Government's Archives - Oruvan.com

அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு
அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.

மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சில உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளதாக பிரதிஅமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்ப நேரிடும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேலும் தெரிவித்தார்.

The post அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாகிஸ்தான் அரசின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.

பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

The post பாகிஸ்தான் அரசின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம் appeared first on Oruvan.com.

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (04.01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அதன் பலன்களை மக்களால் பெறமுடியாமல் போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையை மாற்றி மீண்டும் நாட்டு மக்களின் போசாக்கு தேவைகளை வழங்கும் செயலூக்கமான நிறுவனமாக திரிபோஷாவை மாற்ற தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

திரிபோஷா நிறுவனத்தை கலைப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு, முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான மேம்பட்ட நிறுவனமாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

The post திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் appeared first on Oruvan.com.

பேதங்கள் இன்றி பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு
எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 22 பில்லியன் ரூபா சீன நிதியுதவியின் கீழ் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்தின் முதற்கட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு மொரட்டுவை, பெடரிவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.

இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன நிதியுதவியின் கீழ் 1996 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் மொரட்டுவை, பெடரிவத்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கென 575 வீடுகள் மற்றும் கொட்டாவ பகுதியில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

இந்த வீடமைப்பு திட்டத்தினை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்ததை முன்னிட்டு நாம் சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றோம். வீடு என்பது குடும்பத்திற்கு, நபருக்கு அரவணைப்பை வழங்கும் ஒரு இடமாகும்.

பிரஜை என்ற அடிப்படையில் கிடைக்க வேண்டிய நல்லதொரு வாழ்க்கைக்கும், பண்புமிக்க வாழ்க்கைக்கும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஓர் இடமாகும். வீடு மாத்திரமல்ல, பலம்மிக்க குடும்பம், சமூகத்தை கட்டியெழுப்புவதும் அரசிற்கு அவசியமானது.

விசேடமாக பெண்கள் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களின் தேவைகளுக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது.

புறநகர் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறுவோர் மிகவும் நெருக்கடி நிறைந்த வாழ்க்கையை வாழுகின்றனர். அதேபோல் வீடு ஒன்று இல்லாததால் சிலர் மிகவும் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இன, மத, பாலின சமூகத்தன்மை உள்ளிட்ட எந்தவொரு பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியான, பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்கென சீன அரசாங்கத்திடமிருந்து எமக்கு கிடைக்கப்பெறும் இந்த நிதியுதவியைப் போன்று இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் ஒத்துழைப்புக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பீ.சரத், இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhen Hong, சீன தூதுவர் அலுவலகத்தின் பொருளாதார மற்றும் வணிக ஆலோசகர் டென்க் யான் டி, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post பேதங்கள் இன்றி பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு appeared first on Oruvan.com.

தாமதமாகும் அரசாங்கத்தின் அரிசி இறக்குமதி
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை, இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பதை தற்போது கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்டளவு அரிசித் தொகை தற்போது நாட்டிற்கு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் அரிசி எப்போது நாட்டிற்கு கிடைக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இது வர்த்தக அமைச்சரிடம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி என நான் நினைக்கிறேன். எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது.” என அமைச்சர் கூறினார்.

எனினும், நீங்கள் விவசாயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர். அந்தக் கேள்வியில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் தேவையான அளவு அரிசி இல்லை. அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிட்டாலும் அந்த விலைக்கு அரிசி வாங்க இடமில்லை. என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர்,

“இறுதியில் இந்த அரிசிப் பிரச்சினையில் ஜனாதிபதி வலுவாகத் தலையிட்டார். தற்போது அரிசி சந்தைக்கு வருகிறது. நாட்டுக்கு ஓரளவு அரிசி வந்துள்ளது. முன்பு போல் சிக்கலான சூழல் இல்லை.” என தெரிவித்தார்.

The post தாமதமாகும் அரசாங்கத்தின் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.