விஜய் Archives - Oruvan.com

‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ – தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் சற்று முன்னர் பதவியேற்றார்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது.

வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது.

பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, மூன்றாவதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தின் 18 ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என விஜய் உறுதிமொழியளிக்க ஆரம்பித்ததும் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் எழுச்சியுடன் குரலெழுப்பினர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர்,தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அவருக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவளித்தன. விசிக நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது. அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை விட அதிகமாக ஆதரவு கிடைத்தது

The post ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’  – தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய் appeared first on Oruvan.com.

தமிழக தேர்தல் களம் அமைதியுற்றது – அதிகாரத்தை கைப்பற்றப் போவது யார்?
தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரலாற்று பின்னணி,  புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக கூட்டணியும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தல், வெறும் ஆட்சிப் போட்டி மட்டுமல்ல தலைமுறைகள் மாறிய அரசியலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் தனித்துப் போட்டியிடுவது, இந்தத் தேர்தலை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ளது . இதனால், பாரம்பரிய வாக்கு வங்கிகள் சிதையுமா? புதிய அரசியல் சக்திகள் எழுச்சி காணுமா என்ற கேள்விகள் வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ளன.

கருணாநிதி–ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ள நிலையில், இந்த முறை மக்களின் தீர்ப்பு எந்த திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசியலில் முக்கியமான நாட்களாக 2026 ஏப்ரல் 23 மற்றும் மே 04 ஆகிய திகதிகள் கருதப்படுகின்றன.ஏனெனில் ஆட்சியை தக்க வைக்க முயலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, இழந்த ஆட்சியை கைப்பற்ற விரும்பும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி என இரு பழம்பெரும் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் மோதுகின்றன.

இந்த சூழலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  அதேபோன்று விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

நான்கு முனை போட்டி இந்த தேர்தலை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றி இருக்கிறது. இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை உண்டாக்குமா என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இரு பெரும் அரசியல் ஆளுமைகளாக திகழ்ந்தனர். அவர்களின் மறைவை அடுத்து தமிழ்நாடு சந்திக்கக்கூடிய இரண்டாவது சட்டப்பேரவை தேர்தல் இது.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடத்தப்பட்ட நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 234 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றது.

அந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது. 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைப்பது அதுவே முதன்முறை. 2016 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா அதே ஆண்டில் டிசம்பர் 5 ஆம் திகதி மரணமடைந்தார். அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என அடுத்தடுத்து முதல்வர் பதவி மாறியது. அதன் பின்னர் அதிமுக கட்சிக்குள்ளேயும் பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டன.

இந்த சூழலில் ஜெயலலிதாவும் , கருணாநிதியும் மறைந்த பின்னர் முதன் முறையாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுகவின் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. அதுவும் அதிமுகவுக்கு வெறும் 66 இடங்கள்தான் கிடைத்தன. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை திமுகவுக்கு வட மாவட்டங்களும் காவிரி டெல்டா மாவட்டங்களும் பெருமளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்தன.

குறிப்பாக சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் 64 தொகுதி திமுகவுக்கு கிடைத்தது. திமுக அருதி பெரும்பான்மை பெறுவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது.

அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். அவரது தமிழக வெற்றி கழகம் இந்த முறை 233 தொகுதிகளிலும் களம் காண்கிறது. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், மே மாதம் நான்காம் திகதி முடிவுகள் வெளியாகும். இந்த தேர்தலில் மொத்தம் 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்று மாலை 06 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் களம் அமைதியுற்றுள்ளது.

ஆகவே பழைய ஆதிக்க அரசியலும், புதிய மாற்றத்திற்கான குரலும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தல், தமிழ்நாட்டின் அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்யக்கூடிய தருணமாக பார்க்கப்படுகிறது.

கூட்டணிகளின் கணக்குப் போர்கள், தனித்து நிற்கும் கட்சிகளின் சவால்கள், புதிய தலைமுறையின் அரசியல் ஆசைகள் இவை அனைத்தும் சேர்ந்து இந்தத் தேர்தலை சாதாரணமாக அல்ல, தீர்மானம் மிக்க தேர்தலாக மாற்றியுள்ளன.

மே 4 ஆம் திகதி வெளியாகும் முடிவுகள், வெறும் வெற்றியாளரை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலப் பாதையையும் தீர்மானிக்கப்போகின்றன. மாற்றமா ஏற்படுமா அல்லது தற்போதைய ஆட்சி தொடருமா என்ற இறுதி கேள்விக்கான பதில் மக்கள் கையில்.

பாலகணேஷ் டிலுக்ஷா

The post தமிழக தேர்தல் களம் அமைதியுற்றது – அதிகாரத்தை கைப்பற்றப் போவது யார்? appeared first on Oruvan.com.

மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய்
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

“ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?

நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் காணும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்? திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்? ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.

இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.

நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,அளக்கமுடியாத ஆழ்கடல் – விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.நேர்மையின் நெருப்புக்கோளம் – மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் – ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று.

இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்? பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்? மக்களே… மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.

எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.

இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது.

அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.” என்று கூறி தவெகவுக்கு வாக்கு கோரியுள்ளார்.

The post மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய் appeared first on Oruvan.com.

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

முன்னதாக வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். நேற்று மற்றும் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சிக்கு சென்றார்.

இந்நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அதன்பின்னர் காந்தி மார்க்கெட், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக விமான நிலையத்துக்கு சென்று சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி களநிலவரம் என்ன..?

த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது உருவானது. மலைக்கோட்டை தாயுமானவர் கோவில், நத்தர்ஷா பள்ளிவாசல், லூர்து அன்னை ஆலயம் ஆகியவை இந்த தொகுதியின் ஆன்மிக ஸ்தலங்கள் ஆகும். திருச்சியின் மையப்பகுதியில் இந்த தொகுதி இருப்பதால், முழுக்க முழுக்க நகர்ப்புற தொகுதியாகும். திருச்சி மாநகராட்சியின் சில வார்டுகள் இந்தத் தொகுதியில் வருகின்றன.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வும், 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை வெற்றி பெற்ற இனிகோ இருதய ராஜே, இந்த முறையும் தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பில் க.ராஜேசேகரன் களத்தில் இருக்கிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் கோதாவில் குதிப்பதால், இங்கு மும்முனை போட்டி நிலவுவது உறுதி.

திருச்சி கிழக்கு தொகுதியிலும் பெண்கள், இளம் வாக்காளர்கள், கிறித்தவர்கள் வாக்கு அதிகம் உள்ளது. இந்த வாக்குகளை வைத்துத்தான் கடந்த முறை இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார். இந்த முறை, அந்த வாக்குகள் விஜய் பக்கம் திரும்பினால், அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்று கூறப்படுகிறது.

The post திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய் appeared first on Oruvan.com.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று (மார்ச் 29) அறிவித்தார்.

இந்த அறிவிப்பில் முதல் இரண்டு தொகுதிகளாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

டி.நகரில் புஸ்ஸி ஆனந்த், செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வடசென்னை மக்களவை தொகுதியில் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அமைந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் 1.05 லட்சம் வாக்குகளை பெற்று, ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த முறை மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது.

2019 இடைத்தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றிருந்தார். இந்த தொகுதியில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக திருச்சி கிழக்கு தொகுதி அமைந்துள்ளது.

2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், 94,302 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சிட்டிங் எம்.எல்.ஏவான அவருக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது திமுக. 2016 மற்றும் 2011 தேர்தல்களில் அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்றது.

The post பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி appeared first on Oruvan.com.

ஜன நாயகன் வழக்கு விசாரணையில் திருப்பம்!! மேம்முறையீடு செய்ய முடிவு
ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தணிக்கை குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திங்கள் கிழமை மேல்முறையீடு மனுவை விசாரிக்க தணிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று வெளியாகவிருந்த படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஜனநாயகன் தரப்பு வைத்த சில முக்கியமான வாதங்கள் வழக்கு வெற்றிபெற காரணமாக அமைந்தது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தணிக்கை குழு அறிவித்துள்ளது.

KVN தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் படத்தை 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது.

படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் பெருமளவில் நிதி இழப்பீடு ஏற்படும் என KVN தயாரிப்பு நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

The post ஜன நாயகன் வழக்கு விசாரணையில் திருப்பம்!! மேம்முறையீடு செய்ய முடிவு appeared first on Oruvan.com.

சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் – திருமாவளவன் விமர்சனம்
சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பல மாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விசிக சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக மத நல்லிணக்கத்தை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகள், சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராடியிருக்கிறார்களா? தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் பிரச்சினைகள் பற்றி நாங்கள் திமுக கூட்டணியிலிருந்தாலும் எதிர்த்து பேசுகிறோம்.

பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப் பில்லை. ஓட்டுகளை பெறுவதற்காக நான் கவலைப்படப்போவதில்லை. கலங்கியதும் இல்லை. திருமாவளவன் இப்படி பேசுகி றாரே என திமுக நினைத்தால்கூட அதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

மொழிக்காக, இனத்துக்காக தீக்குளித்தவர்கள் உண்டு. ஆனால் மதவெறியை தூண்டி பூரணசந்திரன் தீக்கு ளிக்க வைத்தது ஆர்எஸ்எஸ் கும்பல். இந்துக்களை ஏமாற்றும் செயலை வெளிப்படுத்து கிறோம். நீதித்துறை, காவல் துறை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அனைத்திலும் சங்கிகள் உள்ளனர்.

