சுமந்திரன் Archives - Oruvan.com

கூட்டு பயணம் குறித்து கட்சியே முடிவெடுக்கும்: சுமந்திரன் அறிவிப்பு
” மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீண்டகாலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்தக் கட்சியின் சார்பில் எவரும் பங்கேற்றிருக்கவில்லை. அதனையடுத்து தனிப்பட்ட சில காரணங்களால் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் சந்திப்புக்களில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பதாகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணம் குறித்து சுமந்திரனிடம் வினவியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது எனவும், இருப்பினும் அன்றைய தினம் கொழும்பில் இருக்க வேண்டியிருந்த காரணத்தால் அதில் பங்கேற்க முடியவில்லை எனவும் பதிலளித்தார்.

The post கூட்டு பயணம் குறித்து கட்சியே முடிவெடுக்கும்: சுமந்திரன் அறிவிப்பு appeared first on Oruvan.com.

வடக்கில் புதிய கூட்டு – சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம்
செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் இணைத்தளவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் இருக்கின்ற அனைவரிடமும் கையெழுத்துக்களை பெற்று சர்வதேச நீதி விசாரணை என்பது தேவை என்பதை வலியுறுத்தி சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் ஐநா சபைக்கு பல்வேறுபட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் கோரிக்கைகளாக நாங்கள் இந்த விடயத்தினை முன்வைக்க விரும்புகின்றோம்.

அத்துடன், ஆரம்ப கட்டமாக ஒரு கையெழுத்து போராட்டம் ஒன்றினை வடகிழக்கில் மேற்கொள்வதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது.

அதுபோல இலங்கை தமிழரசு கட்சியிடமும், தமிழர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் பேசியிருந்தோம் அவர்கள் அதற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள்.

எனவே அனைவரும் இணைந்து ஒரு பொதுவான தமிழ் மக்கள் சம்பந்தமான பிரச்சினை என்ற விடயத்தில் ஒன்று திரண்டு போராட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது

அதேபோல முன்னணியினரும் சில திருத்தங்களுடன் கையெழுத்துப் போராட்டத்தில் இணைவதாக தெரிவித்துள்ளார்கள்.

எனவே எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இந்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டு மக்களிடம் வையொப்பங்களை பெற்று உரிய தரப்பிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராசா கஜேந்திரன், முருகேசு சந்திரகுமார், மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளி கட்சியின் பிரதிநிதி வேந்தன் ஆகியோர்கலந்து கொண்டனர்.

The post வடக்கில் புதிய கூட்டு – சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் appeared first on Oruvan.com.

செம்மணி வழக்கில் இராணுவ அதிகாரிகள் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு – சுமந்திரன்
செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றை தமது சமர்ப்பணத்தில் கோரினார்.

1990 களின் கடைசி வரையான காலத்தில் இந்தப் பிரதேசத்தில் காணாமல்போன ஆள்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நான்கு பேர் கொண்ட ஆணையம் ஒன்றை நியமித்து விசாரணை செய்தது.

தேவநேசன் நேசையா தலைமையிலான இந்தக் குழுவில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, ஜெஸிமா இஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அந்த ஆணைக்குழு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்தச் சமயத்தில் காணாமல்போன 300 பேர் வரையானோர் குறித்து அந்த ஆணைக்குழு விசாரணை நடத்தி இருக்கின்றது. அவர்களில் 200 பேர் வரை இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அந்த விசாரணை ஆணைக்குழு அதில் சம்பந்தப்பட்ட பல படையினரின் பெயர் விவரங்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்று தெரிவித்த சுமந்திரன் சுமார், 210 பக்கம் கொண்ட அந்த ஆணைக்குழு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின்படி, காணாமல்போனோரின் பெரும்பாலானோர் இந்த செம்மணிப் பிரதேசத்தை நெருக்கமான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அவ்வாறானோரில் பெரும்பாலானோரின் கதி செம்மணித் தரவையில் முடிவுற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அந்த அறிக்கை கொண்டிருந்தது.

அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த சுமந்திரன், அந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இந்த எலுப்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணை மும்முரமடையும்போது நாட்டை விட்டுத் தப்பி ஓடி தலைமறைவாகக் கூடிய வாய்ப்பு உண்டு. அது குறித்து முற்கூட்டியே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமந்திரன் நீதிமன்றத்தைக் கோரினார்.

அந்த ஆணைக்குழு அறிக்கையின் பிரதியைப் பெற்றுக்கொண்ட நீதிவான் இந்த விடயம் குறித்து புலனாய்வு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினரைப் பணித்தார்.

The post செம்மணி வழக்கில் இராணுவ அதிகாரிகள் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு – சுமந்திரன் appeared first on Oruvan.com.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் விருப்பம்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்சி என்ன முடிவெடுக்கின்றதோ அதற்கு தான் முழுமையாக கட்டுப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது.

யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன் போது கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான விடயங்களை கையாள என கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடின.

இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக குறிப்பிட்ட அவர், தனது விருப்பத்தை கட்சிக்கு முறையாக அறிவிக்க உள்ளதாகவும் எனினும், தனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தன்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால், கட்சியின் முடிவுக்கு தான் முழுமையாக கட்டுப்படுவேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் விருப்பம் appeared first on Oruvan.com.

எந்தத் தரப்புடனும் தமிழரசுக் கட்சி கூட்டாட்சிக்கு இணங்கவேயில்லை: சுமந்திரன்
“நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம். மாறாக ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தாவை இரகசியமாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிவிட்டு, அந்தச் சந்திப்பு பற்றி மக்களுக்குத் தெரியவந்தவுடனே அது பிற்போடப்பட்டது எனக் கூறி, ஒளித்து திரிவதைப்போல் நாங்கள் செயற்படவில்லை. நாங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் கட்சியின் தீர்மானத்தின் படி சகல கட்சிகளுடனும் பேசியிருக்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு எங்களுடைய கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம். அதாவது எந்தெந்தச் சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றதோ அந்தக் கட்சிக்கு ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் எனவும், இது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேசுவது என்பதைப் பகிரங்கமாகவே கூறியிருந்தோம்.

வன்னியிலும் கிழக்கிலும் நாங்கள் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச வேண்டி இருந்தது. அதனால் ‘தமிழ் தேசியக் கட்சிகள்’ என்று வரையறுக்காமல் ‘தமிழ்க் கட்சிகள்’ என எல்லா தரப்பையும் அணுகுவது என்று தீர்மானித்தோம்.

அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய சிறிதரனும் அது பற்றி பேசினார். தம்முடன் ஹக்கீம் பேசி இருக்கின்றார் என்றும், ஆகையினால் முஸ்லிம் கட்சிகளுடனும் நாங்கள் இது பற்றி பேச வேண்டும் என்றும் அவர் கூறியமையைக் கட்சி ஏற்றுக் கொண்டது. அதன்படியே தமிழ் கட்சிகள் எல்லாவற்றுடனும் பேசுகிறோம்.

எவருடனும் கூட்டணியை அமைக்கப்போவதாக நாங்கள் கூறவில்லை. எனினும் விசேடமாக திருகோணமலையில் முஸ்லிம் காங்கிரஸோடு ஒப்பந்தம் ஒன்றை பகிரங்கமாக செய்திருக்கின்றோம். மேலும் வவுனியாவில் பல கட்சிகளோடு ஏற்பட்ட இணக்கப்பாட்டை ஊடக சந்திப்புக்கள் ஊடாக பகிரங்கமாகவே சொல்லியிருக்கின்றோம். அது வெறுமனே உள்ளூராட்சி மன்றங்களில் நிர்வாகங்களை எப்படி பகிர்ந்துகொள்வது என்பதற்கான ஒப்பந்தமும் கலந்துரையாடலும் மட்டுமே ஆகும்.

