epdp Archives - Oruvan.com

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!
மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அவசர கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவை விசாரிக்கப்படுமாயின் நாமும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறிகையில்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் கடந்த காலங்களில் இந்த நாட்டிலே இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரும் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவை பேசுபொருளாக இருப்பதனை தவிர்க்கும் நோக்கிலும்,

கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டும் என்று தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சொல்லி வருகின்ற நிலையில், கடந்த காலங்களில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மீண்டும் பேசுபொருளாக்கி எம்மை அரசியல் களத்தில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்று உள்ளூர விரும்புகின்ற பிரகிருதிகளும், இதன்மூலம் புலி ஆதரவு தரப்பினரை மகிழ்விக்க முடியும் என்று கணக்கு போடுகின்றவர்களும், தங்களுடைய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி எமக்கு எதிரான செயற்பாடுகளை, பிரசாரங்களை முன்னெடுத்து வருவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

அதற்காக, கடந்த காலங்களில் எமது கட்சியின் செயற்பாட்டாளர்களாக இருந்து கட்சி நிலைப்பாடுகளுக்கு மாறாக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதையும் அவதானித்து வருகின்றோம்.

தன்னுடைய வாழ்நாளையே தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்காக அர்ப்பணித்து மானசீகமாக மக்களுக்காக உழைத்து வருகின்ற – தன்னை நோக்கி வருகின்ற சவால்களை எல்லாம் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் மிக்க தலைமைத்துவ ஆளுமையான தோழர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு செயற்படுகின்ற நாம் இவ்வாறான சமூக ஊடக பரபரப்புக்களை அலட்டிக்கொள்ளவில்லை.

எமக்கு எதிரான குற்றசாட்டுக்கள் அனைத்தும் அந்தந்தக் காலப் பகுதில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய்கள் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

The post மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்! appeared first on Oruvan.com.

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா
தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூர் அதிகார சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தோரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தேர்தல் அடைவு நிலை குறித்து ஆராய்ந்ததுடன் கிடைத்த வெற்றிகளை மூலதனமாக கொண்டு அடுத்த கட்டம் நோக்கி முன்னேறிச் செல்வது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த அவர், உசுப்பேற்றியோ, போலி வாக்குறுதிகளையோ, போதை ஏற்றும் சன்மானங்களையோ வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கவில்லை.

நாம் வழமை போன்றே எமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக கூறி மக்களிடம் சென்றிருந்தோம். அதன் முடிவுகள் வந்துள்ளன. அவை எமக்கு சர்பாக இல்லாவிடினும் கிடைத்தவை தோல்வியிலும் வெற்றிக்கான சமிக்ஞையாகவே இருக்கின்றது.

அதேநேரம் ஆட்சியில் பங்கெடுக்கும் விருப்பம் எமக்கில்லை.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பியிடம் தேசிய நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பது அறவே இல்லாது போய்விட்டதுடன் அது மறுக்கப்படுள்ளமையால் உள்ளூர் அதிகார சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை நாம் வழங்கப்போவதில்லை.

இதுவே கட்சியின் முடிவாகவும் இருக்கின்றது. அதேநேரம் ஏனைய தமிழ் கட்சிகளுக்கான ஆதரவும் அவர்கள் அதிகரபூர்வமாக கோரும் பட்சத்தில் சூழ்நிலையை கருத்தில் கொண்டே எடுக்கப்படும்.

குறிப்பாக இது கட்சியின் எதிர்காலம் மற்றும் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்.” என்றார்.

The post தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா appeared first on Oruvan.com.

கஜேந்திரன் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் – ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்
தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி, தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

அண்மையில் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று மேற்கொண்ட ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில், எம்மீதும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீதும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு எமக்கு இருக்கின்றது.

குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வேலணை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக சில உண்மைகளை எமது மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

உண்மையிலேயே, நேர்மையான அரசியல் செய்கின்றவர்ளாக இருந்தால், தீவக மக்களின் நலன்களில் அக்கறையுள்ளவர்களாக இருந்திருந்தால், கிராமங்களின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தீவக மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக பேசியிருக்க வேண்டும், தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.

அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் பற்றி பிரஸ்தாபித்திருக்க வேண்டும். ஆனால், எமது செயலாளர் நாயகம் தொடர்பாக அபாண்டமான சேறடிப்புக்களை முன்வைத்திருக்கின்றார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் கோட்டையாக விளங்கி வருகின்ற தீவகப் பிரதேசத்தில், எமது வாக்கு வங்கிகளை சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே குறித்த சேறடிப்பு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, குதிரை கஜேந்திரன் என்று சொல்லப்படுகின்ற ஒட்டுண்ணி தீவக மண்ணிலே வந்து நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு சென்றிருக்கின்றது.

கடந்த காலங்களில் எங்களுடைய மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய்ந்த அந்த ஒட்டுண்ணி யார் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ளவார்கள்.

கிராமங்கள் தோறும் சென்று இராணுவத்திற்கு ஆள் சேர்துக் கொடுத்தாக இன்று ஜே.வி.பி. யினர் மீது குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. அதற்கான ஜே.வி.பி. யினருக்கு கொம்பு சீவிவிட்ட பெருமை இந்த ஒட்டுண்ணிக்கு இருக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதி யுத்த மேகங்கள் வன்னி நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் 40 ஆயிரம் சவப் பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசியதன் மூலம், தென்னிலங்கையிலே இருக்கின்ற பேரினவாத தரப்புக்களை உசுப்பேற்றி விட்டு நாட்டை விட்டு ஓடித் தப்பியதுதான் போராட்டத்திற்கு இந்த ஒட்டுண்ணி செய்த அதிஉச்ச பட்சமான தியாகம்.

போகும்போதும் சும்மா செல்லவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சொகுச வாகனத்தை சொந்தமாக்கி கொள்வதற்கு 35 இலட்சம் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து, புலிகளின் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் ஊடாக புலிகளிடம் இருந்து அந்தப் பணத்தினைப் பெற்றுக் சொகுசு வாகனத்தையும் விற்று அதன்மூலம் கிடைத்த பல இலட்சம் ரூபாய்களையும் சுருட்டிக கொண்டு ஓடியதுதான் இந்த ஒட்டுண்ணி தமிழர்கள் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பு.

வன்னியிலே எங்களுடைய மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, வனாந்தாரங்களிலே போக்கிடம் தெரியாமல் அலைந்து கொண்டிருந்த போது, சுவிஸ்லாந்தில் இந்த ஒட்டுண்ணி தேனிலவு கொண்டாடிக் கொண்டு இருந்துவிட்டு, இப்போது கதை சொல்கிறது.

தன்னுடைய தேசியத் தலைமை தேசியக் கடமையை நிறைவேற்றுவதற்காக தன்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததாம். நாம் கேட்கிறோம். இங்கே மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது தேனிலவு கொண்டாடுவதுதான் இந்த ஒட்டுண்ணிக்கு வழங்கப்பட்ட தேசியக் கடமையா?

இலங்கையின் புலனாய்வுப் பிரிவினரால் சொந்தத் தம்பி கடத்தப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஸவின் கால்களில் விழுந்த இந்த ஒட்டுண்ணி, தனது தம்பியாரை விடுப்பதற்காக கோட்டபாயவிற்கு செய்த பிரதியுபகாரம் என்ன?

தனக்கு தெரிந்த புலிகள் பற்றிய தகவல்களையும், புலிகளுக்கு உதவியவர்களையும் காட்டிக் கொடுத்ததுதான், அந்தப் பிரதியுபகாரம்.

அந்த காலப் பகுதியில் புலிகளை மீள் உருவாக்க முயற்சிக்கிறார்கள் குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட தெய்வீகன், கோபி போன்றோரை காட்டிக் கொடுத்ததிலும் இந்த ஒட்டுண்ணிக்கு தொடர்பிருக்கின்றதோ என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது.

அதுமட்டுமா, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானத்தினை மேற்கொண்டதாக அந்த தீர்மானத்திற்கான கூட்டுப் பொறுப்பாளிகளில் ஒருவரான மணிவண்ணன் வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார்.

