ஒருவன் செய்திகள் Archives - Oruvan.com

மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வு
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலமைக்கு பின்னர் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் நிலங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் சேதமடைந்த நிலையில், மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, லீக்ஸ் ஒரு கிலோ 2800 ரூபாவிற்கும், கெரட் ஒரு கிலோ 2800 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 800 ரூபாவிற்கும், முள்ளங்கி ஒரு கிலோ 400 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 3000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக கமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விவசாயத் துறையின் தரநிலைகளுக்கு இணங்க உறைந்த காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வு appeared first on Oruvan.com.

அம்பாறையில் கால்வாயில் கார் வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு
வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இன்று(27) முற்பகல் இடம்பெற்றது.

இதன் போது அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த காரில் ஆண் பெண் சிறுமி என மூவர் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post அம்பாறையில் கால்வாயில் கார் வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் அடைமழை – வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன.

இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பார் வீதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையினால் முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதுடன், மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்ட பகுதிகளின் மின் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டது.

மட்டக்களப்பின் நகர்ப்பகுதியான கூழாவடி, திசவீரசிங்கம் சதுக்கம், இருதயபுரம், கறுவப்பங்கேணி, பூம்புகார், புதூர், திமிலைதீவு, சேற்றுக்குடா உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

இதேபோன்று கல்லடி பகுதியிலும் மரங்கள் முறிந்ததனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதுடன், பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதனால் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காணமுடிகின்றது.

நேற்றைய தினம் மட்டக்களப்பு நகரில் 93.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

The post மட்டக்களப்பில் அடைமழை – வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் appeared first on Oruvan.com.

இலங்கையில் 19.4 சதவீத பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு
இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் அதிகமாக உள்ளமை கண்டறியக்கப்பட்டுள்ளது.

ஆசியர்களில் 16.1 சதவீதம் பேர் மட்டுமே இந்த மனநலக் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் குழுவால் நடத்தப்பட்ட ஆய்வில், 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் இலங்கையர்களில் 39 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மனநல சேவைகளுக்கான ஏற்பாடுகளை இலங்கை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது.

ஏனெனில் இந்த வயதினரில் கணிசமான பகுதியினர் 7.0 சதவீதம் உயிர் மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகவும், மற்றும் பலர் 35 சதவீதம் ஒருவருக்கொருவர் வன்முறையை அனுபவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 200,000 பேர் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்கின்றனர். இவ்வாறு புலம்பெயரும் பெண்களில் 75 சதவீதம் பேர் திருமணமானவர்கள்.

இவ்வாறு புலம்பெயரும் பெண்களின் பிள்ளைகளுக்கே மன அழுத்தம் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

The post இலங்கையில் 19.4 சதவீத பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு appeared first on Oruvan.com.

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்
நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் இடம்பெற்றிருந்தது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டத்தில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி சுமார் 20 வழித்தடங்களில் வழங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாகும்புரவிலிருந்து காலி, மாத்தறை, பதுளை நோக்கிச் செல்லும் பேருந்துக, கொழும்பு முதல் அம்பாறை வரை இயக்கப்படும் பேருந்துகள், கடவத்தை முதல் பொரளை வரை இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் மொனராகலை முதல் பிபில வரை இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை முதல் பண்டாரவளை மற்றும் பதுளை முதல் மஹியங்கனை வரை இயக்கப்படும் பேருந்துகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில், தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுமுது ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

ஏழு தனியார் மற்றும் அரசு வங்கிகள் ஏற்கனவே வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதியை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இது பயணிகளின் மீதமுள்ள பணத்தை வழங்குவதில் உள்ள சிக்கலுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்பதுடன், பேருந்து உரிமையாளர்கள் பெறும் வருமானத்தை துல்லியமாக கணக்கிட உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம் appeared first on Oruvan.com.

