அர்ச்சுனா எம்.பி Archives - Oruvan.com

கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி
கைத்துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி, கையில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 25ம் திகதி காணி பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் ஒருவரை கைத்துப்பாக்கியை காட்டி அர்ச்சுனா எம்.பி அச்சுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து கடந்த 27ம் திகதி காலையில் இலவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த காணி உரிமை தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், ஒரு பெண்ணும் அந்த நிலத்திற்கு உரிமை கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுானா கைத்துப்பாக்கியை காட்டி இந்த மிரட்டலை விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்
காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (30) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் கலந்துகொண்டிருந்தார்.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தவேளை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்களுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இடையிடையே கைதட்டி ஆரவாரம் செய்த சம்பவம் இடம்பெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் சில உத்தியோகத்தர்கள் முண்டியடித்தவாறு அர்ச்சுனாவுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

The post அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள் appeared first on Oruvan.com.

பழுதடைந்த “ஐ பேட்டிற்கு” ரூ.50,000 இழப்பீடு பெற்ற அர்ச்சுனா எம்.பி
பழைய ‘அப்பிள் ஐபேட் டேப்லெட்’ கம்ப்யூட்டரை காண்பித்து, அதில் வெள்ள நீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இதேபோன்று நீங்களும் பொய்யாவது கூறி நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளுங்கள் என காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) குழுத் தலைவர் ஸ்ரீ பவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான இழப்பீடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்ததிற்காக 50,000 ரூபா இழப்பீட்டிற்கு பதிவு செய்கின்றீர்களா? என்று பிரதேச செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த குழுத் தலைவர் அந்த விண்ணப்பப் படிவம் இருப்பதாகவும், அதனை எவருக்கும் வழங்கவில்லை என்றும் கூறினார்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவிக்கையில்,

அந்த படிவங்களை வழங்கி மக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குங்கள். தெற்கில் பலர் இந்த கொடுப்பனவுக்கான பதிவுகளை மேற்கொண்டு பணத்தினை பெறுகின்றனர். நானும் பழைய ஐபேட் டேப்லெட் ஒன்றைக் காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாகத் தெரிவித்து 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டேன். நீங்களும் அவ்வாறு பொய்யாவது கூறி அந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 300 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் என்னிடம் கூறினார்கள். காணொளி, படங்கள் எதுவும் தேவையில்லை. உடனடியாக அந்த கொடுப்பனவுகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுங்கள் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த சமூக மட்ட அமைப்பு ஒன்றின் பிரதிநிதி, குறித்த பதிவுகள் தொடர்பாக மக்களுக்கு சரியான விளக்கத்தை பிரதேச செயலகம் வழங்கவில்லை, கிராம சேவகர்கள் வீடுகளை வந்து பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

The post பழுதடைந்த “ஐ பேட்டிற்கு” ரூ.50,000 இழப்பீடு பெற்ற அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

கோட்டை பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி கைது
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

The post கோட்டை பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி கைது appeared first on Oruvan.com.

தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிசார் அராஜகமாக நடந்து கொள்வதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணி அந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணம்,வுனியா,கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர் இலங்கையில் உறுதியோடு இருக்கிறார்கள். தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகிறது.

அதில் எல்லோராலும் எல்லா நேரத்திலும் பங்கு பெற்ற முடியாது குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் பங்கு பற்றி வருகிறார்கள்.

தையிட்டி காணி மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பதில் காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு உறுதியாக இருக்கிறது தையிட்டி காணிக்குரிய மக்களை நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்புக்கு அழைத்துச் சென்று காணிக்கான பௌத்த சாசன அமைச்சரை சந்தித்து பேசி மக்கள் தங்களுடைய விடயங்களை எடுத்துக் கூறி மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் அதற்குப் பிற்பாடு இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை. அதிலிருந்து ராணுவங்கள் அகற்றப்பட்டு பொலிசார் தற்போது இருக்கிறார்கள்.

