BCCI Archives - Oruvan.com

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை
டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி விளையாடவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் புதிய வீரர்களை இணைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், புதிய வீரர்களை தெரிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் புதிய திட்டம் ஒன்றை இந்திய கிரிக்கெட் சபை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீரர்களை இரண்டு அணிகளாக பிரித்து விளையாட வைப்பதே நோக்கமாகும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே நேரத்தில் பல போட்டிகள் வரவிருப்பதையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏராளமாக டி20 கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறவுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சிறந்த 35 வீரர்களை இந்திய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை appeared first on Oruvan.com.

உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியா – விஸ்டன் இதழ் எச்சரிக்கை
கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், கிரிக்கெட் உலகில் அதிகரித்து வரும் இந்திய அரசியல் செல்வாக்கை விமர்சித்துள்ளதுடன், விளையாட்டின் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் சீரழிவு குறித்தும் எச்சரித்துள்ளது.

விஸ்டன் இதழின் 2026 பதிப்பில், உலக கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்தியா ஆரோக்கியமற்ற ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட, 1864ஆம் ஆண்டு முதல் வெளிவந்துகொண்டிருக்கும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய கிரிக்கெட் போட்டிகளின் வருடாந்திரப் பதிவாகும்.

மேலும் கிரிக்கெட் விளையாட்டின் “பைபிள்” என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், அதன் 163வது ஆண்டுப் பதிப்பில், உலகளாவிய கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆரோக்கியமற்ற மற்றும் அரசியல்மயமாக்கப்பட்ட ஆதிக்கத்தை இதழின் ஆசிரியர் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தலைவராகப் பணியாற்றும் ஜெய் ஷா உள்ளிட்ட, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய தலைமைப் பதவிகளில் இந்திய அதிகாரிகள் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய் ஷா, இந்தியாவின் உள்துறை அமைச்சரும் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்டகால கூட்டாளியுமான அமித் ஷாவின் மகன் ஆவார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு ஷா தலைமை தாங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை “இந்தியாவின் ஆளும் பாஜகவின் விளையாட்டுத் துணை அமைப்பு” என்று விஸ்டன் விவரித்துள்ளது.

விஸ்டன் இதழில் வெளியான கட்டுரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் விவரித்திருந்தது.

மேலும், கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் அரசியல் தலையீடு குறித்த கவலைகளையும் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு குறுகிய காலப் போர் நடந்த பின்னணியில் நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண தொடரில் அரசியல் எவ்வாறு தலையிட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டிகளில் அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்ததையும் பூத் சுட்டிக்காட்டினார்.

பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் வன்முறையின் போது இந்துக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

இந்த இராஜதந்திரப் பதட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்ட உதாரணங்களையும் அவர் அடிக்கோடிட்டுள்ளார்.

முஸ்தாபிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது, பங்களாதேஷ்அரசாங்கம் அவர்களை இந்தியாவிற்குப் பயணிக்க அனுமதிக்க மறுத்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து அந்நாடு நீக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டபோது, ​​சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்ததுடன், தங்களது அனைத்து போட்டிகளையும் துபாய்க்கு மாற்ற கோரியிருந்தது.

இதற்கு அனுமதி வழங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை, டி20 உலகக் கிண்ண தொடரின் தங்கள் விளையும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

இந்த சமத்துவமற்ற நிலையையும் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கிரிக்கெட்டின் அதிகரித்து வரும் அரசியல்மயமாக்கல், ஆட்டத்தின் நிர்வாகத்தைச் சீர்குலைத்து வருவதாக விஸ்டன் இதழ் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் செல்வாக்கு மற்றும் அரசியல் காரணிகளால் உலக கிரிக்கெட் களம் அதிகளவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது என்றும் விஸ்டன் இதழ் மேலும் தெரிவித்துள்ளது.

The post உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியா – விஸ்டன் இதழ் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை இந்திய கிரிக்கெட் சபையின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார்.

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகொண்ட இந்திய அணிக்கு அவர் பாராட்டையும் இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அவர்கள் இருவரும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் அவர்களின் இருப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

இந்த தொடர் அவர்கள் இருவரின் கடைசி தொடர் என்ற வதந்திகளையும் ராஜீவ் சுக்லா நிராகரித்தார், இதுபோன்ற கூற்றுக்களை சொல்வது முற்றிலும் தவறு என்று வலியுறுத்தினார்.

ஓய்வு முடிவுகள் வீரர்களை மட்டுமே சார்ந்தது என்றும் அவர் கூறினார். கோலி மற்றும் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு? appeared first on Oruvan.com.

