Iran-Israel war Archives - Oruvan.com

போர் களத்தில் நுழையும் தற்கொலை ட்ரோன்!
தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் , ஹிஸ்புல்லா முதன்முறையாக அதிநவீன மறைந்து தாக்கும் “தற்கொலை” ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியுள்ளது .

வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவத் தளங்கள் மற்றும் குடியிருப்புகளைக் குறிவைத்து கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட தொடர்ச்சியான பெரும் எதிர்த்தாக்குதல்களின் போது, ​​இந்த அதிநவீன வான்வழி ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .

இஸ்ரேலின் கான் செய்தி நிறுவனத்தின்படி , இந்தப் புதிய டிரோன், மின்காந்த அலைகளின் குறுக்கீடுகள் இருந்தபோதிலும் செயல்படக்கூடிய காட்சி வழிகாட்டு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது .

ரேடார் கருவிகளால் கண்டறியப்படாமல் பயணிக்கும் திறன், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறக்கும் திறன், ஐந்து கிலோகிராம் வரை வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளேயும் இயக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவை இதன் சில முக்கிய அம்சங்களாகும் .

திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கிய இந்தத் தாக்குதல்கள், கிரியாட் ஷ்மோனா, மெதுலா மற்றும் திபேரியாஸ் உள்ளிட்ட பகுதிகள் ட்ரோன்கள் மூலம் குறிவைத்துள்ளன.

மேலும், கோலானி படைப்பிரிவுக்குச் சொந்தமான பயிற்சி மையங்களும், டெஃபென் இராணுவத் தளமும் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளால் இந்த ட்ரோன்களில் ஒரு சிறிய எண்ணிக்கையை மட்டுமே இடைமறிக்க முடிந்ததாகவும், மீதமுள்ளவை அவற்றின் குறிவைத்த இலக்குகளில் தரையிறங்கியதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன .

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஷேக் நயீம் காசிம், லெபனானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முற்றிலுமாக நிறுத்தப்படும் வரை, பதிலடி கொடுக்கும் இந்த நோக்கம் கைவிடப்படாது என்று தெரிவித்தார் .

2024ஆம் ஆண்டு எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த அமைப்பு வலியுறுத்துகிறது .

தெற்கு லெபனானில் உள்ள டயர் மற்றும் நபாட்டியா நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து இராணுவ நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post போர் களத்தில் நுழையும் தற்கொலை ட்ரோன்! appeared first on Oruvan.com.

காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்
காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைக்காக சுமார் 60,000 பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களாக குறித்தப் விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 நாள் போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் பாதி பேரை விடுவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஹமாஸின் பதிலை இஸ்ரேல் ஆய்வு செய்து வரும் நிலையில் இந்த உறுதிப்படுத்தல் வந்துள்ளது.

பாலஸ்தீன பிரதேசத்தின் மையப்பகுதியில் உள்ள காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான புதிய தாக்குதலுக்கான திட்டங்களை இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெற்றன.

அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்தத் திட்டம் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை எகிப்து மற்றும் கத்தார் முன்வைத்துள்ளன.

ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200 பாலஸ்தீனியர்களையும், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறார்களையும் விடுவிப்பது, அதற்கு ஈடாக காசாவில் இருந்து உயிருடன் உள்ள பத்து பணயக்கைதிகளையும் இறந்த 18 பணயக்கைதிகளையும் விடுவிப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும் என்றார்.

இரண்டு எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த விவரங்களை உறுதிப்படுத்தின, மேலும் நூற்றுக்கணக்கான காசா கைதிகளை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் மொத்தம் 50 பணயக்கைதிகள் இருப்பதாகவும், அவர்களில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமைச்சரவை நிறுவிய கொள்கைகளின்படி, 50 பணயக்கைதிகளையும் விடுவிக்க இஸ்ரேல் கோருகிறது.

ஹமாஸின் இறுதி தீர்க்கமான கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம், எந்த பணயக்கைதியையும் விட்டுவிட மாட்டோம்” என்று இஸ்ரேலிய அரசியல் வட்டாரம் நேற்று தெரிவித்தது.

போர் நிறுத்த முன்மொழிவு குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹமாஸ் தலைமையிலான போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து 1,200 பேரைக் கொன்று 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தபோது போர் தொடங்கியது.

இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து 62,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலிய தாக்குதல் காசாவை ஒரு மனிதாபிமான நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதுடன், அதன் மக்களில் பெரும்பாலோரை இடம்பெயர செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் appeared first on Oruvan.com.

ஈரான் மீண்டும் தனது வான் பரப்பை மூடுகின்றது
ஈரான், இன்று (14.07.2025) காலை முதல், தனது மேற்கு மற்றும் தென்மேற்கு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை, இஸ்ரேலுடன் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விமான போக்குவரத்து பாதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Tehran FIR (Flight Information Region) பகுதியில் Commercial & Military Flight Restriction அமலுக்கு வந்தது. ஈரானின் இராணுவம் மற்றும் விமானப்படை உயர் கட்டுப்பாட்டு நிலைக்கு சென்றுள்ளது.

விமான போக்குவரத்து நிலை பல சர்வதேச விமானங்கள் ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து பாகிஸ்தான், கத்தார் மற்றும் துருக்கி வழியாக பயணிக்கின்றன. இதில் விமான நிலையங்களில் தாமதம் மற்றும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த வாரம், ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் மீண்டும் உளவுத்துறை தாக்குதல், சைபர் தாக்குதல்கள் மற்றும் கடல் ரீதியான பதில்கள் இடம்பெற்றுள்ளன.

ஜூலை 10 அன்று, ஈரானில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட படுகாயம் மற்றும் வெடிவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வான்பரப்பை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

The post ஈரான் மீண்டும் தனது வான் பரப்பை மூடுகின்றது appeared first on Oruvan.com.

டிரம்பை கொல்ல தயார் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை – இரத்த ஒப்பந்தத்தின் கொடூர நோக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளது ஈரான். அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மட்டும்தான் இதற்கு காரணமா, வேறு பின்னணி உள்ளதா?

டொனால்ட் டிரம்ப் உயிரை எடுக்க சிறிய ட்ரோன் போதும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின.

ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள், சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்கின.

இதில், அணு சக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டிரம்ப் கூறிவருகிறார். இதனை தொடர்ந்து இஸ்ரேல்- ஈரான் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இருந்தாலும் ஈரான் மக்களும் ஈரான் அதிகாரிகளும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்.

இந்த சூழலில் ஈரான் தலைவர் அயதுல்லா கமொனியின் பிரதான ஆலோசகர் முகமது-ஜாவத் லாரிஜானி (Mohammad-Javad Larijani), நாங்கள் நினைத்தால் ஒரு ட்ரோனை அனுப்பி அமெரிக்காவிலேயே டிரம்பை கொலை செய்து விடுவோம் என கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி டிரம்ப் அவரது புளோரிடா இல்லமான மார்-எ-லாகோவிற்கு அடிக்கடி செல்வது எங்களுக்கு தெரியும் என்றும், அங்கு அவர் சூரிய குளியலில் ஈடுபடும் போது, ஒரு சிறிய ட்ரோனை வைத்து எங்களால் அவரை கொல்ல முடியும்” என லாரிஜானி (Larijani) கூறியிருக்கிறார்.

இதனை அவர் சிரித்துக்கொண்டே கூறினாலும், டிரம்ப் அதனை கடுமையாக தான் எடுத்துக்கொள்வார். டிரம்ப்-பை கொல்ல வேண்டும் என கூறுவதற்கு லாரிஜானி (Larijani) முன் வைக்கும் முதல் காரணம், காசிம் சுலைமானி (Qasem Soleimani).

இந்த காசிம் சுலைமானி ஈரானின் IRGC எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவராக இருந்தார். ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். 2020-ல் அமெரிக்கா ஜனாதிபதி இருந்த டிரம்ப் காசிம் சுலைமானயை கொலை செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றிருந்த போது அமெரிக்க இராணுவம் நடத்திய வான்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

சுலைமானியின் படுகொலையை ஈரான், ஒரு அரசு பயங்கரவாதச் செயலாகவும், இறையாண்மையை மீறுவதாகவும் கருதியது.

அப்போதிலிருந்து, ஈரானிய அதிகாரிகளும் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களும் அவரது மரணத்திற்குப் பழிவாங்க திட்டம் தீட்டி வருகின்றன. டிரம்ப் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரும் கொல்லப்படுவார்கள் என பகிரங்கமாக ஈரான் கூறி வருகிறது.

