Anurakumara dissanayaka Archives - Oruvan.com

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!
சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழ வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன்.

இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவ வேண்டும்.

பெத்லகேமில் ஒரு ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும், ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்.

The post ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி! appeared first on Oruvan.com.

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி
ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மறுநாள் இரண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதேவேளை யாழ் வருகை தரவுள்ள ஜனாதிபதி, காணி விடுவிப்பு, தையிட்டி விகாரை பிரச்சனை, பலாலி வீதி முழுமையாக திறந்து விடல் போன்றவற்றுக்கு தீர்க்கமான முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட்டு, புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி appeared first on Oruvan.com.

பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மாலினி பொன்சேகாவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு நேற்று (25) மாலை சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கை சினிமாவின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் மறைவுக்காக கலைத்துறையில் உள்ள அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி appeared first on Oruvan.com.

மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை
ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த சிறப்புக் கூட்டத்தின் போது, ​​இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இந்த முன்மொழிவை முன்வைத்தனர், ஆனால் ஜனாதிபதி அதற்கு உடன்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், சபை நிதி ரீதியாக நிலையற்றதாகிவிடும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியமும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணங்களைப் பராமரிப்பதால் நிதி ஸ்திரமின்மை ஏற்படாது என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இலங்கைக்கு மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் மறுசீரமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை appeared first on Oruvan.com.

ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்?
அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை – பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது.

குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, தேர்தல் மேடைகளில் அவ்வாறு கூற முடியாது. இனிமேல் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்கிறார் அநுர.

ஆனால் ஒரு அரசுக்குரிய நிதி – நீதி- நிர்வாகம் மற்றும் முப்படைகள் அனைத்தையும் பயன்படுத்தி 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைகள் எத்தனை?

2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அரசாங்கம், தமிழ் வரலாற்று பாட நூல்களில் பௌத்த சமய வரலாறுகளை புகுத்தியது. பாட நூல்களில் சிங்கள சொற்கள் புகுத்தப்பட்டுள்ளன. அதாவது பாட நூல்களில் சிங்கள இனவாதம் புகுத்தப்பட்டுள்ளது.

ஐ.நாவின் யுனெஸ்கோ கல்வி முறையின் பிரகாரம் பாட நூல்கள் அந்தந்த தேசிய மொழிகளிலேயே எழுதப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் சிங்கள மொழியில் இருந்து தான் தமிழ் பாட நூல்கள் மொழி பெயர்க்கப்படுகிறது.

அதுவும் வரலாற்று பாட நூல்கள் மொழி பெயர்க்கப்படுவது மிகத் தவறு ”தமிழ்மொழி” ”சைவ சமயம்” ”இஸ்லாமிய சமயம்” ஆகிய பாட நூல்களை தவிர ஏனைய அனைத்து தமிழ் பாட நூல்களிலும் சிங்களம் தான் பாட நூலின் ”மூலம்” ஆக உள்ளது.

பிரதானமாக வரலாறு 2015 இல் நல்லாடசி என்று அழைக்கப்பட்ட அரசாங்கம் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை, கொழும்பை மையமாகக் கொண்ட தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களம், காணி பதிவு திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைகள் மூலம் சட்டரீதியாக கைப்பற்றும் அணுகு முறைகளை அறிமுகப்படுத்தி இருந்தது.

காணிகளை அபகரிக்க முப்படைகள் மற்றும் பொலிஸாரை அரசாங்கம் அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வருகிறது. இந்த அணுகுமுறை 2020 இல் கோட்டாபய ஜனாதிபதியாக வந்ததும் தொடர்ந்தது.

இது அநுர ஆட்சியிலும் தொடர்கிறதே? சட்டவிரோத விகாரைகளை அகற்ற உத்திரவிட முடியுமா?

இப்போது கேள்வி என்னவென்றால் அநுர கூறிய ”மாற்றம்” ”சோசலிம்” என்றால் என்ன?

அத்துடன், பாட நூல் விவகாரம் உள்ளிட்ட அத்தனை அநீதிகளையும் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் இருந்து செய்து கொண்டு, இனவாத அரசியலுக்கு இடமில்லை என்று எந்த முகத்தோடு கூறுகிறார் அநுர?

இனவாத அரசியலை 1920 ஆம் ஆண்டில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வெவ்வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்வது யார்?

2009 மே மாதம் போரை வெற்றி கொண்டு விட்டதாக பெருமைப்பட்டு கொழும்பில் வெற்றி விழா கொண்டாடினார்கள் சரி.

இனிமேலாவது குறைந்த பட்சம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏதேனும் குறைந்தபட்ச தீர்வையாவது முன்வைக்க வேண்டும் என்று எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவராவது கடந்த 15 வருடங்களில் சிந்தித்தாரா?

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஐந்தில் ஆறு பெரும்பான்மை வாக்குகளினால் 1988 இல் 13 நிறைவேற்றப்பட்டுள்ளது!

மேலும் சில கேள்விகள்—-புரிதல்கள்—

2009 இற்குப் பின்னர் கடந்த 15 வருடங்களில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனையை இளைஞர்களிடம் ஊக்குவிப்பது யார்?

தமிழர் பிரதேசங்களில் ”மண் அகழ்வு” – ”காடுகளை அழித்து மரங்களை வெட்டுல்” போன்ற சட்ட விரோத செயலுக்கு ஒத்துழைப்பது யார?

தமிழக மீனவர் பிரச்சனை தூண்டப்படுவது யாரால்?

2009 இற்கு முன்னரும் – பின்னரும் வடக்குக் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு தீனி போட்டு வளர்ப்பது யார்? பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது ஏன்?

ஊழலை ஒழிப்போம் அதிகார துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் என்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் சத்தியம் செய்து விட்டு, தற்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார மேடைகளில், சலுகைகள் – நிவாரணங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவது சரியா?

