அர்ச்சுனா Archives - Oruvan.com

சபையில் இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் இடையே வாக்குவாதம் – நாடாளுமன்றில் சலசலப்பு
நாடாளுமன்றத்தின் இன்றைய (20.11.2025) அமர்வில் உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய இளங்குமரன், சிலர் கமராக்கு முன்னாள் வீர வசனம் பேசுவதாகவும் கமராக்கு பின்னால் தமிழர்களை கொன்றவர்களிடம் கைகோர்த்து பழகுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த நபர் பரீட்சையில் எழுத தெரியாமலேயே சித்தியடைந்து விட்டு நாடாளுமன்ற கமராக்கு முன்னாள் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழரின் கலாசாரமான ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கூட நிறுவ முடியாதவரே அவர் எனக் கூறியுள்ளார்.

முகநூலில் ஒழுங்காக தமிழில் கூட எழுத முடியாதவர் தான், நான் சிங்களத்தில் கதைக்கும் போது விட்ட பிழையை பெரிதாகக் கூறினார் என தெரிவித்தார்.

அத்துடன், யாரை திருமணம் செய்துள்ளேன் என கூற முடியாத ஒருவர் எப்படி தமிழ் கலாசாரத்தை மேலோங்க செய்வார் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, இன்று மின்சாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இளங்குமரன் எம்.பி சம்பந்தமில்லாமல் பேசியதை யாரும் நிறுத்தவில்லை எனக் கூறினார்.

அத்துடன், தான் தமிழன், எனக்கு இனவாதம் இல்லை எனவும் தான் சிங்கள மக்களை காதலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, அர்ச்சுனா எம்.பியின் ஒலிவாங்கி நிறுத்தப்பட, நாடாளுமன்றத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

The post சபையில் இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் இடையே வாக்குவாதம் – நாடாளுமன்றில் சலசலப்பு appeared first on Oruvan.com.

சந்திரசேகரிடம் சாவால் விடுத்த அர்ச்சுனா
மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீங்கள் செய்த ஊழல்களை நான் வெளிப்படுத்தினால் அமைச்சுப் பதவியை துறப்பீர்களா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்றொழில் அமைச்சகத்தின் கீழ் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்படுகின்ற போதும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

நீரியல் துறை அமைச்சராக அமைச்சர் சந்திரசேகர் பொறுப்பேற்ற பின் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் குறித்து கரிசனை கொள்ளவில்லை என்பது மக்களது முறைப்பாடாகும்.

இதுவரை குறித்த அமைச்சகத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை என்பதை தெளிவுபடுத்த முடியுமா என அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் கடல் அட்டை பண்ணை விவகாரத்திலும் பல ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.

ஏன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் தங்களது பினாமிகளின் பெயரில் கையூட்டல் இடம்பெறுகின்றதா.

இதற்குரிய ஆதாரங்களை சபையில் சமர்ப்பித்தால் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா? குறிப்பாக அமைச்சர் சந்திரசேகர் அமைச்சுப் பதவியை ஏற்ற பின்னர் வடமாகாண கடற்றொழில் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் குறித்து விபரங்களை வெளிப்படுத்த முடியுமா என கேட்டுள்ளார்.

மேலும் அமைச்சர் சந்திரசேகர் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகுவதற்கு தயாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில் அர்ச்சுனாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

The post சந்திரசேகரிடம் சாவால் விடுத்த அர்ச்சுனா appeared first on Oruvan.com.

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவியுரிமை : அடுத்த எம்.பி கௌசல்யா
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டால் அடுத்ததாக அந்தப் பதவிக்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவாகுவார். என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவியை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மீண்டும் அவ் விசாரணை ஜூலை 2 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அர்ச்சுனா எம்.பி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகுமாயின் அந்த இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவாகுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளை எடுத்தது சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் என்றும், தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்று அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவியுரிமை : அடுத்த எம்.பி கௌசல்யா appeared first on Oruvan.com.

அர்ச்சுனா – சபாநாயகர் இடையே கடும் முறுகல் – வெடித்த சர்ச்சை
நாடாளுமன்ற அடையாள அட்டை தனக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என அர்ச்சுனா இராமநாதன் கடுமையாக சாடினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் நாடாளுமன்ற அடையாள அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும் அர்ச்சுனா எம்.பி அதனை பெற்றுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனக்கு 22ஆம் திகதியே அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும் தான் 20ஆம் திகதி காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.

தான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர், தனக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நடந்த உரையாடலை காவல்துறையினர் பதிவு செய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டதாகவும், காவல்துறையினரின் இந்த செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் இவ்வாறு காவல்துறையினர் பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டதாகவும் கூறினார். இந்த நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இது தொடர்பில் வெட்கப்பட வேண்டும் என்றும் சபையில் மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும். இதில் பாகுபாடு இல்லை என அறிவித்ததுடன், அர்ச்சுனா எம்.பி சபையில் கூறிய சில வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தார்.

The post அர்ச்சுனா – சபாநாயகர் இடையே கடும் முறுகல் – வெடித்த சர்ச்சை appeared first on Oruvan.com.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை
நோயாளர் என்ற ரீதியில் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குகள் பிரவேசிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அனுமதியில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குகள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகியோருக்கு எதிரான யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என அர்ச்சுனாவிடம் அறிவித்துள்ளது.

அத்துடன், உரிய அனுமதியின்றி வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க முற்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலை தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை appeared first on Oruvan.com.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – அதிகாரிகளுடன் அர்ச்சுனா எம்.பி. தர்க்கம்
அரச அதிகாரிகளின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதிவு செய்தனர்.

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோது, அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன்மொழியப்பட்டு, அவை தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அதன்போது இடையில் குறுக்கிட்டு கேள்விகளைக் கேட்ட அர்ச்சுனா எம்.பி., அவர்களின் கல்வித் தகைமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதனால் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளைச் செவிமடுக்காது தமது விளக்கங்களைக் கூறிச் சென்றனர்.

அதேவேள,  யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போது,

“அரச அதிகாரிகளைக் கேலி செய்வது போன்றும், அவர்களின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும். அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும்போது, அவர்களை நாங்கள் வரவேற்கத் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், நடைமுறைகளைக் குழப்பி, அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கமாட்டோம்.” – என்றார்.

The post யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – அதிகாரிகளுடன் அர்ச்சுனா எம்.பி. தர்க்கம் appeared first on Oruvan.com.