டிரம்ப்-பை பழிவாங்க ஈரான் கூறும் மற்றொரு காரணம், இஸ்ரேலுடன் இணைந்துக் கொண்டு ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஈரான் போரில் தேவையின்றி அமெரிக்கா மூக்கை நுழைத்தாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், இறையாண்மைக்கு எதிரானது என அந்நாடு கூறுகிறது.

ஈரானை தாக்கியதற்கு அமெரிக்கா சரி செய்யவே முடியாத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஏற்கெனவே, ஈரான் உச்சபட்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, உச்சபட்ச தலைவர் அலி காமெனிக்கு எதிராக டிரம்ப் விடுத்த மிரட்டல்களும் மற்றொரு காரணம். காமெனியை அச்சுறுத்துபவர்கள் “கடவுளின் எதிரிகள்” என்று மதகுருமார்கள் மத ஆணைகள் பிறப்பித்துள்ளனர்.

குறிப்பாக டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் என அறிவித்தனர். லாரிஜானி வேடிக்கையாக கூறியது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்றது தான்.

தனிநபர்களை தாக்கி கொலை செய்ய ஈரானுக்கு துணிச்சல் உள்ளது என்பதை காட்டவும் மற்றொன்று, ஈரானின் டிரோன் தொழில்நுட்பத்தை பறைசாற்றிக் கொள்ளவும் இது அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஈரானின் ஷாஹெட் (Shahed) டிரோன்களை கொண்டு தான் ரஷ்யா உக்ரைனை தாக்கி வருகிறது. துல்லிய தாக்குதல்கள் மூலம், அவற்றின் செயல்திறனை நிரூபித்து வருகின்றன.

எனவே ஈரான் போர் தளவாடங்கள் யாருக்கும் சளைத்தவை அல்ல என கூறாமல் கூறுகிறார் லாரிஜானி (Larijani).

ஷாஹெட் (Shahed) டிரோன்கள் ஒரு வழி தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்டன. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, இலக்கை நோக்கி பறந்து, தாக்குவதற்கு ஏதுவாக GPS கருவியுடன் உருவாக்கப்பட்டவை.

குறைந்த செலவே பிடிக்கும் ஷாஹெட் (Shahed) டிரோன்களை லட்சக்கணக்கில் தயாரித்து வைத்துள்ள ஈரான். இத்தகைய அச்சுறுத்தல்கள் ஈரானில் உள்நாட்டு நோக்கத்திற்கும் உதவுகின்றன.

இஸ்ரேல் உடனான போரின் போது ஏற்பட்ட ராணுவ பின்னடைவுகளுக்கு ஈடுக்கட்டவும் இத்தகைய கொலை மிரட்டல்கள் பயன்படுகின்றன. ஈரானின் மிரட்டல்கள் பெரும்பாலும் கடுமையானதாக இருந்தாலும், பரந்த புவிசார் அரசியல் சூழலில் இது ஒரு வகையான சமிக்ஞையாகவும் இருக்கலாம்.

மிரட்டல்கள் விடுப்பதன் மூலம், அமெரிக்க அல்லது இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையைத் தடுப்பதையும் எதிர்கால பேச்சுவார்த்தைகளில், தனது அணுசக்தி திட்டம் அல்லது தடைகள் தொடர்பானவற்றில், ஆதாயத்தைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பிட்ட சம்பவங்களுக்கு அப்பால், ஈரானிய புரட்சிகர சித்தாந்தத்தில் அடிப்படை அமெரிக்க எதிர்ப்பு உணர்வு ஊடுருவியுள்ளது. அமெரிக்காவை ஈரான் பெரும்பாலும் “பெரிய சாத்தான்” என்று தான் குறிப்பிடப்படுகிறது.

1979-ஆம் ஆண்டு முதல் ஈரானை யார் ஆட்சி செய்தாலும், அமெரிக்காவும் ஈரானும் கீரியும் பாம்பும் போல தான் பகைமையை பாராட்டி வருகின்றன.

