மாவை சேனாதிராஜா Archives - Oruvan.com

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (31) பிற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களை கூறினார்.

போக்குவரத்து, பெருந்தெருக்கல்,துறைமுகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

The post மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி appeared first on Oruvan.com.

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாவை சேனாதிராஜா தனது 19 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கி 83 வயதுவரை முழுநேர அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.

போருக்கு முன்னரும் பின்னரும் என இவரது அரசியல் நகர்வுகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட காலத்திலும் இவரது பணி காத்திரமாக இருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா.

அன்னாரின் இழப்பு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் மிகநெருங்கிய உறவு இருந்தது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் முதல் இந்த உறவு தொடர்ந்தது. மலையக தமிழ் மக்களுக்காக இ.தொ.காவுடன் இணைந்து அவர் பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்துள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் மக்களுக்கும் இ.தொ.கா சார்பாக தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன்,

அவர் விட்டுச்சென்ற பணிகளை தமிழரசு கட்சி தொடர வேண்டும்.” என்றும் செந்தில் தொண்டமான் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

The post மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல் appeared first on Oruvan.com.

மாவை கடந்துவந்த பாதை…!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.

நரம்பு வெடிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மாவை சேனாராதிராஜா, சிகிச்சை பலனின்றியே உயிரிழந்துள்ளார்.

ஈழத் தமிழர்களில் அரசியலில் இவரது பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இவர் செயல்பாட்டு அரசியலில் இருந்து ஓரளவு ஒதுங்கியிருந்தாலும், தமிழரசுக் கட்சியின் தலைவராக தொடர்ந்து செயல்பட்டிருந்தார்.

கடந்துவந்த பாதை

1942ஆம் ஆண்டு பிறந்த மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். யாழ்ப்பாணம் மாவட்ட மாவிட்டபுரத்தில் பிறந்து 1961ஆம் ஆண்டு  முதல் அரசியல் போராட்டங்களில் பங்கேற்று வந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் முதலில் பணியாற்றினார். பின்னர் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்தார்.

ஈழத் தமிழர் அரசியல் போராட்டங்களில் பங்கேற்றதால் அரசால் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா. 1980களின் இறுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஈபிஆர்எல்ப், டெலோ இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டார். ஈழத் தமிழர் தலைவர்கள் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் படுகொலைகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரானராக தேர்வானார்.

தமிழீழ விடுதலைப் புலிகளாள் அனைத்து ஈழத் தமிழர் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகவும் போட்டியிட்டு வென்றார். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈழத் தமிழரின் ஏகப் பிரதிநிதி என்ற கோட்பாட்டையும் ஏற்றார்.

2014ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவராக மாவை சேனாதிராஜா செயல்பட்டார்.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் மாவை சேனாதிராஜா. அவரது மறைவுக்கு சிங்கள, மலையக, ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post மாவை கடந்துவந்த பாதை…! appeared first on Oruvan.com.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமிழரசை முடக்கச் சூழ்ச்சி – மாவை கடும் குற்றச்சாட்டு
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களே எனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் கட்சியின் தற்போதைய அரசியல் குழுத் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“குறுக்கு வழியில் தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தவர்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.  அவர்களின் சுயநல நடவடிக்கைகளால்தான் எமது கட்சி பலவீனமானது.

போர் முடிவுக்கு வந்த பின்னர்  இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்க வேண்டும் என்று தென்னிலங்கை விரும்பியது. ஆனால், நானும் முன்னாள் தலைவர் சம்பந்தனும் தமிழரசுக் கட்சியைப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாதுகாத்தோம். இதெல்லாம் எமது கட்சியைத் தற்போது முடக்க முயலும் சூழ்ச்சிக்காரர்களுக்கு – மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.

தமிழரசுக் கட்சிக்குள் வந்து அரசியல் முகவரி தேடிய இந்தச் சூழ்ச்சிக்காரர்கள், கட்சியை முடக்க முயல்வது அசிங்கமானது. அவர்கள் நன்றி மறந்தவர்கள். அவர்களின் எண்ணம் நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம்.” – என்றார்.

The post மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமிழரசை முடக்கச் சூழ்ச்சி – மாவை கடும் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

கட்சியின் வெற்றிடமான பதவியை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவிற்கே உள்ளது – எம்.ஏ.சுமந்திரன்
கட்சியில் வெற்றிடமான பதவியினை நிரப்பும் அதிகாரம் யாப்பின் படி மத்தியசெயற்குழுவிற்கே உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்எ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. எனவே மாவை சேனாதிராஜா தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருந்தது. அதனை உபயோகித்து அவர் கடந்த ஒக்டோர்பர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

கட்சியின் யாப்பின் பிரகாரம் ஒரு பதவி வெற்றிடமானால் அதனை நிரப்பவேண்டிய பொறுப்பு கடமை அதிகாரம் மத்தியசெயற்குழுவிற்கே இருக்கிறது. அதனை இன்று செய்துள்ளது.

தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதாக அவர் வாய்மொழி ஊடகவோ எழுத்து மூலமாகவோ அறிவிக்கவில்லை. அவருக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனவே அதன்பின்னரே கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று செயலாளர் அவருக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை மாவை சேனாதிராஜா கட்சியின் பெருந்தலைவராக நியமிக்கப்பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. அரசியல்குழு தலைவராக சம்மந்தன் அவர்களை நியமித்தபோதும் பெருந்தலைவர் என்றே அழைத்தோம்.

