பஹல்காம் Archives - Oruvan.com

இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’ மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

லஷ்கர்-ஏ-தொய்பாவின் (Lashkar-e-Taiba) கிளை அமைப்பான TRF நடத்திய இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

The post இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது –  மோடி appeared first on Oruvan.com.

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி
மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், “பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” என்று அவர் உறுதி அளித்தார்.

ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலம் ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர் மோடி, கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மன உறுதியின் மிகப் பெரிய கொண்டாட்டமாகும். மாதா வைஷ்ணோதேவியின் ஆசிர்வாதத்தால், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. ​​காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பது இப்போது ரயில்வே நெட்வொர்க்கிற்கும் பொருந்தக்கூடிய ஒரு யதார்த்தமாகிவிட்டது.

உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில் பாதைத் திட்டம் வெறும் பெயர் அல்ல, அது ஜம்மு காஷ்மீரின் புதிய சக்தியின் அடையாளம். இது இந்தியாவின் புதிய சக்தியின் பிரகடனம். சிறிது நேரத்திற்கு முன்பு, செனாப் மற்றும் அஞ்சி பாலங்களைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, ஜம்மு காஷ்மீருக்கு இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளன. ரூ.46 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.

இன்று லட்சக்கணக்கான ஜம்மு – காஷ்மீர் மக்களின் கனவு நிறைவேறியுள்ளது. எங்கள் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் வேகம் பெற்றது எங்கள் அரசாங்கத்தின் அதிர்ஷ்டம். இது ஒரு சவாலான திட்டம், ஆனால் எங்கள் அரசாங்கம் எப்போதும் சவால்களை சவால் செய்யும் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. இன்று செனாப் மற்றும் அஞ்சி பாலங்களில் நடந்து செல்லும்போது, ​​இந்தியாவின் உயர்ந்த விருப்பங்களையும், நமது பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறமை மற்றும் தைரியத்தையும் நான் உணர்ந்தேன்.

செனாப் பாலம் ஈபிள் கோபுரத்தை விட உயரமானது. செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் பிர் பஞ்சலின் மலைகளில் இந்திய சக்தியின் உயிருள்ள சின்னமாகும். இனி, காஷ்மீரின் ஆப்பிள்கள் நாட்டின் பெரிய சந்தைகளை குறைந்த விலையிலும் சரியான நேரத்திலும் அடைய முடியும்.

பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 11 ஆண்டுகள் ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அரசின் முயற்சிகளால், 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கு எதிராகப் போராடி அதிலிருந்து மீண்டுள்ளனர். சமூக அமைப்பில் தங்களை நிபுணர்களாகக் கருதுபவர்கள், முற்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட அரசியலில் மூழ்கியிருப்பவர்கள், தலித்துகளின் பெயரில் அரசியல் ஆதாயம் ஈட்டி வருபவர்கள், எனது திட்டங்களைப் பார்க்க வேண்டும். இந்த வசதிகளைப் பெற்றவர்கள் யார்? இவர்கள் எனது தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகள்.

துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்துக்கு எதிரானது, ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கும் கூட எதிரானது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பஹல்காமில் மனிதநேயம் மற்றும் காஷ்மீர் பெருமிதம் ஆகிய இரண்டின் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதும், காஷ்மீரின் கடின உழைப்பாளி மக்களின் வருவாயைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும். அதனால்தான் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தாக்கியது. காஷ்மீர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டித் தரும் சுற்றுலாவை பாகிஸ்தான் குறிவைத்தது.