ஈரானின் கொலை மிரட்டல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் இதனை கொலை மிரட்டலாக கருதுகிறீர்களா? சூரிய குளியலில் எப்போது கடைசியாக ஈடுபட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப், “ரொம்ப நாள் ஆகிவிட்டது. 7 வயதில் சூரிய குளியல் போட்ட ஞாபகம் உள்ளது என கூறியுள்ளார். சூரிய குளியலில் ஆர்வம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் விடுத்திருப்பது ஒரு அச்சுறுத்தல் என நினைக்கிறேன் என்றும் டிரம்ப் மிக சாதரணமாக எதிர்வினையாற்றியுள்ளார். இஸ்ரேல்- ஈரான் போருக்கு பின்னர், ஈரான் மக்கள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

டிரம்பை கொலை செய்ய வேண்டும் என ஈரானில் ஆன்லைன் பரப்புரையே நடைபெறுகிறது. பார்சி மொழியில் “இரத்த ஒப்பந்தம்” என பொருள்படும் பரப்புரையை இணையத்தில் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கொல்வது தான் இந்த இரத்த ஒப்பந்தத்தின் நோக்கம். இதற்காக கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதியும் திரட்டப்பட்டு வருகிறது. 800 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை யார் கொலை செய்கிறார்களோ அவருக்கு வழங்கப்படும் என பரப்புரையை தொடங்கியவர்கள் கூறுகின்றனர்.

தற்போது தான் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் டிரம்பை கொலை செய்வோம் என ஈரான் மூத்த அதிகாரி தெரிவித்திருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

News 18 – தமிழ்

The post டிரம்பை கொல்ல தயார் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை  – இரத்த ஒப்பந்தத்தின் கொடூர நோக்கம் appeared first on Oruvan.com.

தேசியத் தலைமை மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம்
ஈரானின் தலைமை மற்றும் மத அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலும் அல்லது தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம் என்று ஈரானின் மூத்த மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மத ஆணைகளில் கிராண்ட் அயதுல்லா நாசர் ஷிராசி மற்றும் கிராண்ட் அயதுல்லா ஹொசைன் நூரி ஹமதானி இதைத் தெளிவுபடுத்தினர்.

“இஸ்லாமிய உம்மாவிற்கும் அதன் இறையாண்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தலைமை மற்றும் மத அதிகாரத்தை அச்சுறுத்தும் அல்லது தாக்கும் எந்தவொரு தனிநபரோ அல்லது அரசும் மோதலின் தீர்ப்புக்கு உட்பட்டது” என்று அயதுல்லா ஷிராசி கூறினார்.

முஸ்லிம்களோ அல்லது இஸ்லாமிய அரசாங்கங்களோ இதுபோன்ற செயல்களை ஆதரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த எதிரிகளை தங்கள் வார்த்தைகள் மற்றும் தவறுகளுக்கு மனந்திரும்ப அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஷிராசி கூறினார்.

ஷியா தலைமையின் நிலைப்பாட்டையும், இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயத்துல்லா செய்யித் அலி கொமேனியின் ஆளுமையையும் அவமதிப்பது இஸ்லாத்தின் கொள்கைகளையே அவமதிப்பதாகக் கருதப்படும் என்று ஆயத்துல்லா நூரி ஹமதானி கூறினார்.

“ஒரு தனிநபராகவோ அல்லது ஒரு தேசமாகவோ அவருக்கும் ஷியா அதிகாரத்திற்கும் எதிரான எந்தவொரு தாக்குதலோ அல்லது அச்சுறுத்தலோ விரோதச் செயலாகக் கருதப்படுகிறது.

இந்தக் குற்றத்திற்கு உதவுபவர்கள் எவரும் சமமாகப் பொறுப்பேற்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

ஜூன் 13 அன்று, இஸ்ரேலிய ஆட்சி இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக ஒருதலைப்பட்ச தாக்குதலைத் தொடங்கியது.

இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் மூத்த ஈரானிய இராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளைப் படுகொலை செய்தது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சாதாரண பொதுமக்களைக் கொன்றது.

இஸ்ரேலிய அரசாங்கமும் அமெரிக்க ஜனாதிபதியும் ஆயத்துல்லா கமேனிக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். தனது வழக்கமான கொச்சையான மொழியில், டிரம்ப் வெள்ளிக்கிழமை ஆயத்துல்லா கமேனியை அவமதித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானிய ஆயுதப்படைகள் இஸ்ரேலையும் அதன் இராணுவ-தொழில்துறை உள்கட்டமைப்பையும் தாக்கின. அவர்கள் நியமிக்கப்பட்ட இலக்குகளைத் திறம்பட தாக்கும் பல புதிய தலைமுறை ஏவுகணைகளை ஏவினர்.