யாழ்ப்பாணத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எங்களோடு சந்திப்பை மேற்கொள்ள விரும்பினார்கள். நான் சித்தார்த்தனின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தேன். அதன் பின்னர் எனது இல்லத்திலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் வருகை தந்து சந்திப்புகளில் ஈடுபட்டார்கள். இதன்போது எங்களுக்கு அதிகூடிய ஆசனங்கள் உள்ள சபைகளில் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அதற்கு அவர்கள் இணங்கினார்கள். அவர்கள் எங்களிடம் ஒரு சில சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பிலும் பேசினார்கள்.

அதன்பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரனுடனும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். அதன்போது கொள்கை உடன்பாடு குறித்து எதுவும் பேசவில்லை. உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லாமல் ஆட்சியமைப்பது தொடர்பில் பேசினோம். அவர்களும் அதற்கு இணங்கினார்கள்.

எங்கள் சந்திப்புக்கு முன்னரே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைகளில் முதன்மை பெற்ற தமிழ்க் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பு சிறீதர் திரையரங்கில் இடம்பெற்றது. எங்கள் அரசியல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான, எந்தெந்த சபைகளில் தமிழ்க் கட்சிகள் அதிகூடிய ஆசனங்களை பெற்றிருக்கின்றனவோ அந்த கட்சிக்கு சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பி. ஆதரவளிக்க வேண்டும். எந்தெந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் உள்ளதோ அங்கே தமிழரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதையே அவர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

சகல தமிழ்க் கட்சிகளுடனும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது கூட்டணிகளை அமைப்பதற்காக அல்ல. சபைகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சி ஏனைய கட்சிகள் ஆதரவளிப்பது என்ற கோட்பாட்டை அழுல்படுத்தவே ஆகும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள சிறீதர் திரையரங்கிற்கு சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை தொடர்பில் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். அது குறித்தும் சிவஞானத்திடமும் வினவியிருந்தேன். “நாங்கள் பெரிய கட்சி என்று பாரபட்சம் பார்க்காது, நாங்களாக சந்திக்கச் செல்கின்றபோது அவருடைய இடத்துக்குச் சென்று சந்திப்பதே முறையானது” என்று அவர் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் எங்களுக்கும் இடையிலான சந்திப்பும் ஆரம்பத்தில் கஜேந்திரகுமாரின் இல்லத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னரே சந்திப்பு இடம் மாற்றப்பட்டது.

பலருக்கு சிறீதர் திரையரங்கு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எங்கள் தலைவர் பொது இடத்திலோ அல்லது தன்னுடைய இல்லத்துக்கு அழைத்தோ டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து இருக்கலாம். ஆனால், இங்கு பிரதான விடயம் சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பதல்ல. நாங்கள் அதிகூடிய ஆசனங்களை பெற்ற சபைகளில் ஏனைய தமிழ்க் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையே முக்கியமானது.

நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக முன்வைத்திருக்கின்றோம் . மாறாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் டக்ளஸ் தேவானந்தாவை இரகசியமாக சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிவிட்டு அந்த சந்திப்பு மக்களுக்கு தெரியவந்தவுடனே கூட்டம் காலவரையின்றி பிற்போடப்பட்டது எனக் கூறி ஒளித்துத் திரிவதைப்போல் நாங்கள் செயற்படவில்லை. நாங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் கட்சியின் தீர்மானத்தின் படி சகல கட்சிகளுடனும் பேசியிருக்கின்றோம்.” – என்றார்.

The post எந்தத் தரப்புடனும் தமிழரசுக் கட்சி கூட்டாட்சிக்கு இணங்கவேயில்லை: சுமந்திரன் appeared first on Oruvan.com.

