இராமநாதன் அர்ச்சுனா Archives - Oruvan.com

கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி
கைத்துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி, கையில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 25ம் திகதி காணி பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் ஒருவரை கைத்துப்பாக்கியை காட்டி அர்ச்சுனா எம்.பி அச்சுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து கடந்த 27ம் திகதி காலையில் இலவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த காணி உரிமை தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், ஒரு பெண்ணும் அந்த நிலத்திற்கு உரிமை கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுானா கைத்துப்பாக்கியை காட்டி இந்த மிரட்டலை விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற பொது கழிப்பறையை இரவிலும் திறந்து வையுங்கள் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் ஒழுங்கு பிரச்சினையையாக பாராளுமன்ற பொதுக்கழிப்பறை கழிப்பறை பூட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை 4:30 மணிக்கு மூடப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏன் என்று கேள்வி கேட்டால், கழிப்பறையில் உள்ள உபகரணங்களை கழற்றி எடுத்துச் சொல்லப்படுவதால் தான் அதை மூடுவதாக கூறுகின்றாரகள்.

இதனால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றது . எனவே, இரவில் கூட பொது கழிப்பறையை திறந்து வைக்கச் சொல்ல சொல்லுங்கள்,” என்று அர்ச்சுனா எம்.பி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

The post நாடாளுமன்ற பொது கழிப்பறையை இரவிலும் திறந்து வையுங்கள் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை appeared first on Oruvan.com.

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை – மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செனானி தயாரத்ன, இந்த மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதியரசர்கள் அமர்வு கால அவகாசம் வழங்கியுள்ளது.

அத்துடன், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை – மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு appeared first on Oruvan.com.

வடக்கு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துவிட்டனர்
தமிழனான எனது குரல் உள்ளூராட்சித் தேர்தலுக்காக முடக்கப்பட்டது. அதனையும் தாண்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு 80 ஆயிரம் வரையிலான வாக்குகள் விழுந்துள்ளன. இதில் ஒரு சிறிய அளவிலே நான் அவருக்கு வழங்கிய ஆதரவு உள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்காமல் தமிழ் கட்சிக்கு வழங்கினேன் என யாழ். சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற பொது போக்குவரத்து தர நிர்ணயங்களுக்கமைவான பேருந்துகளை மாத்திரம் நாட்டுக்கு கொண்டு வருதல் தொடர்பான சட்டங்களை தயாரித்தல் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த நாட்டை நீங்கள் முன்னேற்றுவதாக இருந்தால் நாங்கள் ஆயிரமல்ல, பத்தாயிரம் வீதம் ஆதரவளிப்பதாகவே வடக்கு மக்கள் உங்களுக்காக மூன்று ஆசனங்களை வழங்கினார்கள். இலங்கை போக்குவரத்து சபை 1950களில் ஆரம்பிக்கப்பட்டதாக இங்கே கூறப்பட்டது.

ஆனால் இ.போ.ச ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே 1938ஆம் ஆண்டில் எனது அம்மாவின் தந்தை ‘நோதோன் ஒப்பிசுவரி கம்பனி’ என்று 160 பஸ்களை வைத்திருந்தார். அங்கிருந்து பஸ்கள் வாங்கப்பட்டே 1950 காலத்தில் இ.போ.ச ஆரம்பிக்கப்பட்டது. அந்த வரலாற்றை கொண்டுள்ள நாங்கள் வடக்கு – கிழக்கில் உள்ள பஸ்களை திருத்தித் தருமாறு கேட்கின்றோம்.

பஸ் நிலையங்களை சுத்தம் செய்வதல்ல அபிவிருத்தி, நீங்கள் 159 உறுப்பினர்களை கொண்டுள்ளீர்கள். நாங்கள் தமிழர்களாக எப்படி வரவேற்றோம். வடக்கு மாகாண வரவு – செலவுத் திட்டம் என்று கூறுமளவுக்கு இருந்தோம். ஆனால் கடந்த 7 மாதங்களில் நீங்கள் வடக்கு, கிழக்கில் செய்த அபிவிருத்திகள் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள்.

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி, பிரதமர் வந்தார்கள். கோயில் திருவிழாக்கள் போன்று பிரசாரங்கள் இருந்தன. அரசியலையும் தாண்டி தமிழ் மக்களுக்குரிய விடிவை செய்வீர்கள் என்று நாங்கள் நம்பினோம். இப்போது வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் உங்களை முற்றாக எதிர்க்கின்றனர்.