குறித்த தீர்மானத்தினை மேற்கொள்வதற்கும் இந்த குதிரை கஜேந்திரன் என்று சொல்லப்படுகின்ற ஒட்டுண்ணிதான் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது.

இவ்வாறு தன்னுடைய குறுகிய நலன்களுக்காக சொந்த இனத்தை காட்டிக் கொடுத்த – எமது மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய ஒட்டுண்ணி, எமது தீவக மண்ணிலே போய் நின்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது.

மணல் கடத்தில்கடத்தில் பேர்வழிகளுக்கும், பொது அமைப்புகளின் ஊடாக மக்களின் பணத்தை ஏப்பமிட்டவர்களுக்கும் வாக்கு கேட்கிறது.

இவர்களுக்கு போடுகின்ற வாக்கு சர்வதேசத்திற்கு அழுத்தமாக அமையுமாம்.

கடந்த 16 வருடங்களாக சர்வதேசத்திற்கு காண்பிக்கின்றோம் என்று எத்தனை தடவைகள் எங்களுடைய மக்களை உசுப்பேற்றியிரப்பீர்கள். எதனைச் சாதித்தீர்கள். மக்களுக்கு என்ன நீதியைப் பெற்றுக் கொடுத்தீர்கள்?

தீவகதில் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லையாம். தீவகத்தில் காணப்படுகின்ற அபிவிருத்திப் திட்டங்களை பறைசாற்றுகின்ற கல்வெட்டுக்களே இந்த ஒட்டுண்ணியின் கருத்தை கேட்டு தமக்குள் சிரித்திருக்கும்.

அவை அனைத்தும் சுமந்திருப்பது எங்களின் செயலாளர் நாயகத்தின் பெயரை என்பது அவற்றிற்கு தெரியும். எனவே எமது மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கஜேந்திரன் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் – ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் appeared first on Oruvan.com.

புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை – ஈ.பி.டி.பி சுட்டிக்கட்டு
வழக்கமாக தேர்தல் காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேறுடிப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதும் எமது அரசியல் எதிர் தரப்புக்கள் கையாள்வது வழக்கம்.

அவ்வாறு தற்போதும், சில காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன.

இவை தொடர்பாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

புலிகளின் தலைமையும் எமது செயலாளர் நாயகமும், எமது மக்களின சுதந்திரமான – கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக இரு வேறு ஆயுதப் போராட்ட அமைப்புக்களை வழிநடத்தியவர்கள்.

எங்களுடைய கைகளிலே ஐந்து விரல்கள் காணப்படுகின்போதிலும் அவை வித்தியாசமான செயற்பாடுகளை கொண்டவையாக காணப்படுகின்றன.

அதே போன்றுதான், எமது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட பிரதான ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் தலைவர்களும் வித்தியாசமான செயற்றிறன்களையும், வேறுவேறான சிந்தனைகளையும் கொண்டிருந்தனர்.

அந்தவகையில் எமது செயலாளர் நாயகத்திற்கும் புலிகளின் தலைமைக்கும் இடையில் தமது இலக்கினை அடைவது தொடர்பில் வித்தியாசமான சிந்தனைகள், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் காணப்பட்டன.

எத்தகைய அழிவுகளை கொடுத்தேனும் இலக்கை அடையும் வரையில் ஆயுதப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்க வேண்டும் என்பது புலிகளின் தலைமையின் சிந்தனை.

விவேகம் அற்ற வீரம் விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சர்வதேச பூகோள நிலவரங்களை அனுசரிக்க வேண்டும், இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும், சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும், உருவாகும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பது எமது செயலாளர் நாயகத்தின் சிந்தனை.

ஆனால் இருவருக்கும் இடையில் பொதுவான குணாம்சங்களும் காணப்பட்டன. அதாவது, தாங்கள் ஒரு விடயத்தினை தீர்மானித்து விட்டால் அதில் உறுதியாக இருந்து அதற்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவது.

மற்றது, யாருடைய மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்கு அடிபணியாத பிடிவாதம். இவ்வாறான இருவருக்கும் பொதுவான குணாசமங்கள்தான், இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை வலுப்படுத்தின.