தோனிக்கு முக்கிய பதவி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அதோடு வளர்ந்து வரும் வீரர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரோடு அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி தோனி அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த பிறகு என்ன திட்டங்களை வைத்துள்ளார்? என்பது குறித்து இதுவரை அவர் எந்த ஒரு உறுதியான பதிலையும் அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபையான பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு தோனிக்கு மீண்டும் ஒரு முக்கிய பதவியை வழங்க காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்ற வேளையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார்.

அப்போதைய தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அணியில் இருந்தாலும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முக்கிய பொறுப்பினை தோனி சம்பளம் எதுவும் பெறாமல் செய்திருந்தார்.

ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனியை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ நிர்வாகம் அணுகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பதவியை தோனி ஏற்பாரா? இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவாரா? என்பது அவர் எடுக்கப்போகும் முடிவில் தான் இருக்கிறது.

ஏனெனில் ஏற்கனவே தோனிக்கும் கம்பீருக்கும் செட் ஆகாது என்று பேசப்படும் வரும் வேளையில் தற்போது பயிற்சியாளராக கம்பீர் இந்திய அணியில் இருக்கும் தருவாயில் தோனி எப்படி அணிக்குள் வருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தோனிக்கு முக்கிய பதவி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம் appeared first on Oruvan.com.

ஐபிஎல்க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு
ஐபிஎல் தொடரில் தற்போது பத்து அணிகள் விளையாடி வருகின்றனர். கடந்த 2022 மெகா ஏலத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது.

இதற்கு முன்பும் ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஒரு சில அணிகள் புதிதாக இணைந்து பிறகு காணாமல் போய் உள்ளன. அப்படி ஒரு அணி தான் கொச்சி டர்க்கர்ஸ்.

2010 ஆம் ஆண்டு இந்த கொச்சி டர்க்கர்ஸ் அணி ஐபிஎல்லில் விளையாடியது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பிசிசிஐ இந்த அணிக்கு தடை விதித்தது.

பிசிசிஐ தரப்பிலிருந்து ரூபாய் 153 கோடி வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் இது ஒருதலை பட்சமாக இருப்பதால் எங்கள் தர முடியாது என்று கொச்சி டர்க்கர்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால் பிசிசிஐ விதிகளை மீறியதாக கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு 2011 ஆம் ஆண்டு தடை விதித்தது. ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் என்ற நிறுவனம் தான் கொச்சி டர்க்கர்ஸ் அணியை நடத்தி வந்தது.

பிசிசிஐயின் இந்த அடாவடி போக்கை எதிர்த்து 2012ம் ஆண்டு கொச்சி டர்க்கர்ஸ் அணி நடுவர் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

அந்த விசாரணை முடிவில், பிசிசிஐ ரூபாய் 384 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சக்தி வாய்ந்த இடத்தில் இருந்த பிசிசிஐ அதனை தர மறுத்தது.

எங்கள் அணியை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும், உங்கள் இழப்பீடு வேண்டாம் என்றும் அணியின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனையும் பிசிசிஐ நிராகரித்தது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலான தொடர் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி, பிசிசிஐ கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு ரூபாய் 538 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிசிசிஐக்கு பெரும் அடியாகவே பார்க்கப்படுகிறது.

கொச்சி டர்க்கர்ஸ் அணியை போலவே சகாரா குழுமத்தை சேர்ந்த புனே வாரியர்ஸ் அணிக்கும் பிசிசிஐ 2014 ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது.

2010ம் ஆண்டு ஐபிஎல்லின் தலைவராக இருந்த லலித் மோடி கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு முதலில் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகரின் உத்தரவின் பேரில் ஐபிஎல்லில் கொச்சி டர்க்கர்ஸ் அணி விளையாடியது.

இருப்பினும் அந்த சீசனில் எட்டாவது இடத்தை மட்டுமே பிடித்தது. கொச்சி டர்க்கர்ஸ் அணியில் கிரேம் ஸ்மித், மிட்செல் மார்ஷ், ஜெரோம் டெய்லர், யுவராஜ் சிங், ஏஞ்சலோ மேத்யூஸ், ஆஷிஷ் நெஹ்ரா, முத்தையா முரளிதரன், பிரெண்டன் மெக்கல்லம் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

தற்போது கொச்சி அணிக்கு தீர்ப்பு சாதகமாக வந்துள்ளதால் அடுத்த ஆண்டு இந்த அணி மீண்டும் ஐபிஎல்லில் இடம் பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

The post ஐபிஎல்க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு appeared first on Oruvan.com.

