பிரித்தானியா Archives - Oruvan.com

ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியில்? இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் சீனா
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ஆகஸ் (AUKUS) பாதுகாப்புக் கூட்டணி, 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் புவியியல் அரசியல் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூகோள அரசியலில் முக்கிய பாதுகாப்பு நகர்வாகவும் கருதப்படுகிறது.

ஆகஸ் கூட்டணியின் மைய நோக்கம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் தன்னிச்சையான நகர்வுகளால் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களுக்கு ஒருங்கிணைந்த பதிலை வழங்குவதும், சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதாரத் தாக்கத்தை சமநிலைப்படுத்துவதும் ஆகும்.

ஆகஸ் கூட்டணியின் மிக முக்கிய அம்சம், அணு இயக்கம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை அவுஸ்திரேலியாவிற்கு வழங்குவதாகும். இது வழக்கமான இராணுவ ஒத்துழைப்பை விட மிக உயர்ந்த தொழில்நுட்ப, பாதுகாப்புக் கூட்டாண்மையை வெளிப்படுத்தும் திட்டமாக சர்வதேச நாடுகள் பார்க்கின்றன.

ஆகஸ் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அவுஸ்திரேலியா தனது கடற்படைத் திறனை மேம்படுத்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான கடல்சார் பாதுகாப்பு சக்தியாக உருவெடுக்கும். இது பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான சக்தியாக உருவெடுக்கவும், தமது கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பாக முன்னெடுக்கவும், சீனாவின் தன்னிச்சையான நகர்வுகளைத் தடுக்கவும் பெரிதும் உதவும்.

எனினும், இந்த நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆகஸ் திட்டம் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆகஸ் திட்டத்திற்குத் தேவையான நிதி முதலீடு மிகப்பெரியது. குறிப்பாக 245 பில்லியன் அமெரிக்க டொலர்வரை தேவையென கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அணு இயக்கம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை அதிக செலவுகளை உடையவை. இதற்கான போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் நீண்டகால பொருளாதார திட்டமிடல் இல்லாதது குறித்து அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த நிதிக் குறைபாடு, திட்டத்தின் காலக்கெடு மற்றும் செயல்திறனை நேரடியாக பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இதனுடன், தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான சிக்கல்களும் முக்கிய தடையாக உள்ளன. அணு இயக்கத் தொழிநுட்பம் மிகுந்த பாதுகாப்பு மற்றும் ரகசியத் தன்மையைக் கொண்டதாக இருப்பதால், அதனை மற்றொரு நாட்டிற்கு பகிர்வது எளிதான செயல் அல்ல என பிரித்தானியாவின் பாதுகாப்புத் தரப்பு கருதுகிறது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் தங்களது முன்னேற்றமான தொழிநுட்பங்களை பகிர்வதில் அவதானத்துடன், செயல்பட வேண்டும் என கடும் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதால் இத்திட்டம் குறித்து மீள் பரிசீலனைகள் அவசியம் எனப் பிரித்தானிய பாதுகாப்புத் தரப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல தாமதங்கள் ஏற்படுகின்றன.

மேலும், உற்பத்தித் திறன் மற்றும் மனித வளம் ஆகியவை தொடர்பான சவால்களும் உள்ளன. அணு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்துக்கு மிகவும் நுட்பமான தொழிநுட்ப அறிவும், அனுபவமுள்ள பொறியியலாளர்களும் தேவைப்படுத்துகிறது. தற்போது, இந்த துறையில் திறமையான பணியாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதுடன், தேவையான உற்பத்தி வசதிகளும் போதுமான அளவில் இல்லை என பிரித்தானியா கூறியுள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்புத் தொழில்துறை ஏற்கனவே பல முக்கிய இராணுவத் திட்டங்களில் ஈடுபட்டிருப்பது, ஆகஸ் திட்டத்திற்குத் தேவையான கவனமும் வளங்களும் முழுமையாக வழங்கப்படாமல் இருக்கக் காரணமாக உள்ளது. இதுவும் திட்ட முன்னேற்றத்தில் ஒரு முக்கியத் தடையாக கருதப்படுகிறது.

இந்த அனைத்து சவால்களும் சேர்ந்து, ஆகஸ் கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கையிடுவதாவது, இந்தத் திட்டம் தொடர்ச்சியாக தாமதமடையும் பட்சத்தில், கூட்டணியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படலாம் என்பதாகும். குறிப்பாக, இந்த திட்டத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள அவுஸ்திரேலியாவிற்கு இது ஒரு முக்கியமான பாதுகாப்பு மற்றும் அரசியல் சவாலாக மாறும் என எச்சரித்துள்ளனர்.

