ஈரான் போர் Archives - Oruvan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் மன்னர் சார்லஸ்
வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பிரித்தானிய மன்னர் சார்லஸின் அமெரிக்க விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவை சென்றடைகின்றனர்.

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காயமின்றி தப்பிய நிலையில், மன்னரின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என வெள்ளை மாளிகையும் பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ளன.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி ட்ரம்ப்புடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள மன்னர், அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

ஈரான் போர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, உறவை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

The post பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் மன்னர் சார்லஸ் appeared first on Oruvan.com.

லங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது இலங்கை அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நன்றி தெரிவித்திருந்தார்.

இலங்கையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையின்படி , ஐரிஸ் தேனா கப்பல் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் என்று விவரித்து, அமைச்சர் அரக்சி  கண்டித்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் 1949ம் ஆண்டு ஜெனீவா உடன்படிக்கைகளின் கடுமையான மீறலாக அமைந்த இந்தத் தாக்குதலை ஈரான் ஒருபோதும் மறக்காது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்ய, ஈரான் அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிகளையும் பின்பற்றும் என்று அவர் உறுதியளித்தார்.

பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஈரான் மற்றும் இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல் appeared first on Oruvan.com.

ஹார்முஸ் நீரிணையில் மூன்றாம் உலகப் போர்!! நவீன கப்பல்களுடன் தயார் நிலையில் சீனா
ஈரானிய துறைமுகங்களைக் குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் பின்னணியில், அப்பகுதியில் சீனக் கடற்படை இயங்குவதால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது .

சீனக் கடற்படையின் 48வது பாதுகாப்புப் படைப்பிரிவு தற்போது ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை சீனா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது .

இந்தத் தாக்குதல் படையில் சீனாவின் மிக நவீன போர்க்கப்பல்களான டாங்ஷான் (122), ஏவுகணை அழிப்புக் கப்பல்டாகிங் (576), தைஹு எரிபொருள் நிரப்பும் கப்பல் ஆகியவற்றுடன், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைப் படை வீரர்களும் அடங்குவர்.

ஈரானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களை அமெரிக்கக் கடற்படை சோதனையிட்டுத் தடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

ஈரானியக் கச்சா எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளரான சீனா, தனது எண்ணெய்க் கப்பல்களைப் பாதுகாக்க இந்தப் போர்க்கப்பல்களைப் பயன்படுத்துவதாக சர்வதேசப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர் .

இருப்பினும், இது ஒரு வழக்கமான கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கை மட்டுமே என்று சீனப் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

ஆனால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது ” என்று கூறி சீனா கடுமையாக விமர்சித்துள்ளது .

ஹார்முஸ் நீரிணையில் உலகின் இரு சக்திவாய்ந்த கடற்படைகளுக்கு இடையே நடந்த மோதல், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா தனது கடற்படை பலத்தை ஜிபூட்டியில் உள்ள தனது இராணுவத் தளம் மூலம் செலுத்தி வருகிறது, மேலும் எந்த நேரத்திலும் ஹார்முஸ் நீரிணையை நோக்கிப் பயணிக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது .

ஈரானிய எண்ணெயை ஏற்றிச் செல்லும் சீனக் கப்பலை அமெரிக்கப் படைகள் ஆய்வு செய்ய முயன்றால், அது இரு உலக வல்லரசுகளுக்கும் இடையே நேரடிப் போராக முற்றிவிடக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் எச்சரித்து வருகின்றன .

The post ஹார்முஸ் நீரிணையில் மூன்றாம் உலகப் போர்!! நவீன கப்பல்களுடன் தயார் நிலையில் சீனா appeared first on Oruvan.com.

ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை
ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர மறுத்தால், அமெரிக்கப் படைகள் மீண்டும் போரைத் தொடங்கத் தயாராக இருப்பதாக பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ‘உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் மீளவும் தொடங்குமென அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“ஈரான், ஒரு வளமான எதிர்காலத்தையும், ஒரு ‘பொன் பாலத்தையும்’ தேர்ந்தெடுக்கலாம். ஈரான் மக்களின் நலனுக்காக அவ்வாறு செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

“ஆனால் ஈரான் தவறான முடிவுகளை எடுத்தால், அது முற்றுகைகளையும், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்,” என்று ஹெக்செத் மேலும் கூறினார்.

மேலும், ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய துறைமுகங்களுக்குள், தேசியம் பாராமல் அனைத்துக் கப்பல்களும் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ அமெரிக்கா முடிந்தவரை தடுக்கும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது.

