பொலிஸார் Archives - Oruvan.com

கரந்தெனிய ராஜு மீது 48 கொலை குற்றச்சாட்டுகள்
இந்தியாவில் கைது செய்யப்பட்டு, அண்மையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கரந்தெனிய ராஜு என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர், தென் மாகாணத்தில் நிகழ்ந்த 48 கொலைகள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரபல பாதாள உலகத் தலைவரான கரந்தெனிய சுத்தாவின் சகோதரர் என்று கூறப்படும் ராஜு, துபாயிலிருந்து கிரீஸுக்குத் தப்பிச் செல்வதற்காக விசா பெறுவதற்கு இந்தியா வந்தபோது கைது செய்யப்பட்டார்.

அக்குரேகொடவில் அண்மையில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலை, கரந்தெனியவில் பிரபல மருத்துவர் ஒருவரின் கொலை, பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் மற்றும் ஒரு பொது சுகாதார ஆய்வாளரின் கொலை ஆகியவற்றுக்கு கரந்தெனிய ராஜுவே காரணம் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல், கொலைகளுக்காக கூலிக்கு ஆயுதங்களை வழங்குதல், தெற்கில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களில் இவர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நடத்திய விரிவான விசாரணையின் விளைவாக கரந்தெனிய ராஜு கைது செய்யப்பட்டார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் கமல் அரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அக்குரேகொடவில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது, கரந்தெனிய சுத்தாவின் உத்தரவின் பேரில் ராஜுவால் நிகழ்த்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்த வழக்கில் தொடர்புடைய பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் ஒருவரிடம் விசாரணை நடத்தியபோது, ​​ராஜு துபாயிலிருந்து கிரீஸுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்ததையும், அவருக்கு இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நபர் விசாக்களை வழங்கத் தயாராகி வந்ததையும் பொலிஸாரால் கண்டறிய முடிந்தது.

ராஜுவுக்கு விசா வழங்குவதற்கு ஈடாக, இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு ஐந்து மில்லியன் ரூபாய் தருவதாகஉறுதியளித்திருந்ததாகவும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

உதவி காவல் கண்காணிப்பாளர் கமல் அரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகளால், ராஜுவின் சமீபத்திய வெளிநாட்டு கடவுச்சீட்டு குறித்த தகவல்களையும் பெற முடிந்தது.

அத்துடன் கரந்தெனிய ராஜூவின் அனைத்து தகவல்களும் இந்திய பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, துபாயிலிருந்து இந்தியா வந்த ராஜுவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று இந்தியாவுக்குச் சென்று, ராஜுவைக் கைது செய்து, இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

குற்றவாளி தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகிறார். குற்றவாளியை விசாரிப்பதற்காக 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒரவர் தெரிவித்துள்ளார்.

கரண்டெனிய ராஜுவின் முதல் கொலை, மருத்துவரைச் சுட்டுக் கொன்றதுதான். கரண்டெனிய, தனது அண்ணன் சுத்தாவுடன் சேர்ந்து, பண ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலையை அரங்கேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் பல கொலைகளை அவர் செய்துள்ளார். அவரது சகோதரர் சுத்தாவின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இந்தக் கொலைகள் அனைத்திலும் ஈடுபட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றங்கள் தொடர்பாகத் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post கரந்தெனிய ராஜு மீது 48 கொலை குற்றச்சாட்டுகள் appeared first on Oruvan.com.

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு
எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும், வீட்டின் ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் இந்த சம்பவம் அப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததற்கு பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

பாலியல் ரீதியாக படங்கள் – காணொளிகளை வெளியிடுவதாக கூறிய இருவர் கைது
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடுவதாக கூறி தனிநபர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதாக மிரட்டி 222,000 ரூபாய் பெற்றதற்காக கொழும்பு-கோட்டையில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 2025 ஜனவரியில் இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்தது. முறைப்பாட்டின் அடிப்படையில், பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று மதியம் கைது செய்தனர்.

இதற்கிடையில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடுவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பண்டாரகமவைச் சேர்ந்த 32 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று கஹதுடுவ பகுதியில் கைது செய்யப்பட்டார். வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

The post பாலியல் ரீதியாக படங்கள் – காணொளிகளை வெளியிடுவதாக கூறிய இருவர் கைது appeared first on Oruvan.com.

திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மார்ச் 31 ஆம் திகதி நடந்துள்ளது. ஒரு குழுவினர் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதை காட்டும் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பாக நிலாவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு, அதே நாளில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இன்று (02) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், நிலாவெளி பொலிஸ் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று (01) ஒரு பெண் சந்தேக நபரையும் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 20, 21, 22, 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் நிலாவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களைக் கைது செய்ய நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பியவாறு மோட்டார்சைக்கிளில் சென்றோரை கைது செய்ய முற்பட்ட போக்குவரத்து பொலிஸாரை கடமையை செய்ய விடாது இளைஞர் குழு ஒன்று தடுத்திருந்தது.

அத்தோடு பொலிஸாரின் தொலைபேசியையும் சேதமாக்கி அட்டகாசம் செய்திருந்தனர். மேலும், போக்குவரத்து பொலிஸாரை அந்த இளைஞர் குழு அருகிலுள்ள வீடொன்றுக்குள் இழுத்துச்சென்று பூட்டி அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது appeared first on Oruvan.com.

வடக்கின் செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பொலிஸார் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை
முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் போரில் இருந்து தப்பி வந்த சிறுவர்கள் உள்ளிட்ட ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், “ரோஹிங்கியாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பார்களா?” என குற்றப் புலனாய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதன்போது வெகுஜன மக்கள் போராட்டம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, பழைய பொலிஸ் தலைமையகக் கட்டிடத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதக் கடத்தல் வியாபாரம் குறித்த விசாரணைப் பிரிவின் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் ஃபிகிராடோவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கேள்விக்கு பதிலளித்த யாட்சன் ஃபிகிராடோ, அத்தகைய ஊக்குவிப்பை தான் செய்யப்போவது இல்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“ரோஹிங்கியா மக்களின் வருகையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்களா எனக் கேட்டார்கள். நாங்கள் எங்களுடைய அறிக்கையில் பொது வெளியில் சொல்லியிருக்கின்றோம் அகதிகள் இலங்கையில் இங்கு வந்திருப்பவர்களை இங்கே தொடர்ந்து இருப்பதற்கோ அல்லது தொடர்ந்து இங்கு வருவதற்கோ நாங்கள் எப்போதும் ஊக்குவிக்கவில்லை. ஆனால் இருப்பவர்களை வந்திருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைப்பது பொருத்தமாக அமையும். சர்வதேச சட்ட நியமங்களையும் பின்பற்றக்கூடியதாக இருக்கும் என்பதை வலியுறுத்தி என்னுடைய வாக்குமூலத்தை வழங்கியிருந்தேன்.”

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு என்ன வகையான உதவிகள் வழங்கப்பட்டன? என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“எவ்வாறான உதவிகள்? நாங்கள் பெரிதாக உதவிகள் எதுவும் வழங்கவில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளியிட்டோம். எங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை நாங்கள் அவர்களுக்கு முன்னெடுத்திருக்கின்றோம்.” என அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்கள் குழுவை நாடு கடத்தக்கூடாது என கோரி கடந்த ஜனவரி 9ஆம் திகதி போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு சென்ற பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.

மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியாக்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது எனக் கோரி சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பலர் அடங்கிய குழுவினர் 2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத்தாங்கிய  நவ சம சமாஜக் கட்சியுடன் இணைந்த காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைக் குழு ஜனாதிபதி செயலகத்தில் கடிதம் ஒன்றையும் கையளித்திருந்தது.

ரோஹிங்கியாக்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது எனக் கோரி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னை மாத்திரம் விசாரணைக்கு அழைத்தமைக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக யாட்சன் ஃபிகிராடோ கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“பல்வேறு நபர்கள் வந்து இதுத் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளனர். அவர்களுக்கு ஏன் அழைப்பாணை வரவில்லை. முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் நானும் இருந்தேன். ஆகவே எனக்கு மாத்திரம் வந்தது தொடர்பில் அவர்களிடம் கேள்வி எழுப்பினேன். ஏன் மற்றவர்களுக்கு வரவில்லை? எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார், கொழும்பில் போராட்டம் செய்திருக்கின்றார்கள்.”

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சிவில் சமூகத்தை விசாரணைக்கு உட்படுத்துவது மோசமான போக்கு என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் பிகிராடோ ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டுகின்றார்.

“சிவில் சமூகங்களை விசாரிப்பது இன்று நேற்று அல்ல இலங்கையில் ஒரு தொடர் விடயமாகவே இருக்கிறது. இந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, முன்னைய அரசாங்கமாக இருந்தாலும் சரி, சிவில் சமூகம் என்று சொன்னால் விசாரிப்பது, அவர்களின் பணியை முடக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை அழைத்ததையும் நான் ஊக்குவிக்கவில்லை. இது பொருத்தமற்ற செயல். குற்றம் ஏதும் செய்யாமல் என்னை  ஏன் அழைத்தார்கள் என கேள்வி எழுப்பினேன். சிவில் சமூக பணிகளை அழைப்பது பொருத்தமற்ற செயல்.”