ஆகஸ் திட்டம் எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை என்றால், கூட்டணியில் உள்ள நாடுகளுக்கிடையிலான உறவுகளிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உறவுகள் சீர்குலையும் என கருதப்படுகிறது.

ஆகஸ் பாதுகாப்புக் கூட்டணி, உலக அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை குறிக்கும் முயற்சியாக இருந்தாலும், அதன் வெற்றி பல்வேறு பொருளாதார, தொழிநுட்ப மற்றும் அரசியல் சவால்களை சமாளிப்பதிலேயே தங்கியுள்ளது.

இந்தச் சவால்களைத் திறம்பட சமாளிக்க முடியுமானால், ஆகஸ் கூட்டணி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு அமைப்பில் ஒரு முக்கிய தூணாக உருவெடுக்கக்கூடும். இல்லையெனில், இது ஒரு பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய திட்டமாக இருந்தாலும், நடைமுறையில் சிக்கல்களுக்கு உள்ளாகும் முயற்சியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

அவ்வாறு இடம்பெற்றால் அது சீனாவின் செல்வாக்கை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேலும் அதிகரிக்கும் என்பதுடன், வல்லரசு நாடுகளால் முடியாத ஒரு விடயத்தை ஏனைய நாடுகளால் முன்னெடுக்க முடியாது என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2040ஆம் ஆண்டாகும் போது உலக வர்த்தகத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முதன்மையான வர்த்தக வலயமாக மாறக்கூடும் என்ற கணிப்புகளின் அடிப்படையில் தான் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற முயற்சியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும், மேற்படி நகர்வுகளை மேற்கொண்டுள்ள போதிலும் ஆகஸ் திட்டத்திற்கான முதலீடு பெரும் சவாலாக மாறியுள்ளது.

சு.நிசாந்தன்

The post ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியில்? இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் சீனா appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
இங்கிலாந்தில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் குப்பை சேகரிப்புக்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

இதன்படி, பல்வேறு வகையான கழிவுகளுக்காக நான்கு தனித்தனி குப்பைத் தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால் ​​நாடு முழுவதும் உள்ள வீடுகளில் குறிப்பிட்ட பொருட்களைத் தவறான முறையில் குப்பைத் தொட்டிகளில் போட்டால் 400 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குப்பைத் தொட்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்து வருகின்றனர்.

புதிய கட்டாயக் கழிவு சேகரிப்பு முறை நாளை முதல் நடைமுறைக்கு வருவதால நாடு முழுவதும் உள்ள குப்பை சேகரிப்பாளர்கள் கழிவுகளைத் தனித்தனியாகச் சேகரிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, உணவு மற்றும் தோட்டக் கழிவுகள், காகிதம் மற்றும் அட்டை, உலர்ந்த மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள், மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் என்று வகைப்படுத்தப்பட்டு கழிவுகள் சேகரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பிரித்தானியாவில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் appeared first on Oruvan.com.

ஈரான் போர் – இங்கிலாந்து மக்களிடையே வேரூன்றும் அவநம்பிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பிரித்தானியாவில் பெரும்பாலான குடும்பங்களின் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், ஈரான் போர் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலால், எரிபொருள், எரிவாயு, உரம் உள்ளிட்ட பிற மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இது மற்றொரு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Which என்ற அண்மைய நுகர்வோர் உள்நோக்கு கண்காணிப்பின்படி, விலை அழுத்தங்கள் காரணமாக, சுமார் 14 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பங்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் செலவைச் சமாளிப்பதற்காக, சேமிப்பைப் பயன்படுத்துவது, உடைமைகளை விற்பது அல்லது கடன் வாங்குவது போன்ற குறைந்தபட்சம் ஒரு மாற்றத்தையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மார்ச் 13ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில், இங்கிலாந்து பொருளாதாரத்தின் எதிர்காலம் மீதான நம்பிக்கை 13 வீதம் சரிந்து -56 என்ற மதிப்பெண்ணை எட்டியுள்ளது.

இது 2022ஆம் ஆண்டின் இறுதிக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரான் போர் – இங்கிலாந்து மக்களிடையே வேரூன்றும் அவநம்பிக்கை appeared first on Oruvan.com.

நிரந்தர குடியுரிமை பெறும் காலத்தை 10 வருடங்களாக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு
பிரித்தானியாவின் குடியேற்றக் கொள்கையில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகளையும் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை (ILR) பெற வேண்டிய காலத்தை தற்போதைய 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு, குடியேற்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்டகாலமாக நாட்டில் தங்கும் நபர்களின் தகுதிகளை கடுமையாக்குவதன் மூலம் குடியேற்ற அமைப்பை சீர்படுத்த முடியும் என அரசாங்கம் கூறியுள்ளது.

