anurakumaradissanayake Archives - Oruvan.com

பாதுகாப்புத் துறை மீது தொடரும் அவநம்பிக்கை – இதுதான் மாற்றமா?
(கனூஷியா புஷ்பகுமார்)

இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்ததிலிருந்து இன்று வரையில் நாட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஒரு போதும் வழங்கப்படவில்லை.

மாறாக, பாதுகாப்பு வழங்குபவர்களை கண்டு தான் பொதுமக்கள் முதலில் அஞ்சுகிறார்கள். இந்த நிலை, காலங்காலமாகவே இருந்து வருகிறது. மக்களின் நலனுக்காக பாடுபடும் பாதுகாப்பு அதிகாரிகளுள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் சிலரே உண்மையிலேயே மக்கள் நலனை கருத்திற் கொண்டு சேவை செய்கின்றனர்.

கல்வி, சுகாதாரம் என்பவை ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறதோ அதை விட அதிகமாக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எனினும், நாட்டில் அண்மையில் நடக்கும் சம்பவங்கள் எதுவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவில்லை. பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் போதைப்பொருள் பயன்பாடும் இன்னுமும் குறைவடைந்ததாக தெரியவில்லை.

இவ்வாறான சம்பங்களைத் தாண்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புத் துறையே அதில் கவனமின்றி நடந்துக்கொள்வதால் நடைபெறும் சம்பவங்கள் மக்களை கவலையயைடச் செய்வது மாத்திரமன்றி மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர், கொழும்பில் காணப்படும் பிராதான நகரங்களில் ஒன்றான மருதானை பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. குறித்த சந்தேகநபர் தமிழ் பெண் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்கொலை தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்திலும் குரல்கள் எதிரொலித்தன.

கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பொன்னையா கலாதர்ஷனி எனும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிஸார் 21ஆம் திகதி இரவு 8.45க்கு மருதானை பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த பெண் 22ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த பெண் தான் அணிந்திருந்த நீண்ட காற்சட்டையை தூக்கிலிட பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியிருந்தது.

இதனை ஒரு செய்தியாக மாத்திரம் தட்டி சென்று விட முடியாது, இதற்கு முன்னரும் கூட இது போன்று பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் போது உயிரிழந்த பல சம்பவங்கள் பதிவாகியிருந்ததை நாம் கடந்து வந்திருந்தாலும் அவற்றை மறைக்க முடியாது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் இலங்கை பொலிஸ் வரலாற்றில் புதிதல்ல.

பத்தோடு பதினொன்றாக இந்த சம்பவத்தையும் நாம் கடந்து விட முடியாது. காரணம் இதன் பின்னணியில் பல விடயங்கள் ஆழமாக காணப்படுவதே ஆகும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக உரிமைகள் காணப்படுகின்றன. நாம் ஒவ்வொருவரும் இந்த உரிமைக்கு மாறாக செயற்பட்டால் மாத்திரமே அது குற்றமாகும். நாம் தண்டிக்கப்படுகிறோம். என்பது அடிப்படையான ஒரு விடயம்.

இந்த சம்பவத்தில் பல இடங்களில் தனி மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவருகிறது.

இது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபனிடம் “ஒருவன்” செய்திச்சேவை கருத்துக்களை கேட்டறிந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த மரணத்திற்கான முழு பொறுப்பையும் மருதானை பொலிஸார் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் சட்டத்தை கையில் எடுக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டால் சந்தேகநபருக்கான முழு பொறுப்பும் பொலிஸாரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், அதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் உரிய முறையில் மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொலிஸாரால் கைது செய்யப்படும் சந்தேகநபர் ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கிறது. உரிய விசாரணைகளை மேற்கொண்டு சரியான நீதியை நிலை நாட்ட வேண்டும். அதாவது பொலிஸார் சந்தேகத்தை மாத்திரமே வெளியிட முடியுமே தவிர தீர்மானத்துக்கு வரும் அதிகாரம் நீதிமன்றத்துக்கே உள்ளது.

இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்துக்கு புறம்பானது எனினும், அவ்வாறு கைது செய்யப்படுபவர் குற்றவாளி என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். விசாரணைகளில் உயிரிழந்த பெண் போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், அதுவும் நீதிமன்றம் மூலமே நிரூபிக்கப்பட வேண்டும். அதனைத் தவிர்த்து இதனால் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தீர்மானத்திற்கு பொலிஸார் வர முடியாது.

ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை நடத்துவதற்கும் தனக்கான தொழிலை தானே தெரிவு செய்ய வேண்டும் என்பது அடிப்படை தனிமனித உரிமையாகும். ஆக, குறித்த சம்பவத்தின்படி, பல இடங்களில் தனிமனித உரிமை மீறப்பட்டுள்ளது.

அடுத்ததாக, பொலிஸ் நிலைய பாதுகாப்பு முக்கியமான ஒரு விடயமாகும். ஒரு பொலிஸ் நிலையத்தின் விளக்கமறியல் என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாகும். 24 மணித்தியாலமும் விளக்கமறியல் பாதுகாப்பு அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார். அப்படியெனில் குறித்த பெண் தற்கொலை செய்ய முற்பட்ட போது அதிகாரிகள் எவரும் பணியில் இருக்கவில்லையா அல்லது அவதானமாக இருக்கவில்லையா என்றொரு கேள்வி எழுகிறது.

விளக்கமறியலுக்குள் தூக்கிடும் அளவிற்கு வசதிகள் இருக்கின்றனவா என்பது மற்றொரு கேள்வி. ஆக, இந்தக் கேள்விகளுக்கு நிச்சயமாக பொலிஸார் பதிலளிக்க வேண்டும். குறித்த பெண்ணின் மரணம் பல கோணங்களில் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. பொலிஸ் நிலையமாக இருந்தாலும் சரி, சிறைச்சாலையாக இருந்தாலும் சரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களாக இருக்கட்டும், தண்டனைப் பெற்ற குற்றவாளியாக கூட இருக்கட்டும் அவர்களின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பும் பாதுகாப்பு தரப்பினரிடமே உள்ளது.” எனத் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பு என்பது பொலிஸாரையும், இராணுவத்தினரையும் சார்ந்தே உள்ளது. எனினும், இந்த சம்பவம் மாத்திரமன்றி பல சம்பவங்களில் பொதுமக்களின் பாதுகாப்பில் அக்கறையற்ற விதத்தில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்டிருப்பதை நாம் பல செய்திகளில் கேட்டிருப்போம்.

ஆக, குற்றம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அதற்குரிய சட்டங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அதற்கமைய சட்டங்கள் அமுல்படுத்தப்படின் அதுவே போதுமானதமாக இருக்கும். இவ்வாறு பொலிஸார் சட்டத்தை கையில் எடுப்பதால் மக்களுக்கு பாதுகாப்பு துறை மீதான அவநம்பிக்கையே அதிகரிக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது இது முதல் தடவை அல்ல. சந்தேகநபராக இருந்தாலும் உயிரிழந்தவரும் ஒரு பெண். அவருடைய பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் எந்தவொரு விடயமும் முன்வைக்கப்படக் கூடாது என்பது சட்டத்தரணிகளின் வாதம்.

எவ்வாறாயினும், மாற்றத்தை கொண்டு வருவதாக உறுதி பூண்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் நுணுக்கமான விசாரணைகளை ஆரம்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அதுவே சிறந்த ஒரு எதிர்காலத்துக்கும் சிறந்த ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

The post பாதுகாப்புத் துறை மீது தொடரும் அவநம்பிக்கை – இதுதான் மாற்றமா? appeared first on Oruvan.com.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
அரசியல் சுய இலாபங்களுக்காகவும், பதவி ஆசை மற்றும் அதிகாரத் திமிர் ஆகிய காரணங்களுக்காகவும் இலங்கை அரசியல்வாதிகள் பலர் பல நுட்பங்களை கையாண்ட வரலாறுகள் உண்டு. அவை வெளிப்படுத்தப்பட்ட வரலாறுகளும் உண்டு.

தேர்தல் மேடைகளில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக பல போலி வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

2022 ஆம் ஆண்டு நாடு மீள எழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும் மீண்டும் ஞாமூட்ட தயங்கும் ஒரு கசப்பான இறந்தகாலம் இலங்கை மக்களுக்கு காணப்பட்டது.

பொருட்களின் விலையேற்றம், பணம் இருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை, வரிசை யுகம், உயிரிழப்புகள் என பல நெருக்கடிகளையும் சிக்கல்களையும் நாடு எதிர்கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு வருமானம் என்பது அவசியமாக இருந்தது உண்மைதான். எனினும், அது எந்தவகையிலாவது இருக்க வேண்டும் என மக்கள் கோரவுமில்லை அப்படியான ஒரு வருமானம் தேவையும் இல்லை.