இங்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சுவாமி நாதன் வடிவத்தில் சங்கி உள்ளார். திமுக ஒரு தீய சக்தி என்று கட்சி ஆரம்பித்த தம்பி விஜய் சொல்கிறார். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்எஸ்எஸ்-க்காக கட்சி தொடங்கியுள்ளீர்கள் என்பது தெரிகிறது. திமுகவை அழிக்க முடிந்தால் அழித்துக் கொள்ளுங்கள்.

அதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. எங்களது கொள்கையோடு ஒத்துப் போவதால்தான் திமுக வோடு இருக்கிறோம். சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்று அம்பலமாகியிருக்கிறது. இது தெரிந்தும் திமுக காரர்கள் வேண்டுமானால் வாய்மூடி இருக்கலாம், அமைதியாக இருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் திமுக வையும் விமர்சிப்பவர்கள்தான். எனது தாத்தாவும், அப்பாவும் அரசியல்வாதி கிடையாது. தனியாளாக தாக்குப்பிடித்து தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் – திருமாவளவன் விமர்சனம் appeared first on Oruvan.com.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி புதுச்சேரி பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

எதிர்வரும் ஒன்பதாம் திகதி நடக்கவுள்ள இந்த மாநாட்டிற்கு என தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதுச்சேரி பொலிஸார் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.

இதன்படி, தமிழக வெற்றிக் கழகம் வழங்கு கியூஆர் கோட் உடன் கூடிய நுழைவுச்சீட்டு வரும் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி அட்டை இல்லாத எவருக்கும் கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்த முடியாது எனவும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர காலங்களில் வெளியேறும் வழி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாநாட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி புதுச்சேரி மாநாட்டிற்கு இவ்வாறு அனுமதி மறுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு appeared first on Oruvan.com.

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” – சீமான் கடும் விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

ஒரு வழக்கு போட்டதும் தமிழக வெற்றிக் கழக கட்சியே தலைமறைவாகிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார்.

விஜய் மீது சீமான் அட்டாக்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அப்போது ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசுகையில், “திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து பேசினார்.

இறுதியாக விஜயையும், அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தையும் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். அதன்படி சீமான் பேசுகையில், “நீங்கள் கூட்டத்தை பார்க்கிறீர்கள் அது கூடும், கலையும்.

ஆனால் என் கூட்டம் கூடும் ஆனால் கலையாது. ஏனென்றால் நான் கட்டுவது கொள்கை கோட்டை. குட்டிச்சுவர் அல்ல. ஒரு வழக்கு போட்டதும் யார் எங்கு? சென்றார்கள் என்றே தெரியவில்லை. கட்சியே தலைமறைவாகிவிட்டது. 260 வழக்குகள் போட்ட பிறகும் இன்றும் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன்.

விஜயின் வாக்குறுதியை விமர்சித்த சீமான்

தயவு செய்து என்னை கைது செய்யுங்கள் என இந்திய மண்ணில் கெஞ்சும் ஒரே தலைவன் நான் மட்டும் தான். சிவானின் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால், சீமானின் ஆட்டத்தை இந்த முறை களத்தில் காண்பீர்கள்.

இவனை மாதிரி பிக்காலி பயனா நான். மோட்டர் பைக் தருகிறேன், கார் தருகிறேன் என்கிறார்கள். பெட்ரோல் யார் தருவான்? வீட்டுக்கு ஒரு கார் தருவேன் என வாக்குறுதி அளித்துவிட்டு, அம்பேத்கர் புகைப்படத்தை அனுப்புவேன்.

கேட்டால் உலகிலேயே சிறந்த கார் அம்பேத்கர் என நான் நகைச்சுவையாக சொன்னதை இவர்கள் உண்மையாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சோறு இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்க கார் தருகிறார்களாம். நான் ஆட்சி அமைப்பேன். இல்லையென்றால் நான் இல்லாமல் எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது” என சீமான் சூளுரைத்துள்ளார்.

விஜய் புதியதாக அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்ததும், முதல் ஆளாக சீமான் ஆதரவு தெரிவித்தார். ஆனால், தமிழ் தேசியத்திற்கு மாறாக திராவிட கொள்கைகளை பின்புலமாக கொண்டு செயல்பட உள்ளதாக விஜய் அறிவித்தது முதலே, சீமான் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார். விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக சீமான் விமர்சித்துள்ளார். அந்தவகையில் தான் அண்மையில் காஞ்சிபுரத்தில் பேசும்போது, வீட்டிற்கு ஒரு பைக் நிச்சயம், கார் லட்சியம் என விஜய் பேசியிருந்தார். அதனை தற்போது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

The post ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” – சீமான் கடும் விமர்சனம் appeared first on Oruvan.com.

விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்
அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அண்மையில் கட்சியின் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்த அவர் இன்று காலை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நான்கு மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே செங்கோட்டையனை தொடர்ந்து புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் appeared first on Oruvan.com.