டு அங்கேயே உயிர்நீத்தார். கமேனியின் மறைவுக்குப் பின் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா போட்ட கணக்கு பொய்த்துப் போனது. மாறாக, கமேனியின் மரணம் ஈரானிய மக்களிடையே ஒரு புதிய அக்னியை மூட்டியுள்ளது.

இலங்கைக்கு அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பல் ‘IRIS Dena‘ மீதான அமெரிக்கத் தாக்குதல், இந்தப் போரை இந்தியப் பெருங்கடலுக்கும் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 60 சதவீத எரிபொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கடல்சார் காப்பீட்டுத் தொகைகள் 500 சதவீதம் உயர்ந்துள்ளன.

அமெரிக்காவின் பலமும் ஈரானின் விடாப்பிடித் தனமும் இன்று மத்திய கிழக்கை ஒரு எரிமலையாக மாற்றியுள்ளது. 47 ஆண்டுகாலப் பகை இன்று ஒரு புதிய உலகப் போருக்கு வித்திடுமா அல்லது அமைதியில் முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தொகுப்பு : தர்மராஜா ரஸ்மிலா

The post போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி appeared first on Oruvan.com.