இவர்களுக்கிடையிலானபிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எம்மத்தியில் காலத்திற்கு காலம் இருந்த சமூக சிந்தனையாளர்கள் புத்திஜீவிகள் என்று பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.

தன்னுடைய பயணத்திற்கு எதிரான தடைகளும், மாற்றான சிந்தனைகளும் அழிக்கப்பட வேண்டியவை என்ற தன்னுடைய சிந்தாந்தத்திற்கு அமைய புலிகளின் தலைமை எமது செயலாளர் நாயகத்தை அழிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது.

அவற்றை தன்னுடைய தற்துணிவினாலும் எமது தோழர்களின் அர்ப்பணிப்பாலும் எமது செயலாளர் நாயகம் முறியடித்தார். இந்த நிலை பல வருடங்களாக நீடித்த நிலையில் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் திரட்சியடைந்து வீரியமடைந்தது.

இப்போதும் 2009 இற்கு முற்பட்ட சூழல் இருக்குமாயின் இருவருக்கும் இடையிலான முரண்பாடு என்பது இன்னும் தீவிரமடைந்திருக்கும்.

இந்த முரண்பாடு என்பது ஈழத் தமிழர்களுக்காக பொங்கி எழுந்த இரண்டு தலைவர்களின் சிந்தனை வேறுபாடுகளினாலும் செயற்பாடுகளினாலும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறான பின்னணயில்தான், எமது மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கருத்தாடல்கள் உருவாகின்ற சந்தர்ப்பங்களில் எமது செயலாளர் நாயகம் புலிகளின் தலைமையை கடுமையாக விமர்சிக்கின்றார்.

இந்த நிலையில் எமது மக்கள் ஒரு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மக்களுக்காக உருவாகிய ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் களத்தில் இருந்து அகற்றி தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலத்தை பலவந்தமாக தமது கையில் எடுத்த புலிகளின் தலைமை, அதனை சரியான முறையில் பயன்படுத்த வில்லை என்ற ஆதங்கம் எமது செயலாளர் நாயகத்தின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எமது மக்கள் சந்தித்த அனைத்து இழப்புக்களுக்கும் புலிகளின் தலைமையின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்பது எமது செயலாளர் நாயகத்தின் திடமான வாதமாக இருக்கின்றது.

அதைவிட, எங்களுடைய செயலாளர் நாயகமும் சாதாரண மனிதன் என்ற அடிப்படையில், தன்னுடைய வழிமுறைகளை பின்பற்றி செயற்பட்டார்கள் என்ற ஒரே நோக்கத்திற்காக தன்னுடைய சக தோழர்களான பல ஆளுமைகளை கொலை செய்யப்பட்டமை எமது செயலாளர் நாயகத்தின் ஆழ் மனதில் ஆறாத வடுவாக இருந்து கொண்டே இருக்கின்றது.

அவை எல்லாவற்றையும்விட முக்கியமானது 2009 இற்கு பிற்பட்ட காலத்தில் அவர் எதிர்நோக்கிய நடைமுறை சிக்கல்கள்.

அதாவது, நூற்றாண்டுகளாக எமது மக்கள் வழிபட்டு வந்த வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடு நடத்த அனுமதியுங்கள் என்றால், சுற்று நிரூபங்கள் என்றும் சட்டதிட்டங்கள் சாக்கு போக்கு சொல்கிறார்கள்.

பல்வேறு திணைக்களங்களும் கூகுளில் பார்த்துவிட்டு கையகப்படுத்தி வைத்துள்ள எமது மக்களின் காணிளை விடுக்க முயலும்போது அவர்கள் சொல்லுகின்ற ஆயிரம் வியாக்கியானங்களும் கால இழுத்தடிப்புக்களும் அவரை சினம் கொள்ள வைக்கின்றன.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம்…, காலத்தின் தேவையுணர்ந்து ஈடுஇணையற்ற தியாகங்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலம் சரியான முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட்டிருப்பின், இவ்வாறு ஒவ்வொருவும் கதை சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? என்று செயலாளர் நாயகத்தின் உள்ளுணர்வு குமுறுகின்றது.