அரசியல் அடிப்படையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதைய அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை மீள கட்டியெழுப்பவே இம்முறை கையாளப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை சரியான ஒரு விளக்கமாக ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தனது சுய அரசியல் இலாபங்களுக்காக மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கி விட்டு அவை வெளிவந்தவுடன் அதற்கு சிறுகுழந்தைப் போல சாக்குபோக்கு கூறும் அரசியல் ஜாம்பவான் இன்னும் சற்று சிந்தித்து பொருத்தமான ஒரு விளக்கத்தை வழங்கியிருக்கலாம்.

புதிய அரசாங்கம் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி தொடர்பில் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும், அதற்கான சட்ட நடவடிக்கையும் வெகு விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் இவ்விடயம் முழுமையடையும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலப்பகுதியில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வெளிப்படுத்தியிருந்தார்.

அதில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த சர்ச்சை தொடர்பிலேயே ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தார்.

எனினும், ரணில் வழங்கிய இந்த பதில் மக்களுக்கு திருப்திகரமானதாக இல்லை.

நாட்டுக்கு வருவாய் வேண்டும் என்பது நியாயமான ஒன்றாக இருந்தாலும், அதற்காக எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற ஒரு உரிமை யாராலும் யாருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

ஆக, ரணிலின் இந்த பதில் பல கேள்விகளை எழுப்புகிறது.

அரசியல் அடிப்படையில் வழங்கவில்லை எனக் கூறுகிறீர்கள், அப்படியானால் அரசியல்வாதிகளுக்கு ஏன் வழங்கினீர்கள்?

மக்களை குடி போதைக்கு ஆளாக்கி அடிமையாக்கி நாட்டுக்கு கிடைக்கும் வருவாய் எதற்கு? அதனால் பயன் பெறுபவர்கள் யார்?

இவ்வாறு வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பத்திரங்களால் நாட்டுக்கு தான் வருவாய் என கூறுகிறீர்களே, அப்படியெனில் இந்த விடயம் தொடர்பில் ஏன் நாடாளுமன்றத்திலோ, மக்களுக்கு உரையாற்றும் போதோ அல்லது எந்தவொரு தேர்தல் மேடையிலோ பகிரங்கமாக அறிவிக்கவில்லை?

இந்த கேள்விகளுக்கு நிச்சயம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்.

யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு அதற்கு பின்னர் கூறும் சிறுபிள்ளை காரணங்களை கேட்டுக் கொண்டு பேசாமல் இருக்க மக்கள் இன்னும் முட்டாள்கள் அல்ல.

புதிய மாற்றமொன்றை நோக்கி புதிய அரசியல் மறுமலர்ச்சியை நோக்கி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மறுபடியும் அவர்களை முட்டாள்களாக்க முயற்சித்தால் அதன் விளைவும் ரணிலையே சாரும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பயன்படுத்தி அதி உட்ச மோசடியில் ஈடுபட்டுள்ளமை தற்போது வெளியாகியுள்ளது. நிச்சயம் அநுர அரசாங்கம் இதற்கு சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முறைகேடாக பயன்படுத்தி மேற்கொண்ட கீழ்தரமான ஒரு செயலாக இவ்விடயம் பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரசாரங்களின் போது இளைஞர்களுக்கான எதிர்காலம் இயலும் ஸ்ரீலங்கா என்று மார்தட்டியவர், இளைஞர்களுக்கு மதுபானசாலைகளை தான் மிச்சம் வைத்துள்ளார்.

அரசாங்க வருமானத்திற்காகவே மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கினேன் எனக் கூறுவதில் என்ன பெருமை உள்ளது.

புதிய ஜனாபதியாக அநுரகுமார பதவியேற்பார் எனத் தீர்மானிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், “ நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என வாழ்த்து தெரிவித்திருந்தார் ரணில் விக்கிரமசிங்க.

எந்த தந்தை தன்னுடைய குழந்தை தீய வழியில் செல்வதை விரும்புவார்?

இது ஒரு தேசத்துரோகம், செய்த குற்றத்தை மறைக்க எத்தனை விளக்கங்கள் வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

“ஒருவன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்”

The post நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே! appeared first on Oruvan.com.