The post தேசியத் தலைமை மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம் appeared first on Oruvan.com.

கசிந்த உளவுத்துறை அறிக்கையால் அமெரிக்க ஜனாதிபதி அதிர்ச்சி
உலகம் தற்போது விவாதித்து வரும் முக்கிய தலைப்புகளில் ஒன்று, அமெரிக்காவின் பாரிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்ததா இல்லையா என்பதுதான்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கவில்லை என்பதை பென்டகனின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் ரகசிய உளவுத்துறை அறிக்கை வெளிப்படுத்தியதை அடுத்த இந்த விவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை பல மாதங்கள் ஒத்தி வைத்துள்ளதாக இந்த புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலில் வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை மறுத்திருந்தது. தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் “முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக” அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உளவுத்துறை அறிக்கை வெளியானது குறித்து அமெரிக்க ஊடகங்களையும் அவற்றின் அறிக்கையையும் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றான இந்தத் தாக்குதலை அழிக்கும் முயற்சியில் தோல்வியுற்ற ஊடகங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்த ரகசிய உளவுத்துறை அறிக்கையை வெளியிடுவது “தேசத்துரோகச் செயல்” என்று அமெரிக்க அதிபரின் மத்திய கிழக்கிற்கான சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் கூறியுள்ளார்.

“இது மிகைப்படுத்தப்பட்டதாகும், இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கவில்லை என்பதை வெளிப்படுத்திய உளவுத்துறை அறிக்கையையும் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

இந்த உளவுத்துறை அறிக்கை ஜனாதிபதி டிரம்பை இழிவுபடுத்தும் ஒரு தெளிவான முயற்சி என்று வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

பென்டகனின் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் தயாரித்த ஒரு உளவுத்துறை அறிக்கை, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை பல மாதங்கள் மட்டுமே ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தாக்குதலின் ஆரம்ப சேத மதிப்பீடு குறித்த தகவல்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை, சர்வதேச ஊடகங்களால் வெளியிடப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த வார இறுதியில் அமெரிக்கா மூன்று ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து ஒரு பாரிய தாக்குதலை நடத்தியது. 200 அடி நிலத்தடியில் கான்கிரீட்டை ஊடுருவக்கூடிய “பதுங்கு குழியை அழிக்கும்” குண்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இருப்பினும், ஈரான் செறிவூட்டிய யுரேனியம் கையிருப்பின் ஒரு பகுதி தாக்குதல்களுக்கு முன்பே அகற்றப்பட்டதாக ஆதாரங்கள் உறுதிப்படுத்துவதாக உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

The post கசிந்த உளவுத்துறை அறிக்கையால் அமெரிக்க ஜனாதிபதி அதிர்ச்சி appeared first on Oruvan.com.

இஸ்ரேலுக்கு மீள திரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச விமானங்கள் இன்று (25) வழக்கம்போல் தொடங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலும் ஈரானும் தற்போதைய போர்நிறுத்தத்தைப் பேணுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நேற்று (24) இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட மூன்று இலங்கையர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் வழியாக கொழும்பு வந்தடைந்ததாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் உள்ளவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் விசாரிக்குமாறு தூதரகம் கேட்டுக்கொள்கிறது.

ஒரே நேரத்தில் பல பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விமான டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிறிது நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில். டெல் அவிவ் நகருக்கு விமானத்தில் செல்ல விரும்புவோர் அல்லது இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் நிலைமை குறித்து மேலும் தகவலுக்கு தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், போர் நிறுத்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தெஹ்ரானில் உள்ள ஒரு ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, மேலும் எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் கூறியதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் இஸ்ரேல் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

The post இஸ்ரேலுக்கு மீள திரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கையர்கள் – தூதுவர்கள் தகவல்
ஈரான், இஸ்ரேல் மற்றும் அதன் அண்மித்துள்ள நாடுகளில் உள்ள இலங்கையர்களின் தற்போதைய நிலை குறித்து வெளிவிவகார அமைச்சகம் புதுப்பித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பிராந்திய பதட்டங்கள் தொடர்ந்து நிலவும் நிலையில், இங்குள்ள இலங்கையர்களை வெளியேற்றும் மற்றும் திருப்பி அனுப்பும் முயற்சிகள் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈரானில், தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம், 41 இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்களில் ஒன்பது பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

ஜூன் 24 அன்று, துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மூன்று நபர்கள் மஷாத் விமான நிலையத்திலிருந்து புது டில்லிக்கு புறப்பட்டனர்.