ஆனால், இந்த திட்டம் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆளும் கட்சியிலேயே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) இந்த மாற்றத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எதிர்ப்பாளர்கள் கூறுவதாவது,

நீண்டகாலம் உழைத்து வாழும் குடியேற்றவாசிகளுக்கு இது அநீதியிழைக்கும் செயல்பாடு என்பதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான திறமையான தொழிலாளர்களும் இதனால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன்,  குடும்பங்கள் மற்றும் சமூக நிலைத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முன்மொழிவு குறிதது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

நாட்டின் எல்லை பாதுகாப்பையும், குடியேற்ற கட்டுப்பாட்டையும் வலுப்படுத்த இந்த மாற்றம் அவசியம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

நிரந்தர குடியுரிமை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தும் இந்த முன்மொழிவு, பிரித்தானிய அரசியலில் முக்கியமான விவாதமாக மாறியுள்ளதுடன், எதிர்காலத்தில் கடும் அரசியல் மோதலுக்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

The post நிரந்தர குடியுரிமை பெறும் காலத்தை 10 வருடங்களாக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு appeared first on Oruvan.com.

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா பிரித்தானியா?
ஆளும் Labour கட்சியில் ஐராப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் செல்வாக்கை மீண்டும் அதிகரிப்பது தொடர்பான கருத்துகள் வலுப்பெற்றுள்ளன.

ஏற்கனவே செய்துகொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஸ்டார்மருக்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் ஆளுங்கட்சிக்குள் கொடுக்கப்பட்டு வரும் பின்புலத்தில் லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியம் (EU customs union) மற்றும் தனியார் சந்தைகயில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேயர் சாதிக் கானின் கருத்து மற்றும் கட்சிக்குள் வலுப்பெற்றுவரும் இது தொடர்பான கருத்துகள் பிரதமர் ஸ்டார்மரின் நிலைப்பாட்டுக்கு முரணானதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் செல்வாக்கை அதிகரிப்பது அல்லது மீண்டும் சேர்வது குறித்து வெளிப்படுத்தப்படும் கருத்துகள் ஆளுங்கட்சிக்குள் மோதல் போக்கை அதிகரிக்கும் என்பதுடன், பொதுமக்களின் ஆதரவு குறைவதற்கும் வழிவகுக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா பிரித்தானியா? appeared first on Oruvan.com.

பிரித்தானியாவிலிருந்து தமிழர்கள் வெளியேறும் நிலை – கடுமையான விசா கட்டுப்பாடுகள் அறிமுகம்
பிரித்தானியாவிற்கு வேலை விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுத் தரும் காலவரையற்ற விடுப்பு தொடர்பான கடுமையான நிலைப்பாட்டினை உள்துறை செயலாளர் சுபல்லா பிரேவர்மன் (Shabana Mahmood) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான நிரந்தர குடியுரிமை பெறும் தகுதிக்காலத்தை, ஐந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் ஏற்கனவே அங்கு வசித்து வரும் மற்றும் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கு பின்னோக்கிய திகதியிட்டு பொருந்தும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்

இது தற்போது அங்குள்ள தமிழர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள விதிகளுக்கு அமைய, திறன்படைத்த பணியாளர் விசா பிரிவில் இருப்பவர்கள் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், புதிய மாற்றங்களுக்கு அமைய இந்தக் கால அளவு இருமடங்காக அதிகரிக்கப்பட உள்ளது. சிறப்பாக பட்டப்படிப்பு தகுதிக்கு கீழ் உள்ள பணிகளில் இருப்பவர்கள், குடியுரிமை பெறுவதற்கு இன்னும் கூடுதல் காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் அல்லது கடினமான தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் சுமார் 6.16 லட்சம் பராமரிப்பு பணியாளர்களும் அவர்களது சார்ந்திருப்பவர்களும் பிரித்தானியா வந்துள்ளனர்.

பழைய முறைப்படி இவர்களுக்கான நிரந்தர குடியுரிமை தகுதி அடுத்த ஆண்டு தொடங்க இருந்தது. ஆனால், புதிய சீர்திருத்தங்களின் கீழ் இந்தக் குடியுரிமைப் பாதை முழுமையாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்தப் பணியாளர்களின் எதிர்காலத் திட்டங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தக் கடுமையான முடிவை நியாயப்படுத்திப் பேசியுள்ள அரசுத் தரப்பு, பொருளாதார ரீதியாக பராமரிப்பு பணியாளர்கள் அரசுக்கு ஒரு சுமையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆளும் தரப்பிலேயே சுமார் 40 எம்பிக்கள் எதிர்ப்பு

ஒரு வெளிநாட்டு பராமரிப்பு பணியாளரால் வரி செலுத்துவோருக்கு சராசரியாக 36,000 பவுண்டுகள் இழப்பு ஏற்படுகிறது. “குடியேறிகள் அனைவருமே பொருளாதாரத்திற்குப் பங்களிக்கிறார்கள்” என்ற பழைய வாதத்தை அரசு தற்போது மறுக்கிறது.