தமிழரசு – முன்னணித் தலைவர்கள் சந்திப்பு; இணக்கப்பாடு எதுவுமே வரவில்லை: சுமந்திரன் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு தலைவர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு தலைவர்களுக்கும் இடையில் நேற்று மாலை இரண்டு மணிநேரம் நடைபெற்ற பேச்சுகளில் கொள்கை ரீதியான இணக்கப்பாடு எதுவும் உடன்பாடாக எட்டப்படவில்லை. ஆனால், இந்த விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிச் செயற்படுவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிபடத் தெரிவித்தார்.

”வடக்கு, கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியினரின் நிலைப்பாடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னியினரின் நிலைப்பாடும் ஏறத்தாழ ஒரே நிலைப்பாடாக இருக்கின்ற காரணத்தால் அந்த அடப்படையிலேயேதான் சபைகள் அமைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அல்லது அதனை உறுதியாகச் சொல்லலாம். இதை ஓர் இணக்கப்பாடாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆகையினாலே இணக்கப்பாடு இல்லை என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இணங்கியிருக்கின்றோம்.” – என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

யாழ். தாவடியில் அமைந்துள்ள பொக்ஸ் விடுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் இன்று (நேற்று) மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நீண்ட பேச்சு இடம்பெற்றது. இந்தப் பேச்சு தற்போது முடிந்திருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிர்வாகங்களை அமைப்பது சம்பந்தமான பேச்சு. அது உருவாகுவதற்கக் காரணம் தேர்தல் முடிந்த கையோடு நாங்கள் எங்களுடைய நிலைப்பாடு ஒன்றை வெளிப்படையாகச் சொல்லியிருந்தோம். அதாவது ஒவ்வொரு சபைகளிலும் எந்தக் கட்சிக்கு அதிகூடிய உறுப்பினர்கள் இருக்கின்றனரோ அந்தக் கட்சி அந்தச் சபையிலே நிர்வாகங்களை அமைப்பதற்கு மற்றக் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். இந்தப் பொதுவான கோட்பாட்டை நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனும் இரண்டு சுற்றுப் பேச்சுகளின்போது பேசியிருக்கின்றோம். பொதுவாக அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க மற்றுமொரு கட்சி ஆதரவளிக்கின்றபோது அந்தச் சபையிலே மற்றக் கட்சிக்குக் கணிசமான ஆசனங்கள் இருந்தால் அவர்களுக்குப் பிரதி தவிசாளர் பதவி கொடுக்கப்படும் என நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். அப்படியெனில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலே 35 இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அமைக்கும். ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வவுனியா மாநகர சபையில் மட்டும்தான் அவர்களின் பிரதிநிதி ஒருவர்மேயராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இதனால் ஓர் நல்லெண்ண சமிக்கையாக மேலும் நான்கு சபைகளில் தங்களுக்குத் தவிசாளர் பதவிகளை வழங்க முடியுமா என்று அவர்கள் கேட்டிருந்தார்கள். நாங்கள் அது சம்பந்தமாக ஆராய்கின்றோம், எமது கட்சியில் அரசியல் குழுவில் இது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். சில வேளைகளிலே அப்படியான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நாங்கள் அந்த விடயத்தைச் சொல்லியுள்ளோம்.

இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தானாக ஓர் அறிவிப்பை விடுத்திருந்தார். அதாவது நாங்கள் சொன்ன அதே நிலைப்பாட்டை அவர் தெரிவித்திருந்தார். எந்தச் சபையில் எந்தக் கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றதோ அங்கே அந்தக் கட்சி ஆட்சி அமைக்கத் தாங்கள் ஆதரவு வழங்குவோம் என்று அவர் அறிவித்திருந்தார்.