தங்களுடைய காணியை மீட்பதற்காக போராட்டம் நடத்தும் மக்களை பொலிசார் விரட்டுகிறார்கள் அதற்குப் பிற்பாடு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தையிட்டி அமைந்திருக்கின்ற காணிக்கு சொந்தமான குறிப்பிட்ட நான்கு பேரை விகாரைக்குள் அழைத்துச் சென்று அந்த விகாராதிபதியை சந்தித்தபின் காணி பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார்.

நான் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கும், கௌசல்யாவிற்கும் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறேன் காணிக்கான நான்கு நபர்களை நீங்கள் அழைத்துச் சென்றதை நான் வரவேற்கிறேன்.

ஆனால் காணிக்கான உரிமையாளர்கள் இன்னும் 14 பேர் வெளியில் இருக்கிறார்கள் வெளியில் இருக்கும் அந்த 14 பேருக்கும் காணிக்கான உறுதி இருக்கின்றது.

ஏன் அவர்களை நீங்கள் விட்டுவிட்டு நான்கு பேரை மட்டும் அழைத்துச் சென்று விகாராதிபதியை சந்தித்தீர்கள்?காரணம் என்ன? தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அர்ச்சுனா இராமநாதன் தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார்.

அரசாங்கத்தினதும் பொலிசாரினதும் அராஜகத்திற்கு எதிராக காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு வெகு விரைவில் மிகப்பெரிய போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைக்குள் தள்ளப்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

The post தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை ; அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு
மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கதைப்பதும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

ஹட்டனில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது,

மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கதைப்பதும் இல்லை. திகாம்பரம் போன்றோம் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்.

2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நான் இங்கு பணியாற்றிய போது, ஹட்டன் ஓரளவு சுத்தமாக இருந்தது. தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளது. இதுகுறித்து அங்குள்ள அரசியல்வாதிகள் பேசுவதில்லை.

எதிர்காலத்தில் நான் மலையக மக்களுக்காக பல சேவைகளை செய்ய எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் கூறினார்.

The post மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை ; அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

“323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும்‘‘ – அர்ச்சுனா எம்.பி.
சர்ச்சைக்குள்ளான 323 கண்டெய்னர்களின் விடுவிப்பு தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்துக்களால் தனது பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு பாதுபாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கூறினார்.

தொடர்ந்தும் அவர் இன்றைய அமர்வில் உரையாற்றிய அவர்,

“விவாதத்திற்குரிய 323 கண்டெய்னர்களில் என்ன உள்ளன, அவை எங்கிருந்து வந்தவை, எந்த இடத்தில் அவை இறக்குமதி செய்யப்பட்டன என்பதனை பற்றிய முழு விபரப்பட்டியலையும் வழங்க முடியும். ஆனால், அந்த விபரங்களை வெளியிட்ட பிறகு, என்னை பொய்யான வழக்குகளுக்குள் இழுத்துச் செல்லாமல், எனது எம்.பி. பதவியை பறிக்காமல், நிச்சயமாக பாதுகாக்கப்படும் என்ற உத்தியோகபூர்வ உறுதியும் எனக்கு வேண்டும்.”

“எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படலாம். ஆனால் இப்போது எனக்கு பயமாக உள்ளது. நான் கொண்டுள்ள தகவல்களை வெளியிட்டால் என்னை ‘போதைப் பொருள்’ வைத்துள்ளார் என பொய்யாக குற்றம்சாட்டி, சட்டவழியில் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, ஏதாவது போலி வழக்கொன்று போட்டு சிறையில் அடைக்கப்படுவேனா என்ற அச்சம் இருக்கிறது.”

“அந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார். இல்லாவிட்டால் நான் வேறு நாட்டிற்குப் புலம்பெயர்ந்து அந்த உண்மைகளை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நான் உயிருக்கு பயந்தவனில்லை. ஆனால் இப்போது என்னை அடக்க மும்முரமாக திட்டமிடப்படுகின்றது. இவை எல்லாம் ஒரு உண்மையை வெளிக்கொணர தடுக்கும் முயற்சியே.”