இந்நிலையில், சமாதான ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானிய துறைமுகங்களுக்குக் கடற்படை முற்றுகையிட உத்தரவிட்டார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபை வியாழக்கிழமை சந்தித்தார் என்று ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அவர்களின் சந்திப்பு குறித்து வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை. கடந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தது.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இருப்பினும், மேலதிகப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.

The post ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!! அடுத்து என்ன நடக்கும்?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 40 நாட்கள் நீடித்த போருக்குப் பின்னர், இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், அமெரிக்காவும் – இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தும், அதே நேரத்தில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்காக மீளவும் திறக்கும்.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் மூலம் இந்தப் போர் நிறுத்தம் சாத்தியமானது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இரு தரப்பினரும் விவேகத்துடன் செயல்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்தத்தின் முக்கிய நிபந்தனைகள்

ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா ஈரான் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தும், ஈரான் ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கம்.

அதே நேரத்தில் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்தன, அவை தற்போது குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

முன்மொழியப்பட்ட 10 அம்சத் திட்டம்

அல் ஜசீராவின்படி, ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவுகளில், அமெரிக்காவிடமிருந்து ஆக்கிரமிப்பு இருக்காது என்ற உத்தரவாதம், ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரானின் வரையறுக்கப்பட்ட கண்காணிப்புடன் கூடிய போக்குவரத்து, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை அங்கீகரித்தல், ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குதல், ஐ.நா மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் தீர்மானங்களை ரத்து செய்தல், அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களைத் திரும்ப ஒப்படைத்தல், மற்றும் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் மூலம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் ஆகியவை அடங்கும்.

ஊடக அறிக்கைகளின்படி, ஈரானின் அணு ஆயுதக் கையிருப்புப் பிரச்சினை எந்தவொரு இறுதி ஒப்பந்தத்திலும் முழுமையாகத் தீர்க்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும்?

அரபு ஊடகங்களின்படி, நாளை வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் முறைசார்ந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் போது இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போதைய நிலவரம் குறித்து சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகையில், அடுத்த இரண்டு வாரங்கள் மத்திய கிழக்கு அமைதி, உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

The post அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!! அடுத்து என்ன நடக்கும்? appeared first on Oruvan.com.

ஈரானின் கார்க் தீவு மீது பலத்த தாக்குதல்
கார்க் தீவு பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் கார்க் தீவு பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என ஈரானிய மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமாக விளங்குகிறது. போரின் ஆரம்பத்தில் அமெரிக்கா குறித்த தீவின் மீது குண்டுவீசியிருந்தது.

எனினும், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பை அது பாதிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அப்போது திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

ஈரானின் எண்ணெயைக் கட்டுப்படுத்துவதற்காக, அமெரிக்கா அந்தத் தீவைக் கைப்பற்றக்கூடும் என்று டிரம்ப் பல்வேறு சமயங்களில் அச்சுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ஈரானின் கார்க் தீவு மீது பலத்த தாக்குதல் appeared first on Oruvan.com.

அபாய கட்டத்தில் ஈரான் போர் – உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இரு தரப்பினருக்கும் சிறப்பு அமைதித் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய ஸ்திரத்தன்மையை முதன்மைப்படுத்தி இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அமைதித் திட்டம் இரு தரப்பினருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம், உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இறுதிக்குள் உடன்பாடு ஒன்றுக்கு வராவிட்டால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியப் போவதில்லை என உறுதியான இருக்கும் ஈரான் ஹார்முஸ் நீரிணையை உடனடியான திறக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.

இந்நிலையிலேயே, தற்காலிகமாக ‘ இஸ்லாமாபாத் ஒப்பந்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழிவு இரு தரப்பினருக்கும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சமாதானத் திட்டம், உடனடி போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து 15-20 நாட்களுக்குள் ஒரு விரிவான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் இரு கட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான மத்தியஸ்தம் வகிக்கும் நிலையில், அந்நாட்டு இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருடன் “இரவு முழுவதும்” பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் நீரிணையை மீளவும் திறக்காது என்றும், இந்த முன்மொழிவை ஈரான் பரிசீலித்து வருவதால் காலக்கெடுவை ஏற்காது என்றும் மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான தயார்நிலை அமெரிக்காவிடம் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈடாக, அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட நிதிச் சொத்துக்களை விடுவிப்பது குறித்துஒரு உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும், சீனா , துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இந்த அமைதி முன்னெடுப்பிற்குப் பங்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அபாய கட்டத்தில் ஈரான் போர் – உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு appeared first on Oruvan.com.

