Fund Archives - Oruvan.com

ஜனாதிபதி நிதியம் டிஜிட்டல் மயமாகிறது – மருத்துவ விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு
ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்கள் ஊடாக பரவலாக்கி டிஜிட்டல் மயப்படுத்தியதன் விளைவாக, ஓராண்டு காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59% ஆல் அதிகரித்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது 2024 இல் 3,313 ஆகவும், 2023 இல் 3,456 ஆகவும் காணப்பட்டது.

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டை விட 2025 இல் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 70% க்கும் அதிகமானோருக்கு தற்போது மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதில் வடக்கு மாகாணத்தில் 253%, கிழக்கு மாகாணத்தில் 135%, மத்திய மாகாணத்தில் 116% மற்றும் ஊவா மாகாணத்தில் 108% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீவு முழுவதிலுமுள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் விண்ணப்பங்களை ஏற்கும் பணி 2025 பெப்ரவரி 07 முதல் ஆரம்பமானது.

இந்தத் திட்டம் வெற்றியடைந்துள்ளதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளும் பரவலாக்கப்பட்டுள்ளன. இதன்படி, வறுமை ஒழிப்பு மானியங்கள், கல்வி புலமைப்பரிசில்கள், விசேட தேவையுடையோருக்கான உதவிகள், காட்டு யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணங்கள் மற்றும் இடர் கால உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இப்போது இணைய வழியாக (Online) அல்லது எந்தவொரு பிரதேச செயலகம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் 47 வருடங்களாக கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தற்போது நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலகுவாகக் கிடைக்கப்பெறுகின்றன.

The post ஜனாதிபதி நிதியம் டிஜிட்டல் மயமாகிறது – மருத்துவ விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு appeared first on Oruvan.com.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டு வந்துள்ளோம் – பிரதமர்
கடந்த ஆட்சியின் போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்த நிலையில்

இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டு வர முடிந்ததாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்து பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்

போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது, மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம், அறிவு நிறைந்த சிறந்த எதிர்கால மனித வளத்தை உருவாக்க பங்களிக்கும்.

ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்

இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும்” என்றார்.

இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.

The post துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டு வந்துள்ளோம் – பிரதமர் appeared first on Oruvan.com.

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்திற் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர்.

இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The post உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு appeared first on Oruvan.com.

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் நாட்டிற்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டிற்கு வருகைத் தரவுள்ளார்.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் பணிபுரியும் துணை நிர்வாக இயக்குநர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறை என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் 16 ஆம் திகதி நிதி அமைச்சகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது : கடன் மற்றும் ஆளுகை” எனும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகவும் அவர் கலந்து கொள்கிறார்.

இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களை சந்தித்து IMF இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் நாட்டிற்கு வருகை appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு- CID விசாரணை ஆரம்பம்
ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கையை சமர்ப்பித்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களுள் பிரபல அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் உள்ளடங்குவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு-  CID விசாரணை ஆரம்பம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன – தயாசிறி கேள்வி
2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்த அரசியல்வாதிகளில் பெயர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட எவரும் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்து நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.

2019 ஆம் ஆண்டு இருதய சத்திரசிகிச்சைக்காக சுமார் 4 லட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டேன். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிதியுதவிக்கு அனுமதியளித்திருந்தார்.

ஜனாதிபதி நிதியத்தினூடாக முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஏனைய செலவிற்கு தனிப்பட்ட நிதியையே பயன்படுத்தினேன்.

ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்தி பல்வேறு அரசியல்வாதிகளுக்கு எதிரான தவறான பிரசாரங்கள் தடுக்கப்பட வேண்டும். தவறான கூற்றுக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெறுவது தவறு என்றால், நிதி தொடர்பான விதிமுறைகளில் தேவையான திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ காரணங்களுக்காக பணம் கோரப்பட்டுள்ளதாக கூறிய அவர் பாரியளவான தொகைகள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட என்றும் கேள்வி எழுப்பினார்.

The post ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன – தயாசிறி கேள்வி appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறவில்லை – முன்னாள் எம்.பி
ஜனாதிபதி நிதியத்தின் நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில், வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்ததாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அதன்பின்னனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கண், காது மற்றும் வயிற்றில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவருக்கு செவிப்புல வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தனது சொந்த சொத்துக்களில் இருந்து 4.5 மில்லியன் ரூபாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிகிச்சைகளுக்காக செலவிட்டதாக மேலும் தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300,000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் உரிய முறையில் சரிபார்க்காமல் அமைச்சர் தரவுகளை முன்வைத்திருக்கிறார்.

தேசிய சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது பாரிய குற்றம் மற்றும் மோசடி செயல், இதனால் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் வெளியிடப்படும் அறிக்கைகள் குறித்து அமைச்சர் கவனமாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பெயர் வெளியிடப்பட்ட பின்னரே பணம் ஒதுக்கப்பட்டமை தெரியவந்தது. ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைச்சர் கூறுவது போன்று ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றதாக கூறப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும்” என்றார்.

The post ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறவில்லை –  முன்னாள்  எம்.பி appeared first on Oruvan.com.