ஆசிய கிண்ண தொடரில் இருந்து விலக இந்திய கிரிக்கெட் சபை முடிவு
எதிர்வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலக இந்திய கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடிக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிதியுதவி அளித்ததாலும், இந்தியா ஒபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்ததாலும், இரு நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் சமீபத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தற்போதைய ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக பணியாற்றுவதால், ஆசிய கிண்ண தொடரில் இருந்து இருந்து விலகுவது குறித்து இந்திய கிரிக்கெட் சபை பரிசீலித்துள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் சபையின் இந்த முடிவால் ஆசிய கிரிக்கெட் சபை ஆசிய கிண்ண தொடரை நடத்தாமல் கைவிடக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சூழ்நிலையில், ஆசிய கிண்ணத்தின் எதிர்காலம் நிச்சயமாக இருண்ட நிலைக்குச் சென்றுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ஆசிய கிண்ண தொடரில் இருந்து விலக இந்திய கிரிக்கெட் சபை முடிவு appeared first on Oruvan.com.

ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை – மீறினால் அபராதம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இதன்படி, வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பயிற்சிக்கு செல்லும்போது கூட வீரர்கள் தங்களது அணியின் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டும் என்றும் தனியாக பிரத்யேகமாக வாகனங்களை கொண்டு வந்து அதில் பயணிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் உறவினர்கள் வீரர்களின் ஓய்வறைக்கு வரக்கூடாது. மேலும் மைதானத்தில் வீரர்கள் பிராக்டீஸிற்கு வரும்போது உரிய அங்கீகார அட்டை கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு எடுத்து வர மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று முடிந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் யாரும் ஸ்லீவ்லெஸ் ஜெர்சியை அணிந்து வரக்கூடாது.

அப்படி இந்த விதிமுறையை மீறியும் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்சியை அணிந்து வந்தால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அதன் பிறகு கண்டிப்புடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

The post ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை – மீறினால் அபராதம் appeared first on Oruvan.com.

தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா?
இந்த ஆண்டு இறுதியில் பகுதியில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக செயற்பட ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் என்பதை பிசிசிஐ தெரிவுசெய்யாவிட்டால் ரோஹித் சர்மா அணியின் தலைவராக தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மும்பையில் நேற்று சனிக்கிழமை நடந்த கூட்டத்திலும் சர்மா பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஒரு நாள் போட்டிகளின் எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பின்னர் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவர் குறித்து முடிவெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு ரோஹித், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

பும்ரா புதிய தலைவராக தெரிவுசெய்யப்படுவாரா?

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியமிப்பது குறித்து நேற்றை கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், இந்திய கிரிக்கெட் பேரவை உறுப்பினர்கள், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா உட்பட அனைவரும் இது குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமைப் பதவிக்கு பும்ரா பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது தனது பணிச்சுமையை நிர்வகிக்கும் அவரது திறன் குறித்கும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் போது, ​​ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவங்களிலும் இந்தியாவை சில முறை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா? appeared first on Oruvan.com.

டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா?
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி டெஸ்ட் தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதி போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தொடர் முழுவதும் அதிகளவாக ரசிகர்கள் கூடியிருந்ததுடன், இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடராக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தற்போது, ​​இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவருக்கொருவர் இரண்டு முறை விளையாடுகின்றன.

ஆனால் டெஸ்ட் போட்டியை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பது குறித்த பேச்சுவார்த்தை பலனளித்தால், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்கு இரண்டு முறை விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, கிரிக்கெட் அவுஸ்திரேலியா தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தலைவர் ரிச்சர்ட் தாம்ப்சன் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை இந்த திட்டம் ஏற்கப்படும் பட்சத்தில், தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கும் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெறும் வரை செயல்பாட்டுக்கு வராது என கூறப்படுகின்றது.

அந்த வகையில், 2027ஆம் ஆண்டு வரை பல்வேறு நாடுகள் விளையாடும் கிரிக்கெட் தொடர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இதேஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியின் 150வது ஆண்டு நிறைவை கொண்டாடும் போட்டி நடைபெற இருக்கிறது.

உலகில் முன்னணியில் உள்ள அணிகள் அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்தர பட்டியலில் தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றலம் என கூறப்படுகின்றது.

அதேபோல், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இரண்டாம்கட்ட பட்டியலில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற திட்டத்தை கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்தது.

இத்தகைய திட்டம், எங்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் என்று சிறிய நாடுகளை சேர்ந்த அணிகள் முறையிட்டதால், இந்த திட்டம் பேச்சுவார்த்தை கட்டத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

The post டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா? appeared first on Oruvan.com.