அவ்வாறு மாவைசேனாதிராஜாவை அழைப்போம் என நான் பிரேரித்திருந்தேன், ஆனால் யாப்பிலே அப்படி ஒரு பதவி இல்லை, எனவே யாப்பின்படி நாங்கள் செல்லவேண்டும் என்று சிறிதரன்கூறியதன் காரணத்தினால் பெருந்தலைவர் என்ற சொற்பதத்தை நாங்கள் உபயோகிக்கவில்லை.

இதேவேளை சிவிகே சிவஞானம் பதில் தலைவராக செயற்படுவார் என்பது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம். அதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

அந்த தீர்மானத்திற்கு தான் இணங்கவில்லை என்றவாறான கருத்தை சிவமோகன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தருணத்தில் அவர்கூட்டத்திலே இருந்ததுடன் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.

கட்சியின் 75 வது வருடநிறைவை முன்னிட்டு, பவள விழாவாக அதனை கொண்டாடுவதற்கு மாவட்டம் தோறும் நினைவு கூட்டங்கள் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதனை பெருவிழாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டாட தீர்மானித்துள்ளோம். அதனையொட்டி மலர் ஒன்றும் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மலர்குழுவிற்கு மாவைசேனாதிராஜா அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழாக்குழுவின் தலைவராக கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டுக்கொண்டிருக்கிற சிவிகே. சிவஞானம் அவர்களை நியமித்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டகுழுவுடன் இணைந்து செய்வதாக என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது” என்றார்.

The post கட்சியின் வெற்றிடமான பதவியை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவிற்கே உள்ளது – எம்.ஏ.சுமந்திரன் appeared first on Oruvan.com.

தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான் – மாவை வைத்த ‘செக்’
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில், இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் தேவையற்றது என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் பதில் பொதுச்செயலாளராகச் செயற்பட்டு வரும் ப.சத்தியலிங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மாவை அனுப்பிவைத்த கடிதத்தின் சாராம்சமாவது:-

“சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரின் பதவி வெற்றிடமானபோது, கட்சியின் தலைவரான எனது பரிந்துரையின் அடிப்படையில் பதில் பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டார். கட்சியின் பதில் பொதுச்செயலாளர் கட்சித் தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பட வேண்டும் என்று யாப்பு கூறுகின்றது. ஆனால், கட்சியின் பதில் பொதுச்செயலாளரான மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் எனது ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை.

அத்துடன், டிசம்பர் மாதம் 14ஆம் திகதி கூட்டப்பட்ட கூட்டம் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அந்தக் கூட்டம் தன்னிச்சையாகக் கூட்டப்பட்ட கூட்டம் என்பதுடன், எதிர்வரும் 28ஆம் திகதிய கூட்டத்தின் (இன்றைய) நிகழ்ச்சி நிரல் (மாவையின் பதவி விலகல் தொடர்பான வாக்கெடுப்பு) தேவையற்றதொன்று. வாக்கெடுப்பு நடத்தி தலைவர் பதவியைத் தீர்மானிப்பது என்பது அடிப்படை அற்ற முன்னெடுப்பாகும்.

2024ஆம் ஆண்டின் பொதுத்தேர்தல் அறிக்கையைக் கட்சித் தலைமையகத்தில் வைத்து நானே தயாரித்தேன். அந்த அறிக்கை எனது இல்லத்தில் வைத்தே, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன், பதில் பொதுச்செயலாளர்கள் மற்றும் திருவாளர்கள் ம.ஆ.சுமந்திரன், ஆனோல்ட் முன்னிலையில் ஊடகங்களுக்கு வெளியிட்டோம்.

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தபோது, சிறீதரனைத் தலைமைப் பதவியை ஏற்குமாறு கோரியிருந்தேன். அது செயற்படுத்தப்படாமையால், நானே கட்சித் தலைவராகத் தொடர்கின்றேன். அத்துடன், பதவி விலகல் கடிதத்தை நான் எழுதிய பின்னர் கூட்டப்பட்ட கூட்டங்கள் சிலவற்றில் கட்சித் தலைவர் என்ற ரீதியிலேயே எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” – என்றுள்ளது.

The post தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான் – மாவை வைத்த ‘செக்’ appeared first on Oruvan.com.

மாவையின் தலைமையைத் தக்கவைக்க வழக்கு – யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

மாவை சேனாதிராஜாவின் இராஜிநாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருக்கையில் அதை இடைநிறுத்தித் தடை உத்தரவு பிறப்பிக்கவும், மாவை சேனாதிராஜா தொடர்ந்து கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கவும் உத்தரவிடக் கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களின்  விவரம் பற்றிய விடயம் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று சட்டத்தரணிகளோடு ஆலோசனை கலப்பதில் மாவை சேனாதிராஜா மும்முரமாக இருந்தார் என்று பிறிதொரு தகவல் தெரிவித்தது.

இது பற்றிய மேலதிக விவரங்கள் இன்று வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

The post மாவையின் தலைமையைத் தக்கவைக்க வழக்கு – யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Oruvan.com.