Council Archives - Oruvan.com

தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான்
ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர்  அலி லாரிஜானி (Ali Larijani) வான்வழித் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் அவரது உயிரிழப்பை ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு சபை உத்தியோப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

லாரிஜானியுடன் அவரது மகனும் பாதுகாப்பு பணியாளர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹடாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை எதிரிகளை அழிக்கும் முயற்சியின் பகுதி என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.

இதேவேளைபசிஜ் துணை ராணுவத் தளபதி கோலம்ரெசா சோலிமானி (Gholamreza Soleimani) உட்பட பலர் வேறு தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரான் தலைமைக்கு எதிராகக் கருத்து தெரிவித்து, இந்தச் சம்பவத்தை வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) உத்தரவுக்கமைய, ஈரானின் மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்–இஸ்ரேல் மோதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஹார்மூஸ் நீரிணை பகுதி இன்னும் பதற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் –  ஈரான் appeared first on Oruvan.com.

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் அதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை முன்வைத்த பிரதான 05 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இன்று   இணை அனுசரணை வழங்கியிருந்தன.

The post இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் appeared first on Oruvan.com.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பாணந்துறை நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ஜீப் வண்டிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி எண்களின் கீழ் பதிவு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

The post முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை appeared first on Oruvan.com.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று ஆடம்பர வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது appeared first on Oruvan.com.

மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை
மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது .

2013 ஆம் ஆண்டு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மொறட்டுவ மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட 105 மில்லியன் ரூபாவை தனது நெருங்கிய ஒப்பந்ததாரர்கள் எட்டு பேருக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

The post மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை appeared first on Oruvan.com.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகிறது.

இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார்.

இந்த அமர்வில் நாட்டிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பதில் அறிக்கையில்,

“வெளிப்புற தலையீடுகள் தேசிய ரீதியான முயற்சிகளைத் தடுக்கவும் மக்களை துருவப்படுத்தவும் மட்டுமே உதவும் என்று இலங்கை அவதானித்துள்ளது.

எனவே, சர்வதேச நடவடிக்கை தொடர்பாக அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் இலங்கை அரசாங்கம் உடன்படவில்லை.

இனம், மதம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையில் எந்தப் பிரிவினையோ அல்லது பாகுபாடோ இல்லாமல் அதன் மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் மற்றும் அனுபவிக்கும் ஒரு நாட்டை நோக்கிச் செயல்படுவதற்கான ஆணையை அரசாங்கம் பெற்றுள்ளதுடன், அந்த நோக்கத்திற்காக அரசாங்கம் வலுவாகவும் உண்மையாகவும் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் இனவெறி அல்லது தீவிரவாதம் மீண்டும் எழுவதைத் தடுப்பது அரசாங்கத்தின் முழுமையான உறுதிப்பாடாகும்.

எனவே, இலங்கை ஒரு உள்நாட்டு பொறிமுறை மூலம் முன்னேறும்போது, ​​சர்வதேச சமூகத்தின் புரிதல் மற்றும் ஆதரவை இலங்கை வரவேற்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

சீதாவகபுர நகர சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த சீதாவகபுர நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

அதன்படி, இன்று (15) மேற்படி நகர சபையின் தொடக்க அமர்வில் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சுனில் ஜயரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல், உப மேயர் பதவியை சுயேச்சைக் குழுவிலிருந்து போட்டியிட்ட அஜித் விஜயமுனி சொய்சா கைப்பற்றினார்.

The post சீதாவகபுர நகர சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம் appeared first on Oruvan.com.

கொலன்னாவ நகர சபை அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசம்
கொலன்னாவ நகர சபையின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது.

கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தெரிவு இன்று (18) காலை இடம்பெற்ற நிலையில்  சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கொலன்னாவ நகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 09 ஆனங்களும், எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும் கிடைத்தன.

இருப்பினும், எழுந்த பதற்றமான சூழ்நிலையை அடுத்து, 09 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிய நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சுசில் குமார, சபையில் தொடர்ந்து இருந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவைத் தெரிவித்தார்.

அதன்படி, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 10 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தம்மிக்க விஜயமுனி கொலன்னாவ நகர சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவராக சேனக சமன் செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

The post கொலன்னாவ நகர சபை அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசம் appeared first on Oruvan.com.

தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி 1,397 வாக்குகளைப்

பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி 265 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 177 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

The post தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – உயர்நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றிற்கு அறிவித்த சபாநாயகர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன  பாராளுமன்றில் இன்று (14.02) அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாமினால் விசாரிக்கப்பட்ட ‘உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)’ எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

சட்டமூலம் முழுமையாகவும் மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும்” என நீதிபதிகள் குழாத்தின் பெரும்பான்மையினராகிய நீதிபதிகள் இருவர் அறிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லை என்பதால் அதனைப் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை ஒன்றின் மூலம் நிறைவேற்றப்பட முடியும் என நீதிபதிகள் குழாத்தின் மீதமுள்ள நீதிபதி  தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில்  உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென சபாநாயகர் கட்டளையிட்டார்.

The post உள்ளூராட்சி மன்ற தேர்தல் – உயர்நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றிற்கு அறிவித்த சபாநாயகர் appeared first on Oruvan.com.