அந்தக் குமுறல் புலிளின் தலைமைக்கு எதிரான விமர்சனமாக அவ்வப்போது வெளிப்படுகின்றது.. இதுதான் உண்மை.

ஆக எமது செயலாளர் நாயகம் வெளிப்படுத்தும் புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு அறச் சீற்றத்தினை வெளிப்படுத்துகின்ற போது, புலிகளின் அமைப்பின் தியாகங்களை வைத்து போலி அரசியல் செய்கின்றவர்களினால் காண்பிக்கப்படுகின்ற பிம்பங்களையும் கற்பனைகளையும் விமர்சிக்கின்றார்.

ஆயுதப் போராட்டம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. எங்கெங்கு தவறுகள் இடம்பெற்றன. எவ்வாறு தவறுகள் இடம்பெற்றன என்பதை வெளிப்படுத்துகின்றார்.

எனவே எமது செயலாளர் நாயகத்தின் அறச் சீற்றமும், அரசியலுக்காக எதையும் மூடி மறைக்காமல் வெளிப்படுத்தும் வரலாற்று உண்மைகளுமே எமது அரசியல் எதிரிகளால் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு எமக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.

The post புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை – ஈ.பி.டி.பி சுட்டிக்கட்டு appeared first on Oruvan.com.

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என அந்தக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது கட்சியின் மீது அவதூறுகளும், சேறடிப்புகளும் மேற்கொள்ளப்படுவது இது புதியதொன்று அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (07.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

குறிப்பாக, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

உண்மையிலேயே 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த தேர்தல் வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிலர் காயப்பட்டிருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

இருந்தாலும் குறித்த விவகாரம் தற்போதும் நீதிமன்றில் இருக்கின்ற நிலையில் அதுதொடர்பாக நாம் தற்போதைக்கு எந்தவிதமான கருத்தினையும் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையிலே, எம்மீது சேறடித்தாவது ஈ.பி.டி.பி. கட்சியை வேலணை பிரதேச சபையிலே தோல்வியடைச் செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான சேறடிப்புக்கள் எமது கட்சியைப் பொறுத்தவரையில் புதிய விடயங்கள் அல்ல. கடந்த காலங்களிலும் தேர்தல் காலங்களில் பலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

07.04.2025 EPDP press meeting jaffna press club (1)

The post அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு appeared first on Oruvan.com.

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?! – ஈ.பி.டி.பி. சந்தேகம்
கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேணடும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தி்ல் இன்று நடைபெற்ற வாராந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தயாராக இருப்பதான சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். அது தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, கடந்த காலங்களைப் போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றோம்.

அது ஒருபுறமிருக்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரையில், தற்போதைய அரசாங்கத்தை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் நோக்கம் இல்லாத போதிலும், சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தார்மீக கடப்பாடு இருப்பதாக இருப்பதாக கருதுகின்றோம்.

அந்தவகையில், யாழ் மாவட்டத்திலிருந்து ஜே.வி.பி. சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்ற, ரஜீவன் ஜெயானந்தமூர்த்தி அவர்களுடைய முகப்புத்தகத்தில் ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதாவது, யாழ் மாவட்டத்தில் காணப்படுகின்ற போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பாக தனிநபர் பிரேரணையை இன்று கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்ற போது எமது பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன, அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மற்றுக் கருத்தில்லை.

ஆனால் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை கொண்டுவரும் அளவிற்கு யாழ்ப்பாணத்திற்கு தனித்துவமான பிரச்சினை அல்ல.

