IGP Archives - Oruvan.com

பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு – விரைவில் அதிவிசேட வர்த்தமானி
இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரத்தை பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கும் அதிவிசேட வர்த்தமானியை அடுத்த வாரத்திற்குள் வௌியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம், பதவியுயர்வு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் தற்போது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு – விரைவில் அதிவிசேட வர்த்தமானி appeared first on Oruvan.com.

ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ்மா அதிபர்
புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர் ஆவார். இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ்மா அதிபர் appeared first on Oruvan.com.

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61E(b) பிரிவின்படி இந்தப் புதிய நியமனத்திற்கு அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டது.

இதன்படி, இலங்கையில் 37வது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை பொலிஸ் துறையின் மூன்று நிலைகளிலும், அதாவது பொலிஸ் கான்ஸ்டபிள், உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளிலும் பணியாற்றியவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.

The post புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் appeared first on Oruvan.com.

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய – அரசியலமைப்பு சபை ஒப்புதல்
புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு சபை கூடியது.

இதன்போது புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரான பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

The post புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய – அரசியலமைப்பு சபை ஒப்புதல் appeared first on Oruvan.com.

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் – அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகின்றது
அரசியலமைப்பு சபை இன்று (12) நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.

இன்று பிற்பகல் 02.00 மணிக்கு அரசியலமைப்பு சபை கூடவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது புதிய பொலிஸ்மா அதிபரை குறித்து அரசியலமைப்பு சபை முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரான பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரியந்த வீரசூரிய அரசியலமைப்பு சபையால் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் – அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகின்றது appeared first on Oruvan.com.

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் தேசபந்து
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் அவர் இன்று ஆஜராக உள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதிபத்மன் சூரசேன தலைமையிலான குழு இன்று பிற்பகல் 02 மணிக்கு கூடுவுள்ளது.

தேசபந்து, ஏற்கனவே மே 19 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்த குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டமா அதிபர் துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் தொடர்பான சத்தியக் கடிதங்களும் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் தேசபந்து appeared first on Oruvan.com.

புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு
யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நீதிமன்ற உத்தரவிற்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையால் அதன் பெறுமதி மதிப்பிடப்பட்டதன் பின்னர் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

தங்க ஆபரணங்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டால் அவற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க தயார் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

The post புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு appeared first on Oruvan.com.

தேஷபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – சபாநாயகரின் விசேட அறிவிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கடந்த மாதம் 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

இந்த பிரேரணையில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். பதவியை துஷ்பிரயோகம் செய்தமை, கடமையை சரியாக செய்ய தவறியமை, பதவியில் செயற்படும்போது மிகவும் மோசமான முறையில் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

நாளை வியாழக்கிழமை வரை (03.04.25 ) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேஷபந்து கண்டி தும்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 08 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பெப்ரவரி மாதம்  27 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேஷபந்து தலைமறைவாகியிருந்தார்.

The post தேஷபந்துவை பதவி நீக்கும் பிரேரணை  – சபாநாயகரின் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

பொலிஸ்மா அதிபரை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், நீதிமன்றத்தை தவிர்க்கும் பிடியாணைதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல நேற்று (09) தெரிவித்தார்.

சட்டத்தை செயல்படுத்துவதற்கு தரவரிசை ஒரு பொருட்டல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தேசபந்து தென்னகோன் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பொலிஸ்மா அதிபரை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு appeared first on Oruvan.com.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்
மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்று அறியப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று இரவு (12.02.2025) அவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவலில் எடுத்துள்ளதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதில் காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) தலைமையிலான உயர்மட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேகநபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குருவிட்ட பகுதியில் ஐந்து மில்லியன் ரூபா பணம் பறித்தமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரிஹானவில் கையெறி குண்டுகளை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பிரியந்த தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, ​​சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் சென்று இந்தியாவில் குடியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பதில் காவல் துறைத் தலைவரின் நேரடித் தலையீட்டைத் தொடர்ந்து, சந்தேகநபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் appeared first on Oruvan.com.