ஜம்மு – காஷ்மீர் இவ்வளவு அழிவைக் கண்டதால், இங்குள்ள மக்கள் கனவு காண்பதை நிறுத்திவிட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போது அவர்கள், பயங்கரவாதத்தை தங்கள் தலைவிதியாக ஏற்றுக்கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை இந்த சூழ்நிலையிலிருந்து மீட்டுள்ளோம். இங்குள்ள மக்கள் இப்போது ஜம்மு காஷ்மீர் மீண்டும் திரைப்பட படப்பிடிப்புக்கான இடமாக மாறுவதைக் காண விரும்புகிறார்கள். அது விளையாட்டு மையமாக மாறுவதைக் காண விரும்புகிறார்கள். பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது. இது நரேந்திர மோடியின் வாக்குறுதி.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, மே 6-ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் தனது அழிவு நாளைக் கண்டது. இப்போது, ​​ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம், பாகிஸ்தான் தனது அவமானகரமான தோல்வியை நினைவுகூரும். பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியா தாக்கும் என்று பாகிஸ்தான் ராணுவமும் பயங்கரவாதிகளும் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் துன்பம் எங்களுடையதும் கூட. இப்போது அதிக சேதத்தை சந்தித்த வீடுகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். நமது சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள மோதல் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள புதிய உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் ரூ.4200 கோடிக்கு மேல் செலவிடப் போகிறது.

ஆபரேஷன் சிந்தூர் எவ்வாறு தற்சார்பு இந்தியாவின் சக்தியைக் காட்டியது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இன்று, உலகம் இந்தியாவின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றி விவாதிக்கிறது. இதற்குப் பின்னால் ஒரே ஒரு காரணம் மட்டுமே உள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மீது நமது ராணுவம் நம்பிக்கை கொண்டுள்ளது.

ராணுவம் செய்ததை ஒவ்வொரு இந்தியனும் மீண்டும் செய்ய வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும், நம் நாட்டு மக்களின் வியர்வையால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மற்றொரு தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். இதுதான் தேசபக்தி, இதுதான் தேசத்துக்குச் செய்யும் சேவை. எல்லையில் நமது ராணுவத்தின் கவுரவத்தை அதிகரிக்க வேண்டும், சந்தையில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் பெருமையை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

The post “பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி appeared first on Oruvan.com.

தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு – வெறிச்சோடி காணப்படும் பஹல்காம் சுற்றுலா தலங்கள்
பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆகியும், பஹல்காம் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.

பீட்டாப் பள்ளத்தாக்கு முதல் பாபி ஹட் வரை பஹல்காமில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஒரு மாதம் முன்பு வரை இந்த சுற்றுலாத் தலங்கள் பரபரப்பாகக் காணப்பட்டன. ஏப்ரல் 22-ம் திகதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த பயங்கரவாத தாக்குதல் சுற்றுலாத் துறைக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. சுற்றுலாவை வாழ்வாதாரமாக நம்பியிருந்த தங்களுக்கு இது பேரழிவை ஏற்படுத்திவிட்டது என்கின்றனர் ஹோட்டல் உரிமையாளர்கள். பஹல்காமில் உள்ள 1,500 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களின் விகிதம் வெறும் 10% ஆகக் குறைந்துவிட்டதாக பஹல்காம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாவேத் புர்சா தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

“பஹல்காமில் ஏராளமான பெரிய ஹோட்டல்கள் வாடிக்கையாளர்கள் இன்றி உள்ளன. எனவே, சுற்றுலாப் பயணிகள் திரும்பி வரும் வரை வீட்டிலேயே இருக்குமாறு பல ஹோட்டல்கள் தங்கள் ஊழியர்களை கேட்டுக் கொண்டன. இது (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்) ஒரு கொடூரமான மற்றும் பயங்கரமான சம்பவம். சுற்றுலா வாய்ப்புகள் தற்போது வரை இருண்டதாகவே உள்ளன.” என்று ஜாவேத் புர்சா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து பஹல்காமில் மூடப்பட்டுள்ள பொது பூங்காக்களை அரசு திறக்க வேண்டும் என்றும் பெரும்பாலான ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பஹல்காம் பள்ளத்தாக்கின் உயரமான சிகரங்களால் சூழப்பட்ட போஷ்வான் பூங்கா, நேரு பூங்கா, தீவு பூங்கா பஹல்காம், லிடர் வியூ பூங்கா மற்றும் அரு பூங்கா போன்ற பொது பூங்காக்கள் பல நாட்களாக மூடப்பட்டுள்ளன.

