Drug Archives - Oruvan.com

விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பொதியில் உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிக சூட்சுமமான முறையில் சுமார் 2,505 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய புகைப்பட கலைஞர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி என்பன விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

The post விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர்
நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் பெறுபேறுகள் எட்டப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையான தேசிய மூலோபாயத் திட்டம் (SUD) குறித்த தெளிவுபடுத்தல் நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எதிர்நோக்கும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை முகாமைத்துவம் செய்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்காக இந்த தேசிய மூலோபாயத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

சான்றுகள் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல் ஆகிய சேவைகளைப் பலப்படுத்துவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

The post போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு  தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர் appeared first on Oruvan.com.

விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமானம் ஊடாக நேற்று (26) மாலை சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரிடமிருந்து 02 கிலோ 832 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் தொகை கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் முகவர்களிடம்

ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது appeared first on Oruvan.com.

ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிப்பு
தங்காலை, நெடொல்பிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மித்தெனியவில் நேற்று சனிக்கிழமை (06) கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்களும் இன்று கைப்பற்றப்பட்ட இந்த இரசாயனப் பொருட்களும் ஒரே தரப்பினரால் கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த இராசயனப் பொருட்களின் மாதிரிகள் மேலதிக விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தங்காலை நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை (08) விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, மித்தெனியவில் நேற்று கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்று விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஜேவிக்ரம மனம்பேரிகே பியல் சேனாதீர என்ற 38 வயதுடைய நபரே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் சகோதரராவார்.

தடுப்புக்காவலிலுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பெக்கோ சமனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வௌிவந்த தகவலின் அடிப்படையில் மித்தெனியவிலுள்ள காணியொன்றிலிருந்து 50,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டன.

The post ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிப்பு appeared first on Oruvan.com.

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைளில் 485 பேர் கைது
போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 485 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நேற்றைய தினம் நடத்தப்பட்ட 485 சோதனை நடவடிக்கைகளில் 485 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 241 கிராம் ஹெரோயின், 590 கிராம் ஐஸ், 807 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 1324 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்பாறை பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், ஐஸ் ஹெரோயின் மற்றும் போதைப்பொருட்களுடன் ஒரு பெண் மற்றும் இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

The post போதைப்பொருள் சோதனை நடவடிக்கைளில் 485 பேர் கைது appeared first on Oruvan.com.

போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் – தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை
இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும், 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் போதைப்பொருள் அடிமையாதல் குறித்து புதிய கணக்கெடுப்பை நடத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் – தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை appeared first on Oruvan.com.

நீர்கொழும்பில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பில் சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை வேனில் ஏற்றிச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொப்பரா சந்தியில் நேற்று (01.03) சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

போதைப்பொருட்கள் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post நீர்கொழும்பில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

போதைப்பொருள் கடத்தற்காரரும் அவரது மனைவியும் வெளிநாட்டில் கைது
போதைப்பொருள் கடத்தற்காரரும், திட்டமிட்ட குற்றவாளியான ஒருவரும், அவரது மனைவியும் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கைப் பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டு முயற்சி, துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பாக குறித்த சந்தேகநபர் தேடப்பட்டு வந்தார்.

சூதாட்டம், துப்பாக்கிகள் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்த தொடர்பான குற்றங்களுக்காக அவர் முன்னரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது குறித்த சந்தேகநபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

The post போதைப்பொருள் கடத்தற்காரரும் அவரது மனைவியும் வெளிநாட்டில் கைது appeared first on Oruvan.com.

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது
மன்னார் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில்,

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக இணையவழி முறையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்நிலை முறையின் ஊடாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து அது தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகளில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதனுடன் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு நிறுவன மட்டத்திலான ஒழுக்காற்று நடைமுறைகளுக்கு அப்பால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி அயேசா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை appeared first on Oruvan.com.