போதைப் பொருள் பாவனை என்பது நாடாளாவிய ரீதியில் இருக்கின்ற பிரச்சினை கடந்த வாரம்கூட, கொழும்பில் நீதிமன்றத்தினுள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாணத்தில் போதைபொருள் பாவனை அதிகரித்திருப்பதாக தனிநபர் பிரேரணை கொண்டு வருவது யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களையும், கௌரவத்தினையும் மலினப்படுத்துப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாக கொண்டதோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

அதேபோன்று, தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையிலே தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

எமது மக்களைப் பொறுத்தவரையில், காணிகள் விடுவிக்கப்படும், காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும், அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குதல் போன்ற விடயங்கள் சொல்லப்பட்ட போதிலும், இதுவரையில் அவை தொடர்பான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் ஆயுத ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடிப்படைவாத அமைப்புக்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்றபோது வடக்கில் கடந்த காலங்களில் கிறிஸ் பூதங்கள் ஏவி விடப்பட்டது போன்று மீண்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும், இதுதொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.

எனவே, தற்போதைய அரசாங்கம் தங்களுடைய இயலாமைகளை மறைப்பதற்காக, எமது மக்களை மலினப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையும், சுமூகமான சூழலுக்கு குழப்பங்களை ஏற்றபடுத்தும் கருத்துக்களையும் வெளிப்படுத்தக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

The post மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?! – ஈ.பி.டி.பி. சந்தேகம் appeared first on Oruvan.com.

வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல – ஈ.பி.டி.பி. சாடல்
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருமே, வரி செலுத்துநர்களாகவே இருக்கின்றோம். சாதாரண குடும்பம் ஒன்று தங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளின் ஊடாக மாதாந்தம் 40,000 ஆயிரம் ரூபாய் வரியை மறைமுகமாக செலுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆக, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டை பெற்று பயன்படுத்துவது என்பது எமது உரிமை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

உண்மையிலேயே ஒரு வரவு செலவுத் திட்டத்தில், ஒவ்வொரு துறைக்காவும் ஒதுக்கீடுகளிலும் எமக்கான ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன. அதைவிட மாகாண சபைக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்றன.

அவை ஒவ்வொன்றிலும் சரியான முறையில் எமக்கான ஒதுக்கீடுள் வழங்கப்படுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து அதனை உறுதிப்படுத்துவதே மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாக இருக்க முடியும்.

ஒருவேளை, எதாவது துறைசார் நிதி ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் போது எமது பிரதேசம் புறக்கணிக்கப்படுமாயின் அதுதொடர்பாக எமது ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.

மாறாக, எமது பிரதேசங்களில் அடையாளப்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகளை மாத்திரம் சுட்டிக்காட்டி, மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சிறு பகுதியே எமது மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுவதும் அபத்தமானது.

கடந்த காலங்களில் குறுகிய அரசியல் நலன்களுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் எமது மக்களை உணர்ச்சியூட்டும் வகையில் எம்மவர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் எமது மக்களின் இன்றைய கையறு நிலைக்கான காரணங்களில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவி்த்துள்ளார்.

The post வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல – ஈ.பி.டி.பி. சாடல் appeared first on Oruvan.com.

யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஈபிடிபி கோரிக்கை
யாழ். நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்

இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் கடந்த காலங்களைவிட வித்தியாசமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஆனால், எம்மை பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை உள்வாங்கியே வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டிய நிலையிலும், வரவு செலவுத்திட்டத்தின் உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக திறைசேரி செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் போன்றோர் கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், கடந்த வருட வரவு செலவு திட்டத்தினை ஒத்த வரவு செலவுத் திட்டம் ஒன்றே வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக எதிர்பார்த்திருந்தோம்.

பெரும்பாலும் அவ்வாறான வரவு செலவுத் திட்டம் ஒன்றே வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பொறுத்தமட்டில், கிடைக்கின்ற வாய்ப்புக்களை தவற விடாமல் பயன்படுத்தி, முன்னோக்கி செல்லுகின்ற தரப்பு என்ற அடிப்படையில் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள், வெறுமனவே எழுத்தில் மட்டும் இல்லாமல், செயலிலும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிதிகள் சீரான முறையில் ஒதுக்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளது.