“பஹல்காமில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் திரும்பி வருவதற்காக அவை திறக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஜாவேத் புர்சா தெரிவித்துள்ளார்.

‘அமர்நாத் யாத்திரை மீது நம்பிக்கை’ – ஜம்மு காஷ்மீரில் மீண்டும் சுற்றுலாத்துறை வளர்ச்சி காண, ஜூலை 3 ஆம் திகதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். “யாத்திரையை நாங்கள் நடத்துவோம். யாத்திரையைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஹோட்டல்கள் ஏற்கனவே 50% வரை கட்டண தள்ளுபடியை வழங்கி வருகின்றன. நாங்கள் சுற்றுலாப் பயணிகளை அணுகி வருகிறோம். நிலைமை மாறும்.” என்று ஜாவேத் புர்சா கூறியுள்ளார்.

ஜோர்பிங் மற்றும் ஜிப்லைன் போன்ற சாகச விளையாட்டுகளில் முதலீடு செய்த இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். “சாகச விளையாட்டுகளைத் தொடங்க நான் வங்கியில் இருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்தது. இந்த ஆண்டு நல்ல லாபத்தை எதிர்பார்த்தோம். எனது வாழ்வாதாரம் சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்துள்ளது.” என்று உள்ளூர்வாசி நசீர் மிர் கூறினார்.

பஹல்காமில் விவசாய நிலங்களோ, பழத்தோட்டங்களோ கிடையாது. இந்த நகரில் உள்ள சுமார் 9,264 மக்கள் சுற்றுலாவையே நம்பி இருக்கிறார்கள். பல இளைஞர்கள் குழுவாக சேர்ந்து ஹோட்டல்களை குத்தகைக்கு எடுத்துள்ளனர். “மே முதல் ஜூன் வரையிலான முக்கிய சுற்றுலா சீசன் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த ஆண்டு ஹோட்டலுக்கான குத்தகைக்காக செலுத்திய பணத்தை கூட எங்களால் சம்பாதிக்க முடியவில்லை. பல முதலீட்டாளர்கள் மனச்சோர்வில் மூழ்கியுள்ளனர். அரசாங்கம் சுறுசுறுப்பாக செயல்பட்டு சுற்றுலாவை மீட்டெடுக்க உதவ வேண்டும்” என்று மற்றொரு உள்ளூர்வாசியான ஃபிர்தௌஸ் தார் கூறினார்.

பஹல்காமின் மயக்கும் அழகு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் நம்புகின்றனர். “பஹல்காம் சுத்தமாகவும், சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கத் தயாராகவும் உள்ளது. எந்தவொரு சம்பவமும் மக்கள், காஷ்மீருக்குச் செல்வதைத் தடுக்காது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்று ஜாவேத் புர்சா தெரிவித்துள்ளார்.

The post தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு – வெறிச்சோடி காணப்படும் பஹல்காம் சுற்றுலா தலங்கள் appeared first on Oruvan.com.

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் திகதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. இதில், பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் திகதிக்கு முன்பாக திரும்ப வேண்டும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து 24-ம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவால் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து செல்லுபடியாகும் விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

தற்போது திருத்தப்பட்டபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசா காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க இந்தியர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக மத்திய அமைச்சரவை நாளை காலை 11 மணிக்கு கூட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை appeared first on Oruvan.com.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.

மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில்,

இது சமீபத்திய காலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும்.

மேலும் அவர்கள் காஷ்மீரில் 1,000 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அநேகமாக அதை விட நீண்ட காலம் இருக்கலாம். இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இதற்கு ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ தீர்வை கண்டுபிடித்துவிடுவார்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்றார்.

The post பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது appeared first on Oruvan.com.