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டை வீசிய அமெரிக்கா!! ட்டிம்ப் போடும் திட்டமென்ன?
ஈரான் மீது அமெரிக்கா பங்கர்-பஸ்டர் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்பஹானில் நகரில் உள்ள முக்கிய ஆயுதக் கிடங்கை இலக்கு வைத்து சுமார் 2,000 பவுண்டு எடை கொண்ட பங்கர்-பஸ்டர் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்த கணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எந்த விளக்கமும் இணைக்கப்படாத அந்தக் காணொளி, இஸ்பஹான் தாக்குதலைக் காட்டுவதாக அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டது.

பங்கர் பஸ்டர் (Bunker Buster) என்பது நிலத்தடியில் ஆழமாகப் புதைந்துள்ள பதுங்கு குழிகள், ஆயுதக் களஞ்சியங்கள் மற்றும் அணுசக்தி மையங்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணை அல்லது குண்டு ஆகும்.

இவை கான்கிரீட் மற்றும் பாறைகளைத் துளைத்துக்கொண்டு, மிக ஆழத்தில் வெடித்துச் சிதறும் திறன் கொண்டவை ஆகும்.

இந்நிலையில், ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அதிக எண்ணிக்கையிலான ஊடுருவும் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் வெளியிட்டுளு்ள அந்தக் காணொளியில், தொடர்ச்சியான வெடிப்புகளும் அதைத் தொடர்ந்து ஏற்படும் கடுமையான தீ மற்றும் புகை மண்டலங்களும் பதிவாகியுள்ளன.

இது, தாக்குதல் நடந்த இடத்தில் சேமிக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளால் இரண்டாம் நிலை வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஈரான் தனது சுமார் 540 கிலோகிராம் என மதிப்பிடப்பட்ட, அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை இஸ்பஹான் நகரில் உள்ள நிலத்தடி வசதிகளுக்கு மாற்றியிருக்கலாம் என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனால் இஸ்பஹானின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்திருந்த பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்பஹானை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மூலம் ஈரானின் இராணுவ திறனை நேரடியாக பாதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதனால், அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி டிரம்ப், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப்புடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஈரான் அதிகாரிகள் இந்த தகவலை முழுமையாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டை வீசிய அமெரிக்கா!! ட்டிம்ப் போடும் திட்டமென்ன? appeared first on Oruvan.com.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈராக்கின் முகமது அலா விமானப்படைத் தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் விமானம் ஒன்று அழிக்கப்பட்டதாகவும், எனினும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் சேதங்களை மதிப்பிட்டு வருவதாகவும், தாக்குதல் நடந்த மூலத்தைக் கண்டறிந்து வருவதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்தது.

முன்னதாக, பாக்தாத்தில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், ஈராக்கிய சிறப்புப் படைகளின் போக்குவரத்து விமானத்தை ஏவுகணைகள் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும், இந்த ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்க முடியாமல் போனதாச சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல் appeared first on Oruvan.com.

ஈரான் போர் – இங்கிலாந்து மக்களிடையே வேரூன்றும் அவநம்பிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பிரித்தானியாவில் பெரும்பாலான குடும்பங்களின் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், ஈரான் போர் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலால், எரிபொருள், எரிவாயு, உரம் உள்ளிட்ட பிற மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இது மற்றொரு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Which என்ற அண்மைய நுகர்வோர் உள்நோக்கு கண்காணிப்பின்படி, விலை அழுத்தங்கள் காரணமாக, சுமார் 14 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பங்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் செலவைச் சமாளிப்பதற்காக, சேமிப்பைப் பயன்படுத்துவது, உடைமைகளை விற்பது அல்லது கடன் வாங்குவது போன்ற குறைந்தபட்சம் ஒரு மாற்றத்தையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மார்ச் 13ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில், இங்கிலாந்து பொருளாதாரத்தின் எதிர்காலம் மீதான நம்பிக்கை 13 வீதம் சரிந்து -56 என்ற மதிப்பெண்ணை எட்டியுள்ளது.

இது 2022ஆம் ஆண்டின் இறுதிக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரான் போர் – இங்கிலாந்து மக்களிடையே வேரூன்றும் அவநம்பிக்கை appeared first on Oruvan.com.