அதற்கு முக்கியமான காரணமாக தமிழனாக எனது குரலை நீங்கள் உள்ளூராட்சித் தேர்தலுக்காக முடக்கி வைத்தீர்கள். ஆனால் அதனையும் தாண்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு 80 ஆயிரம் வரையிலான வாக்குகள் விழுந்துள்ளன. இதில் ஒரு சிறிய அளவிலே நான் அவருக்கு வழங்கிய ஆதரவு உள்ளது. ஏன் நான் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்காமல் தமிழ் கட்சிக்கு வழங்கினேன். அதற்கு காரணம் நீங்கள் பொய் கூறுகின்றீர்கள்.

உங்களுடைய அமைச்சருக்கு ‘வெற்றி’ என்று கூட கூறத் தெரியவில்லை. தயவு செய்து சிந்தியுங்கள். வாருங்கள் எங்களின் நிலங்களை பாருங்கள். பாதைகளுக்காக ஐயாயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளீர்கள். அதனை அபிவிருத்தி குழுவில் பெற்றுக்கொள்ள உதவுங்கள். நாங்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளோம். மீண்டும் உங்களுக்கு சந்தர்ப்பம் வேண்டுமென்றால் உண்மையை கதையுங்கள் என்றார்.

The post வடக்கு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துவிட்டனர் appeared first on Oruvan.com.

சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார் அர்ச்சுனா
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , பாராளுமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று (8) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​எழுப்பப்பட்ட கேள்வியால் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அவர் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.

The post சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார் அர்ச்சுனா appeared first on Oruvan.com.

100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு தொடுத்த சத்தியமூர்த்தி!
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று புதன்கிழமை அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.

குறித்த வழக்குத் தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேசசன் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஏற்பாடாகியிருந்தார்.

வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு ஆவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் செல்லப்பட்ட விடயங்கள் மற்றும் 09.12.2024 அன்று இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியநிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஏதிராளியான இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவருடைய மாண்பு மற்றும் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை தொரிவிப்பதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

அவரால் கூறப்படும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதோடு அடிப்படை அறமற்ற நபர் ஒருவருடைய கருத்தாகும் என்று வழக்காளி சத்தியமூர்த்தி தனது சத்தியக்கூற்றிலே தெரிவித்திருந்தமை தொடர்பில் சட்டத்தினையும், நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பனம் வழக்காளி தரப்பில் மன்றில் முன்வைக்கப்பட்டது.

மேலும் வழக்காளியானவர் தனது சத்தியக் கூற்றிலேயே தனது நோக்கம் எதிராளியான இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, குடிமகன் என்ற வகையிலே அல்லது பொது நிறுவன்களை பொறுபுக் கூற வைக்க வேண்டும் என்ற நியாயமாக செயற்படும் இடத்து, அவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் பொய்யான வகையிலும், அவதூறான வகையிலும் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கட்டளையாக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

குறித்த விடயங்களை செவிமடுத்த நீதிபதி வழக்காளியால் கோரப்பட்டவாறு, அவருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க கூடாது என எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது ஒரு முகமாக வழக்காளி தரப்பை மட்டும் கேட்டு வழங்கப்படும் கட்டாணை என்பதால், இது தொடர்பான அறிவித்தல் எதிராளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்டாணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வலிதாக இருக்கும். அன்றைய தினம் அதனை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானத்தினை நீதிபதி எடுப்பார்.

இது தொடர்பில் எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கட்டளையின் பிரதியையும், அறிவித்தலையும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

The post 100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு தொடுத்த சத்தியமூர்த்தி! appeared first on Oruvan.com.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை
நோயாளர் என்ற ரீதியில் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குகள் பிரவேசிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அனுமதியில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குகள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகியோருக்கு எதிரான யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என அர்ச்சுனாவிடம் அறிவித்துள்ளது.

அத்துடன், உரிய அனுமதியின்றி வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க முற்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலை தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை appeared first on Oruvan.com.

எம்.பி அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யாவுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி உள் நுழைந்த வழக்கு இன்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதோ நீதிமன்றம் பிணை வழங்கியது.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தியால் இந்த வழக்கு தாக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post எம்.பி அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யாவுக்கு பிணை appeared first on Oruvan.com.