இணக்கப்பாட்டோடு சேர்ந்து இயங்குவதாக இருந்தால் கொள்கை அளவிலே முழுமையாக ஏற்பட வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். நிர்வாகங்கள் அமைப்பதிலே அவர்களுடைய நிலைப்பாடும் நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலைப்பாடும் (ஏற்கனவே எனச் சொல்கின்றபோது இந்தத் தடவை மட்டுமல்ல 2018 இலும் நாங்கள் இதே நிலைப்பாட்டையே அறிவித்திருந்தோம்) ஒரே மாதிரியான நிலைப்பாடாக இருந்த காரணத்தினால்தான் எங்களுடைய கட்சியில் தலைவர் அவர்களோடு இது தொடர்பில் பேச வேண்டும் என்று அழைத்தபோது அவர்கள் உடனடியாக அதற்கு இணங்கி எங்களோடு பேசுவதற்கு வந்திருக்கின்றார்கள். அப்படியாக எந்தவிதமான மறுப்பும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் பேச வந்தமைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். எமது கட்சியின் தலைவர் கூட்ட ஆரம்பத்திலேயே இதனை அவர்களுக்குத் தெரிவித்தார்.

நாங்கள் பேசியபோது அவர்கள் தங்களது தனிப்பட்ட நிலைப்பாடாக அதனை அறிவித்ததாகச் சொன்னார்கள். அது எங்களுக்குத் தெரியும். கடந்த புதன்கிழமை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருடன் இடம்பெற்ற பேச்சின்போதும் அதையே தாங்கள் சொன்னதாக எங்களுக்குச் சொன்னார்கள். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரும் எங்களுக்கு அதையேதான் அறவித்திருக்கின்றார்கள்.

இப்போது வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற சபைகளில் நிர்வாகங்கள் அமைப்பதில் எங்களுடைய நிலைப்பாடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் நிலைப்பாடும் ஏறத்தாள ஒரே நிலைப்பாடாக இருக்கின்ற காரணத்தால் அந்த அடிப்படையிலேயேதான் சபைகள் அமைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் அல்லது உறுதியாகச் சொல்லலாம். இதை ஓர் இணக்கப்பாடாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆகையினாலே இணக்கப்பாடு இல்லை என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் இணங்கியிருக்கின்றோம்.” – என்றார்.

The post தமிழரசு – முன்னணித் தலைவர்கள் சந்திப்பு; இணக்கப்பாடு எதுவுமே வரவில்லை: சுமந்திரன் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
“தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்” என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் (19.05.2025) அவர் விளக்கமளித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.

கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றது. அதன்படி கட்சியில் வறிதாகும் பதவி நிலைகளுக்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும்.

அதன்படியே இன்றைய பதவி நிலை நியமனங்கள் செய்யப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை சிறிதரன் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் பல கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம்.

அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்தும் வகையில் அமைவதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றேன்.

நான் ஆட்சி செய்வது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன்.

அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கபாட்டையும் குழப்பியது கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழரசு கட்சியின் பொது செயலாளர் என்பதை இதுவரை ஏற்கவில்லை என தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை appeared first on Oruvan.com.

நோர்வே தூதுவரைச் சந்தித்து சுமந்திரன், சாணக்கியன் பேச்சு
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து உரையாடினார்கள்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே நோர்வே தூதுவருடனான சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.

எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இதன்போது பேசினோம் என்று சந்திப்பில் கலந்துகொண்ட சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

The post நோர்வே தூதுவரைச் சந்தித்து சுமந்திரன், சாணக்கியன் பேச்சு appeared first on Oruvan.com.

தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களை அநுரவிடம் வலியுறுத்திய மோடிக்கு சுமந்திரன் நன்றி தெரிவிப்பு!
“இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயம் இந்தியப் பிரதமரோடு சேர்ந்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக மூன்று விடயங்களை வலியுறுத்தியிருக்கின்றார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்காகப் பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள்  பூர்த்தியாவதையொட்டி தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா,சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும்போது,

“1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் மக்களுடைய ஜனநாயக ரீதியான தீர்ப்பு ஒன்றுதான். அது – இலங்கையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே.

தங்களை ஒரு தனி தேசமாக கணிக்கின்ற – வரித்துக் கொண்ட – தமிழ் மக்களுடைய ஜனநாயகத் தீர்ப்பாக – முடிவாக – அது இருக்கின்றது.

கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்களுடைய கட்சியாக வியாபித்து இருக்கின்ற எங்களுடைய தமிழரசுக் கட்சியின் சார்பில், இப்போது புதிதாக வந்திருக்கின்ற இந்த அரசுக்கும் எமது கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு நாளிலே ஒரு செய்தியை நாங்கள் சொல்லுகின்றோம்.

சர்வதேசத்தினால், சர்வதேச சட்டங்களினால், ஒரு மக்கள் கூட்டமாக கருதப்படுகின்ற எங்கள் இனத்தினுடைய ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை இந்த புதிய அரசுக்கும் நாங்கள் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

நீங்கள் ஆட்சிக்கு வருகின்ற போது புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள். அதனை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்துகிறோம்.

1956 முதல் எந்தவித சலமும் இல்லாமல், சமஷ்டி ஆட்சி முறை இந்த இலங்கை தீவில் உருவாக்கப்பட வேண்டும் என்று வடக்கு, கிழக்கு தமிழர்கள் தொடர்ந்து ஜனநாயக முறையில் வலியுறுத்தி வரும் கோரிக்கை அந்த அரசமைப்பு உருவாக்கத்தின்போது உள்வாங்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தமிழரசுக் கட்சியின் அங்குரார்ப்பண நாளில் அரசுக்குக் கூறி வைக்க விரும்புகின்றோம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயம் இந்தியப் பிரதமரோடு சேர்ந்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக மூன்று விடயங்களைத் தெரிவித்திருக்கிறார்.

முதலாவது – இலங்கையின் அரசமைப்பை முற்றுமுழுத்தாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது. காலாகாலமாக இந்திய அறிக்கைகளில் பதிமூன்றாவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயம் சொல்லப்படுவது வழமை. 13 ஆவது திருத்தம் இலங்கை அரசமைப்பின் ஒரு பின்னிணைப்பு அல்ல, அது அரசமைப்பின் ஒரு பகுதி என்பதை நாங்கள் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டி வருகின்றோம். ஆகையினால் இலங்கையின் அரசமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் குறிப்பிடுவது 13ஆவது திருத்தம் மற்றும் தமிழ்மொழியின் நடைமுறையாக்கம் தொடர்பான 16 ஆவது திருத்தம் ஆகியவற்றையும் சேர்த்துதான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதில் குறிப்பிட்ட படி காணி, பொலிஸ் அதிகாரங்கள் – அவை முழுமையாக வழங்கப்பட்டிருக்கின்றனவோ இல்லையோ – குறிப்பிட்டபடி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தியப் பிரதமரின் கருத்து.

இரண்டாவதாக அவர் கூறியிருப்பது இலங்கை தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது.

தமிழ் மக்களுடைய அபிலாசை என்பது 1956 முதல் தெட்டத் தெளிவாக தமிழ் மக்கள் முன்னிறுத்தி வருகின்ற சமஷ்டி முறைத் தீர்வுதான், அதற்கு குறைவானது எதுவும் அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆகவே, தமிழ் மக்களின் அந்த அரசியல் அபிலாஷை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பாரதப் பிரதமரின் கோரிக்கை.

மூன்றாவது விடயம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.

ஆகவே, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் இவற்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கின்றமையை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதற்காகப் பாரதப் பிரதமருக்கு நன்றி கூறும் அதேவேளை, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இவ்விடயங்களில் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய கடப்பாடுகளையும் நாம் நினைவு கூற விரும்புகின்றோம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு இருக்கின்ற அதேவேளை அவற்றை நிறைவேற்ற பண்ணுகின்ற எல்லாவிதமான இராஜதந்திர நகர்வுகளையும் இந்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.” – என்றார்.

The post தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களை அநுரவிடம் வலியுறுத்திய மோடிக்கு சுமந்திரன் நன்றி தெரிவிப்பு! appeared first on Oruvan.com.