மறுபுறம், அகதிகளுக்கான விதிகளிலும் பெரிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இனி அகதி அந்தஸ்து என்பது நிரந்தரமானது அல்ல. அது தற்காலிகமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களது நிலை ஆய்வு செய்யப்படும். அகதிகள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

அரசின் இந்த முடிவுக்கு ஆளும் தரப்பிலேயே சுமார் 40 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முறையாக வரி செலுத்தி வரும் புலம்பெயர்ந்தோரை இது பாதிக்கும் என்றும், சிறுபான்மையினரிடமிருந்து அரசின் மீதான நம்பிக்கையை இது சிதைக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பிரித்தானியாவிலிருந்து தமிழர்கள் வெளியேறும் நிலை – கடுமையான விசா கட்டுப்பாடுகள் அறிமுகம் appeared first on Oruvan.com.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் : ஒரு படி முன்னேறிய பிரித்தானியா
2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் பிரித்தானியா 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெஸ் (Henley Passport Index) என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

ஒரு நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் சிங்கப்பூர்தான் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் பிரஜைகள் தமது கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

இரண்டாம் இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் பிரித்தானியா 7ஆவது இடத்தில் பட்டடியலிடப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு இந்தப் பட்டியில்ல பிரித்தானியா 8ஆவத இடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு ஒரு படி முன்னேறியுள்ளது.

The post உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் : ஒரு படி முன்னேறிய பிரித்தானியா appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் செலவு செய்வதை குறைத்துள்ள ஏழைகள்
2024ஆம் ஆண்டில் தொழிற்கட்சி பிரித்தானியாவில் ஆட்சியமைத்ததிலிருந்து, ஏழை மக்கள் அத்தியாவசிய விடயங்களுக்காக செலவு செய்தல் 2.1 சதவீதம் குறைந்துள்ளதாக Retail Economics என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், செல்வந்தர்களின் வருமானம், 10.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தரவுகள் அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு பிரித்தானிய மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க தலைவர்களும் தெரிவித்திருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மீண்டும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்திருந்ததன் பின்புலத்திலேயே தற்போது ஏழை மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளதாக தரவுகளும் வெளியாகி வருகின்றன.

The post பிரித்தானியாவில் செலவு செய்வதை குறைத்துள்ள ஏழைகள் appeared first on Oruvan.com.

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம்
பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் இனவெறி பாகுபாடு காண்பித்தாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு எதிராக அபாரம் விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் தனது முகாமையாளாரக இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தன்னை “அடிமை” என்று அழைத்ததாகவும், “இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்” எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்தியர் என்பதால் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரது முகாமையாளர் இலங்கையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.

அத்துடன் பணியிடத்தில் “அடிமை” என்றும் இன்னும் சில தரக்குறைவான சொற்களாலும் அழைத்தது இனவெறி பாகுபாட்டின் கீழ் வரும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் , அளவுக்கு அதிகமான நேரங்கள் வேலை செய்யுமாறு முகாமையாளர் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது விலகல் கடிதத்தை பாதிக்கப்பட்டவர் வழங்கினார். அதன்பின்னர் முகாமையாளர் அவரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு, மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

அவர் முறையாக விலகல் கடிதம் கொடுத்தும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது சட்டப்படி தவறு என நீதிபதி தெரிவித்தார்.

நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்ஸ்களும், விடுமுறை ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட்ஸ்களை வழங்க உத்தரவிட்டது.

மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிறுவனம் தனது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைகளை முறையாகக் கையாளுவது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம் appeared first on Oruvan.com.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவும் கிரீஸும் புதிய ஒப்பந்தம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானியாவும் கிரீஸும் கையெழுத்திட்டுள்ளன.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான யெவெட் கூப்பர் (Yvette Cooper) மற்றும் கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் (George Gerapetritis) ஆகியோர் கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸ் நகரில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக கடத்தல் கும்பல்களை இரு நாடுகளும் சட்ட ரீதியாக கையாள முடியும் எனக் கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர், ஆங்கிலக் கால்வாயை கடக்க பயன்படுத்தப்படும் சிறுபடகுகள் விநியோகத்தை தடுக்க கிரீஸ் அதிகாரிகளுக்கு பிரித்தானியா உரிய பயிற்சியும் அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

The post புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவும் கிரீஸும் புதிய ஒப்பந்தம் appeared first on Oruvan.com.