மேலும், ஒரு மாணவர் மற்றும் ஒரு தூதரக அதிகாரி உட்பட மேலும் இரண்டு நபர்கள் இன்று துருக்கி எல்லையைக் கடக்க உள்ளனர். மேலும் மூன்று பேர் வரும் நாட்களில் ஈரானை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில், டெல் அவிவில் உள்ள தூதர் நிமல் பண்டாரா கூறுகையில், விடுமுறையில் இலங்கைக்குச் சென்ற 219 இலங்கையர்கள் திரும்பி வரத் தயாராகி வருவதாகக் கூறினார்.

சமீபத்திய ஈரான்-இஸ்ரேல் மோதலால் திரும்பி வர முடியாத வெளிநாட்டினருக்கான மறு நுழைவு விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் (PIBA) நீட்டித்துள்ளது என்றார்.

இதற்கிடையில், ஜூன் 25 அன்று அம்மானில் இருந்து புது டில்லிக்கு புறப்பட்ட இந்திய அரசாங்க சிறப்பு விமானத்தில் பயணிக்க 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் 20 நபர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர், ஐந்து பேர் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளனர்.

எகிப்தில், கெய்ரோவில் உள்ள தூதர் சிசிரா செனவிரத்னே, மூன்று இலங்கையர்கள் நேற்று எல்லைக் கடப்பு வழியாக எகிப்துக்குள் நுழைந்ததாகவும், இன்று பிற்பகுதியில் இலங்கைக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மூன்று நபர்கள் எல்லையைக் கடக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் எகிப்திய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட 17 கூடுதல் இலங்கையர்களின் பட்டியல் மதிப்பாய்வில் உள்ளது எனவும் விரைவில் அனுமதி கிடைக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம், கட்டார் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற இராஜதந்திர பணிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தூதர் சித்தாரா கான் தெரிவித்தார்.

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது, மேலும் அவசர தொடர்பு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

The post மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கையர்கள் – தூதுவர்கள் தகவல் appeared first on Oruvan.com.

ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு கெஞ்சிய அமெரிக்கா…. ஒரே இரவில் நடந்த மாற்றம்
இஸ்ரேல் உடனான போரின் போது உடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி தங்களிடம் கெஞ்சியதாக ஈரான் தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் 12வது நாளை அடைந்திருந்த நிலையில், இன்று இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் வெளியிட்டிருந்தன.

இதன்படி, இன்று முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அபாயம் உருவாகுவதை உணர்ந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர் நிறுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தாக கூறப்படுகின்றது.

இருநாடுகளுக்கும் இடையிலான போரில் கடந்த ஞாயிற்றுக்கிமை அமெரிக்கா ஈரான் மீது நேரடி தாக்குதலை மேற்கொண்டது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது.

இதானால் ஆத்திரமடைந்த ஈரான், கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து நேற்று இரவு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயே, அமெரிக்கா உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கட்டார் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே ஈரான் அமெரிக்காவிற்கு தாக்குதல் நடத்துவது குறித்து அறிவித்திருந்தாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்ட டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவென்றை நியமித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்ட குழு, போரை நிறுத்த கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. போர் நிறுத்தத்தை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தரப்பு கிட்டத்தட்ட கெஞ்சியதாக கூறப்படுகிறது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சவாலாக இருந்ததாகவும், இதனால் பல மத்திய கிழக்கு நாடுகள் ஈரானை சமாதானம் செய்ய முன்வந்ததாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், கட்டார் பிரதமரின் அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஈரானை சமாதானம் செய்ய தீவிரமாக முயன்றதாக கூறப்படுகின்றது.

வான்ஸை தவிர, வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கட்டார் பிரதமருடன் பேசிய பிறகு, ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

The post ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு கெஞ்சிய அமெரிக்கா…. ஒரே இரவில் நடந்த மாற்றம் appeared first on Oruvan.com.

போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேல் போர் நிறுத்த திட்டத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான் appeared first on Oruvan.com.