The post “323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும்‘‘ – அர்ச்சுனா எம்.பி. appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “டிக்டொக் இதுவரை ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகளே அதிகம். பலரின் உண்மையான முகங்கள் இந்த செயலி மூலம் வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் ஏதோ ஒரு நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இது, பின்னர் பிரபலமடைந்தவுடன் அதன் உள்நோக்கங்கள் மாறி, பலர் தங்கள் சுயரூபத்தை தமிழ் சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “புலம்பெயர் தமிழ் மக்களுடன் தொடர்புகளைப் பேணுவது காலத்தின் தேவை மட்டுமல்ல, அது எங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று நம்புகிறேன். டிக்டொக் தளங்கள் எந்தக் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அந்த நோக்கங்களுக்காகவே செயல்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தனது சொந்த தளத்தில் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் நேரடியாக உரையாடுவதற்கு ஒரு திட்டத்தை அறிவித்த அவர், “இன்று முதல் ஒவ்வொரு திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், தேவைப்படும் அவசர நாட்களிலும், புலம்பெயர் தமிழ் சமூகம் என்னுடன் நேரடியாக இணைந்து, உங்கள் சந்தேகங்களையும், மதிப்புமிக்க ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்படும். முன்கூட்டியே தொடர்பு கொண்டு, உங்களை அடையாளப்படுத்தி இணைந்து கொள்ளலாம்,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் எச்சரிக்கையாக, “எந்தக் காரணத்திற்காகவும் முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அது என்னுடன் உரையாடும் கடைசி நாளாக இருக்கும்,” என்று கூறினார்.

இந்த அறிவிப்பு, தமிழ் சமூகத்திற்கும் புலம்பெயர் மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

The post அர்ச்சுனா எம்.பி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பிக்கான நேர ஒதுக்கீடு – சபையில் இன்றும் வாக்குவாதம்
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்காடுகள் எழுந்தன.

64 நாட்களாக நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தும் தமக்கான நேரத்தை ஒதுக்கீடு செய்துதர ஆளுங்கட்சி நடவடிக்கையெடுக்கவில்லை என அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், தம்மீது கடந்த இரண்டு மாதத்தில் 24 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.

அரசாங்கத்துக்கு எதிர்காலத்தில் எவ்வித ஆதரவையும் வழங்கப்போவதில்லை என கூறிய அர்ச்சுனா எம்.பி, ஜே.வி.பி ஒர மனித படுகொலையை செய்த கட்சி என்றும் குற்றம் சுமத்தினார்.

எதிர்காலத்தில் நாம் எதிர்க்கட்சியில் இருந்தே தமது கருத்துகளை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.

ஆளுங்கட்சி சார்பில் இதற்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அர்ச்சுனா எம்.பிக்கான பேச்சு உரிமை மறுக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஆளுங்கட்சியின் பணி அல்ல. எதிர்க்கட்சியின் பணியாகும். அவருக்கான நேரத்தை ஒதுக்கீடு செய்துகொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அத்துடன், அவர் மீது அரசாங்கம் எவ்வித வழக்குகளையும் பதிவுசெய்யவில்லை. அது அவரது தனிப்பட்ட விவகாரம் அதனை அவர் நீதிமன்றில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதன்போது குறிப்பிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் தொடர்பில் சபாநாயகரிடம் அறிக்கை கோரியுள்ளோம். அதுதொடர்பில் இன்னமும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. தற்போது அர்ச்சுனா எம்.பி எதிர்க்கட்சியில் பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். அவருடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்றார்.

The post அர்ச்சுனா எம்.பிக்கான நேர ஒதுக்கீடு – சபையில் இன்றும் வாக்குவாதம் appeared first on Oruvan.com.

அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்
அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால், பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுடன் எம்.பி.க்கு வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு காவலர்கள் எம்.பி.யிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டுள்ளனர்.

அந்த ஆவணங்களை வழங்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அடாவடியாக நடந்து கொண்டார்.

இன்று (21) காலை நாடாளுமன்றத்துக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட குழு இன்று (21) முற்பகல் 11.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட குழு, ஆதாரங்களை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்துவதோடு, விரிவான அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும்.

The post அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம் appeared first on Oruvan.com.