அது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று அநுரவுக்குத் தெரியாதா? அது மாபெரும் ஊழல் மோசடி என்று அநுரவுக்கு புரியாதா?

அது தவறு என்று சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு கூட அநுராவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதே! ஆகவே தமிழ்த் தேசிய கட்சிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற இனவாதம் எங்கிருந்து வருகிறது?

இக் கேள்விகளுடன் ஒப்பிடுகையில், ஜேஆர் – சந்திரிகா – மகிந்த – கோட்டா – ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடவில்லை. ஆக இலங்கை என்பது ”ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பு” எவர் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் தமிழர்களின் நிலை.

அ.நிக்ஸன்

The post ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்? appeared first on Oruvan.com.

முழு நாடே எதிர்ப்பார்க்கும் முக்கிய விசாரணை – ஜனாதிபதி வெளியிட்ட விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் உற்று நோக்கும் மிக முக்கியமான சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே, சில தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த நேரத்தில், விசாரணைகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என்பதை மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று ஜனாதிபதி நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியால் பதுளையில் நடத்தப்பட்ட மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

நாடு தழுவிய மிக முக்கியமான சம்பவம் குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. இருப்பினும், விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே அவற்றில் சில தகவல்கள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். எங்கள் விசாரணைகளில் நாங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறோம். நான் அதனை உறுதியாகச் சொல்ல முடியும்.

இதுவரை பேசாதவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சாட்சியமளிக்க பயந்த மக்கள் சாட்சியமளிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் சம்பந்தப்படவில்லை என்று கூறியவர்கள் தங்கள் தொடர்புகளை வெளிப்படுத்துகிறார்கள்.

எனவே, விசாரணைகள் நல்ல முறையில் முன்னேறியுள்ளன. இந்த நாட்டில் நடைபெறும் எந்தவொரு குற்றமும் மறக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய பாடுபடுவோம் என்றும் உறுதியளிக்கிறோம்.

கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நாம் மனதில் வைத்திருக்கும் இலக்குகளுக்காக இவர்களை கைது செய்ய முடியாது. நீதிமன்றத்திற்குச் சென்று அவரைத் தண்டிக்க நல்ல ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

எனவே, இதற்கு சிறிது நேரம் எடுக்கும், ஆனால் எவ்வளவு காலம் எடுத்தாலும் நீதியை வழங்க எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எந்தக் குற்றமும் காலத்தின் மணலால் மூடப்பட அனுமதிக்கப்படாது.” என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

The post முழு நாடே எதிர்ப்பார்க்கும் முக்கிய விசாரணை – ஜனாதிபதி வெளியிட்ட விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்திய பிரதமரும் இந்த திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் பெயர் பலகையை திறைநீக்கம் செய்யப்பட்டு ரயில் வீதி மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் செல்வதற்கான முதலாவது சமிக்ஞை காண்பிக்கப்பட்டது.

இந்திய Credit Line இன் கீழ் செயற்படுத்தப்படும் மஹவ – ஓமந்தை ரயில் வீதி நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பெறுமதி 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அதேபோல், 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஸ்தாபிக்கப்பட்ட மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிச்ச, வட மத்திய மாகாகண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

The post மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு appeared first on Oruvan.com.

புதிய மறுமலர்ச்சிக்கான பயணத்தில் பெண்கள் தலைமுறையினரின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி
பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூலம் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியில்,

“சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம் என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

பல தசாப்தங்களாக கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும் வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் இருபத்தி இரண்டு பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல், ஆண்- பெண் சமூக சமத்துவத்திற்கான சமூக நீதியை அடைவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையான உற்பத்திப் பொருளாதார செயல்பாட்டில், இந்நாட்டின் சனத்தொகையில் 51.7% ஆக இருக்கும் பெண்களை தீவிரமாகவும் செயற்திறனுடனும் ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம்.

நீதியான சமூகம், சுதந்திரமான நாடு, சுதந்திரமான பெண்கள் என்ற அபிலாஷைகளை அடையும் வகையில் வீடு, போக்குவரத்து, சமூகம், தொழிலிடம் மற்றும் அரசியல் உட்பட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் போன்ற பெண்களின் தனித்துவமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரச கொள்கைகளை வகுப்பதற்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.

இதற்கமைய, ” சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம்,உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் ” நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் ” என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதிலுள்ள அர்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம் என்பனவற்றை நினைவூட்ட வேண்டும்.

பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்த்து சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது மனார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிய மறுமலர்ச்சிக்கான பயணத்தில் பெண்கள் தலைமுறையினரின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது
பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, தொடர்புடைய பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமீப நாட்களாக மக்களிடம் நெருங்கமாக இருப்பதையும், கூட்டங்களை நடத்துவதையும், அவர்களுடன் சுமுகமாகப் பேசுவதையும் காண முடிகிறது.

இந்த நடைமுறை ஜனாதிபதியின் பாதுகாப்பிற்குப் பொருத்தமானதல்ல என்ற கருத்தையும் சில விமர்சகர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த நேரத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க, அவரது பாதுகாப்பு கண்டிப்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று பல தரப்பினர் கருதுகின்றனர்.

இதன் காரணமாக, பொதுமக்களுக்கு அருகாமையில் இருப்பதைக் குறைக்குமாறு பாதுகாப்புப் படையினர் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

The post பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது appeared first on Oruvan.com.

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி
பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றம் காண்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

“இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர்.

துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை.

அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார்.

இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம்.

சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் யேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும். இது ஒரு மறுமலர்ச்சியாகும்.

அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு-அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன், மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும் , கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம்.

வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!”

The post ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி appeared first on Oruvan.com.