மன்னாரில் காற்றாலை அமைப்பு Archives - Oruvan.com

மன்னாரில் காற்றாலை க்கு எதிராக அணி திரண்ட மக்கள்-அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம்
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்க போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் திங்கட்கிழமை பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து குறித்த அழைப்பு விடுத்திருந்தனர்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (29) காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமானது.

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து குறித்த பேரணி ஆரம்பமானது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று வருகை தந்தது. மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.

பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்று கூடிய இடத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய கடிதம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம் பெறும் பகுதிக்குச் சென்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

பின்னர் தொடர்ச்சியாக முருகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கதைத்து அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர்.

அதனை தொடர்ந்து பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், பொது மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post மன்னாரில் காற்றாலை க்கு எதிராக அணி திரண்ட மக்கள்-அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம் appeared first on Oruvan.com.

தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம்
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது சட்ட விரோதமானது என கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது.

அனுர தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவுக்கு வரும் இந்த சூழ்நிலையில், அரசு நடத்தி இருக்கிற இந்த காட்டு தர்பார், என்பது, அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள், பாரிய அளவில் பரந்து விரிவடையும் பொழுது அரசு அவை தொடர்பிலே எந்தகைய அணுகு முறையை கையாளும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், காற்றாலை திட்டம் தொடர்பில் ஒரு பரந்த அளவிலானதும் அந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் தீவில் எழுந்திருந்த நிலையில், 80 நாட்களாக இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதை நசுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.

இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வரை சென்று போராடும் மக்கள், இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சினையை நிதானமாக கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இரவிரவாக காற்றாலை உபகரணங்கள் உதிரிப்பாகங்கள் இயந்தரங்கள் எல்லாம் மன்னார் தீவுக்குள் கொண்டுவரப்பட்ட போது அதற்கு மக்களுடைய எதிர்ப்பலை எழுந்திருந்த நேரத்தில், அதை நிதானமாக கையாள அரசு முயற்சித்திருக்க வேண்டிய நிலையில், அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த மக்களை அடித்து துவைத்து இருக்கிறது.

இதனால் சிலர் காயமடைந்து இருக்கிறார்கள். இதன் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுகிற மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் கூட இந்த அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது.

குறிப்பாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய பலத்தை மக்கள் மீது பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கோருகின்றேன்

இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை. அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வர முடியும். ஆனால் நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணர வேண்டும்.

முழு இலங்கை தீவிலும் வாழ்கிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்களுக்கு கூட உணர்வாளை ஒன்று பட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த சந்தர்ப்பத்திலே நான் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்த்மை குறிப்பிடத்தக்கது

The post தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் appeared first on Oruvan.com.

மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம்
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதுடன், அதற்குள் அந்தக் காற்றாலைத் திட்டம் தொடர்பாக அரசு நியமிக்கும் தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவர் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், அதன் பின்னர் இதுவரை திட்டமிடப்பட்டு அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள 70 மெகா வாற் மின் உற்பத்தித் திட்டம் அப்படியே முன்னெடுக்கப்படும்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் மற்றும் மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.

அங்கேயே மேற்படி தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டன என அறியவந்தது.

மன்னார் தீவில், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு மன்னார் மக்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும், மன்னார் தீவுக்குள் – குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்க்கின்றனர் எனவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

கடந்த கால இனவாத அரசுகள் இத்தகைய காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ள போதும், கற்றாலை அமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன், இந்த விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத் திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, “இது தனித்து மன்னார் தீவுக்குரிய பிரச்சினை அல்ல. மின்சார விநியோகம் தேசிய பிரச்சினை. அதற்கான தீர்வின் அடிப்படையிலேயே விடயம் அணுகப்பட வேண்டும்.” – என்றார்.

மின் உற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்ட போது பல கிராமங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியமையை ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

“தேசிய பிரச்சினைக்குத் தீர்வாக அந்தக் கிராமங்கள், குடியிருப்புகளின் பாதிப்பு தவிர்க்க முடியாததாயிற்று. எனினும் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு அப்போது மாற்று வழிகளில் தீர்வுகள், நிவாரணங்கள், ஒழுங்குகள் செய்து கொடுகப்பட்டன.” – என்றும் ஜனாதிபதி விளக்கினார்.

“இப்போதும் இதுவரை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டேயாக வேண்டும். அவற்றை நிறுத்தினால் பெரும் நெருக்கடிகள் வரும். 2028 இல் உரிய மின் உற்பத்தி இல்லாமல் நாடு தழுவிய மின்வெட்டு வரக்கூடிய ஆபத்து உண்டு. ஆகையால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்ட திட்டங்களுக்கு ஒத்துழையுங்கள். அவற்றை அமைப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து எனது பிரதிநிதிகள் குழு மூலம் விரிவாக அறிந்து கொள்வேன். பிரச்சினைகளுக்கு உரிய தீர்வையும் பெற்றுத் தருவேன்.

மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்து ஆராய்வதற்காக இந்தத் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தலாம். அச்சமயத்தில் உரிய பிரதிநிதிகள் மூலம் பிரதேச மக்களின் பிரச்சினைகள், கருத்துக்கள் உள்வாங்கப்படும்.

அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உடனடியாக முன்னெடுப்போம். ஆகவே, திட்டமிட்டு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்ட ஏற்பாடுகளை நிறுத்த முயற்சிக்க வேண்டாம்.

இனிமேல் புதிய திட்டங்களை மன்னார் தீவைத் தவிர்த்து வெளியில் ஆலோசிக்கலாம்.” – என்றார் ஜனாதிபதி.

மன்னார் தீவுக்குள் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், பாதிப்புகள், பின்னடைவுகள், பிரச்சினைகள் பற்றி மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாத் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

The post மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம் appeared first on Oruvan.com.