commits suicide Archives - Oruvan.com

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம் – கொலையா? தற்கொலையா? வலுப்பெறும் விசாரணைகள்
பிடியாணை ஒன்று தொடர்பில் மருதானை பொலிஸார் மூலம் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நேற்று (22) அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பொன்னையா கலாதர்ஷனி எனும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண் தான் அணிந்திருந்த நீண்ட காற்சட்டையை தூக்கிலிட பயன்படுத்தியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழான “திவயின” செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த செய்தியில்,

விபச்சார தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்ததுடன் குறித்த வழக்கு தொடர்பில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் நீதிமன்றம் குறித்த பெண்ணுக்கு பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பொலிஸார் நேற்று முன்தினம் இரவு 8.45க்கு மருதானை பிரதேசத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை மருதானை பொலிஸ் நிலையத்தின் விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து நேற்று காலை அவரை மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தயாராகி இருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 24 மணித்தியாலமும் பொலிஸ் அதிகாரிகள் தரித்திருக்கும் மருதானை பொலிஸ் நிலையத்தின் விளக்கமறியலில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை சந்தேகத்திற்கிடமான ஒரு விடயம் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த பெண்ணை பொலிஸ் அதிகாரிகள் அடித்து கொலை செய்தனரா அல்லது தனது இரு பிள்ளைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் வெட்கி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பில் மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் கீழ் விசேட பொலிஸ் குழுவினர் பல பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசராணைகளை ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் சந்தேகநபர்கள் தொடர்பிலான முழுப் பொறுப்பும் பொலிஸாரையே சாறும் என சட்டத்தரணிகள் வலியுறுத்துகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் “ஒருவன்” செய்திப்பிரிவு கேள்வியெழுப்பியது.

“குறித்த பெண் நீண்ட நாட்களாக கொழும்பில் பணி புரிந்து கொண்டிருக்கும் நிலையில் விபச்சாரத் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்போது பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியது.

மேலும், பிரேத பரிசோதனைகளின் பின்னரே தற்கொலையா அல்லது கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு “ஒருவன்” செய்திப்பிரிவுக்கு தெரிவித்தது.

The post மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம் – கொலையா? தற்கொலையா? வலுப்பெறும் விசாரணைகள் appeared first on Oruvan.com.