யானைகளை மீளப் பெருவது குறித்து பேசவில்லை – அரசாங்கம் அறிவிப்பு
இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை திரும்பப் பெறுவது குறித்து இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பிரசாத் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த யானைகள் நல்ல ஆரோக்கியத்துடன்  இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவால் தொகுக்கப்பட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், யானைகள் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

யானைகள் தொடர்பாக ஆய்வு செய்ய தாய்லாந்து நாட்டின் இரண்டு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சுசார்ட் சோம்க்ளின் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும்,  இதன் போது யானைகளின் மருத்துவ அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

“தாய்லாந்துடனான இருதரப்பு நல்லெண்ணத்தை வலுப்படுத்த இந்த யானைகள் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் களனி ராஜமஹா விஹாரையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post யானைகளை மீளப் பெருவது குறித்து பேசவில்லை  – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

காலி மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – மகாதுர நளின் வசந்தவின் சகோதரி உயிரிழப்பு
காலி மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் உணவகம் ஒன்றில் நுழைந்து நேற்று (17) இரவு நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உணவக உரிமையாளரும் கரந்தெனிய சுத்தாவின் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாதுர நளின் வசந்தவின் சகோதரியான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராஜமெதுர வீதி தம்பஹிட்டிய மீடியகொடவைச் சேர்ந்த 47 வயதுடைய ரோசி என அழைக்கப்படும் மகாதுர ரோசிகா ஷமீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் சீன உணவகம் நடத்தி வரும் உரிமையாளரான பெண், சம்பவ தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் உணவகத்தில் இருந்துள்ள போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த பெண்ணை பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பெண், 03.05.2025 மீடியாகொடவில் உள்ள உணவகத்தில் கரந்தெனிய சுத்தாவின் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாதுர நளின் வசந்தவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது

The post காலி மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – மகாதுர நளின் வசந்தவின் சகோதரி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

நிதிஷ் குமார் 10வது முறை​யாக பிஹாரின் முதலமைச்சராகின்றார்
பிஹாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறை​யாக மீண்​டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்பு விழா ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாரதிய ஜனதா கட்சி தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில், பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர்.

பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார் பாட்​னா​வில் நேற்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஹார் சட்டமன்ற தேர்தலின் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஐக்​கிய ஜனதா தள கட்சி உறுப்பினர்களின் கூட்​டம் பாட்​னா​வில் இன்று நடை​பெறவுள்ளது.

இந்த கூட்​டத்​தில் ஐக்​கிய ஜனதா தள சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக நிதிஷ் குமார் தெரிவுசெய்​யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆளுனரை சந்​தித்து பதவி விலகல் கடிதத்தை கையளிக்க உள்​ளதுடன், புதி​தாக ஆட்​சி​யமைக்​க​வும் நிதிஷ் குமார் உரிமை கோரு​வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி  நிதிஷ் குமார் 10வது முறை​யாக மீண்​டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிகழ்வில் பிரதமர் நரேந்​திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிதிஷ் குமார் 10வது முறை​யாக பிஹாரின் முதலமைச்சராகின்றார் appeared first on Oruvan.com.

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை – சந்தேகநபர் கைது
திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருமணமானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண் ஒருவர், ஒக்டோபர் 25ஆம் திகதி இளைஞர் ஒருவர் தன்னிடம் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தின் காணொளியையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக சுற்றுலா பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண் அன்று அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் குறித்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

The post வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை – சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையான (MEPA) கொழும்பின் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளைத் தானாகச் சேகரிக்கும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அதிநவீன இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதுடன், அதன் செயல்திறன் மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்புக்காகச் சிறப்பான டிஜிட்டல் தரவு முறைமை ஒன்றையும் கொண்டுள்ளது.

இலங்கையில் சுற்றுச்சூழல் தூய்மைக்கான இந்த முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, நேற்று கொழும்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் டொக்டர் தம்மிக பெதபெண்டி தலைமையில் நடைபெற்றது.

The post இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்! appeared first on Oruvan.com.