வடக்கினை பொறுத்த வரையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்மான வீதிககளை முழுமையாக திருத்துவதற்கு சுமார் 10000 மில்லியன் ரூபாய் தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அவற்றுள் வட்டுவாகல் பாலம் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை போன்றவை உள்ளடக்கப்படவில்லை. ஆனால் தற்போது வட்டுவாகல் பாலம் மற்றும் இறங்குதுறை உள்ளடக்கி 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே முன்னுரிமை அடிப்படையில் வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பூநகரி கௌதாரிமுனை வீதி, கிராஞ்சி, வலைப்பாடு போன்ற பகுதிகளுக்கான வீதி போன்ற பிரதான வீதிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

அதேபோன்று, யாழ் நூலகத்திற்கு முன்மொழியப்ட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்களும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் கணினி வசதிகளை அதிகரிப்பதற்காகவும் முன்மொழியப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

அதைவிட, தென்னாசியாவில் சிறந்த நூலகமாக காணப்பட்ட எமது நூலகத்தினை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்துவதன் மூலம் தென்னாசியாவின் தலை சிறந்த நூலகங்களுள் ஒன்றாக விளங்கிய எமது நூலகத்திற்கு இன்னுமொரு பரிமாணத்தினை வழங்க முடியும் என்பதே எமது செயலாளரின் சிந்தனையாக இருக்கின்றது.

இதனை வலியுறுத்தி எமது செயலாளர் நாயகம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுத இருக்கின்றார்.

அதேபோன்று, 30 ஆயிரம் அரச நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படிருக்கின்றது.

அவை வழங்கப்படுமாயின், நாடளாவிய ரீதியில் இருக்கின்ற வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அந்த நியமனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது, தமிழ் மொழிப் பரீட்சயம் உள்ளவர்களுக்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கடமையாற்ற கூடியவர்களும் முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

ஏன் இதனை வலியுறுத்துகின்றோம் என்று சொன்னால், நல்லாட்சி காலம் என்று சொல்லப்படுகின்ற காலப் பகுதியில், பல்வேறு திணைக்களங்களுக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக மின்சார சபைக்கு பெருமளமானவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மின்சார சபையின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான சேவை நிலையத்தில் 12 பணியாளர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 4 பணியாளர்கள் மாத்திரம் கடமையாற்றி வருகின்றனர்.

அங்கு நியமிக்கப்பட்டவர்கள் இன்று இடமாற்றம் பெற்று தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் நாங்கள் ஆளுந் தரப்பாக இருந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்திருக்கவில்லை.

எனவே இந்த விடயத்தில் ஆளுந்தரப்பை பிரதிநித்துவம் செய்கின்றவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஆக, இந்த வரவு செலவுத் திட்டம் எமது மக்களுக்கு நன்மையளிக்குமா இல்லையா என்பதற்கு அப்பால், கிடைத்திருப்பவற்றை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அந்தவிடயத்தில், எமது மக்களினால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்

The post யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஈபிடிபி கோரிக்கை appeared first on Oruvan.com.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நேற்று (12) இந்தியாவில் தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த முன்னாள் எம்.பி., கேரளாவின் கொச்சியில், பிரிதொரு கடவுச்சீட்டை பயன்படுத்தி அங்கிருந்து ஐரோப்பிய நாட்டிற்குச் செல்ல முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு பயணம் செய்வதற்காக அவர் வழங்கிய கடவுச்சீட்டுடன் கூடுதலாக, அவரிடம் மற்றொரு கடவுச்சீட்டு இருந்ததாகவும், அந்த கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வவுனியாவில் நபர் ஒருவரிடம் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இரண்டு மாதங்களுக்கு முன்பு வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், தான் பெற்ற பணத்தை பத்து தவணைகளில் செலுத்துவதாக வவுனியா நீதிமன்றத்தில் உறுதியளித்ததை அடுத்து நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட அவர், நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது appeared first on Oruvan.com.

பண மோசடி – வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கைது
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் அவரது செயலாளர் வவுனியா பொலிஸாரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி தருவதாக கூறி நபர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா மோசடி செய்தாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றி தேர்தலில் போட்டியிட்ட திலீபன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

அண்மையில் அவர், கட்சியில் இருந்தும் கட்சியின் சகல பதவிகளையும் இராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பண மோசடி – வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கைது appeared first on Oruvan.com.