எதிர்வரும் நாட்களில் மியன்மாரில் இருந்து சுமார் ஒரு இலட்சம் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும், இதுவரை ஒரு அகதி கூட இலங்கைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post வடக்கின் செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பொலிஸார் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை appeared first on Oruvan.com.

நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு
நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடலின் மேல் பகுதி மட்டுமே எஞ்சியிருப்பதையும், எலும்புக்கூடு எச்சங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கிரியெல்ல பொலிஸ் பிரிவின் குருகம்மோதர பகுதியில் உள்ள களு ஆற்றில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று மதியம் கிரியெல்ல nபாலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, விசாரணையின் போது, ​​உடலில் எலும்புக்கூடு எச்சங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதும், தலை காணாமல் போனதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஆண் என்பதையும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

இறந்தவர் வெளிர் நீல நிற ஆடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடி வாவியில் ஒரு பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, விசாரணையில் இறந்தவர் 60-70 வயதுக்குட்பட்ட பெண் என்பது தெரியவந்தது. அவர் வெள்ளை மற்றும் பச்சை கலந்த ஆடை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் சடலம் தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு appeared first on Oruvan.com.

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – பொலிஸாரின் அறிவிப்பு
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த வாரத்தில் யாழ் நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நால்வரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கின்றோம். இரண்டு சம்பவங்களையும் குறித்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலதிக சாட்சிகளை எடுத்து மிகுதியான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளோம்.

இதற்குரிய ஆலோசனைகள் என்னால் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம்.

இனிவரும் காலங்களில் குறித்த நபர்கள் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக கட்டுக்கோப்பான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆணையை பெற்று வருகின்றோம்.

இந்த நபர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து குறித்த குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

The post யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – பொலிஸாரின் அறிவிப்பு appeared first on Oruvan.com.

2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்
கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை எனவும் இதில் 45 பேர் உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

16 பேர் கொல்லப்பட்ட மற்ற 47 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெவ்வேறு காரணங்களால் குறிப்பாக தனிப்பட்ட தகராறுகளால் நிகழ்ந்தவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் பதிவான கடைசி துப்பாக்கிச் சூடு சம்பவம் டிசம்பர் 28 ஆம் திகதி மாலையில் பதிவாகியிருந்தது. சீதுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர். தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் பல பெரிய துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. சில பட்டப்பகலில் நடந்தன, துப்பாக்கி ஏந்தியவர்கள் பொது மக்கள் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் இடத்திற்கு அருகில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் பாராதூரமான ஒன்றாகும் இந்த சம்பவத்தில் நமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் கொல்லப்பட்டார்.

மேலும், ஜூலை 8 ஆம் திகதி, அதுருகிரியவில் ஒரு அழகு நிலையம் திறப்பு விழாவில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்று அழைக்கப்படும் “கிளப் வசந்த” உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பிரபல பாடகர் கே. சுஜீவா உட்பட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள். இவ்வாறான சில துப்பாக்கிச் சூடுகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளதாக, பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கே. புத்திக மனதுங்க வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று டி-56 தாக்குதல் துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு 20 டி-56 துப்பாக்கிகளை மீட்டெடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’

2024 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விடக் குறைவாக பதிவாகியிருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டில், 120 துப்பாக்கிச் சூடுகளில் 54 பேர் கொல்லப்பட்டதுடன், 65 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம் appeared first on Oruvan.com.

மட்டக்களப்பு போரதீவுபற்றில் நீரோடையில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நீர் நிலைக்கு அருகிலுள்ளு வீடு ஒன்றில் உள்ள குழந்தை, சம்பவதினமான நேற்று காலையில் வீட்டில் இருந்து தத்தி தத்தி நடந்து வெளியேறி வீட்டிற்கு அருகிலுள்ள நீரோடை பகுதிக்கு வந்து விளையாடிக்கொண்டிருந்தபோது வாய்க்கால் நீருக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொன்று சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குழந்தையை பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியவசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

(கனகராசா சரவணன்)

The post மட்டக்களப்பு போரதீவுபற்றில் நீரோடையில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இருவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

The post கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இருவர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.