அமைச்சர் பிமல் ரத்நாயக்க Archives - Oruvan.com

சாரதிகளில் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமை – அமைச்சர் பிமல் குற்றச்சாட்டு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 2,000 பேர் பாதசாரிகளாகும். அத்துடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என பலர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 53 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்துக்களில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு சாரதிகளே காரணமாகும்.

அவர்களில் பெரும்பாலானோர் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்தும் தமது சாரதிகள் குறித்து பஸ் சங்கங்கள் அதிகளவில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே தற்போதைய நிலைமை.  சாரதிகள் அடாவடித்தனமாகச் செயற்பட இடமளிக்கப் போவதில்லை. தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.

இனிவரும் காலங்களில் கனரக சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தாலும், பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டாது. அதற்கு முறையான பயிற்சியின் பின்னர் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அத்தகையவர்களுக்கு மாத்திரமே மீண்டும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

The post சாரதிகளில் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமை – அமைச்சர் பிமல் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்
நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் இடம்பெற்றிருந்தது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டத்தில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி சுமார் 20 வழித்தடங்களில் வழங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாகும்புரவிலிருந்து காலி, மாத்தறை, பதுளை நோக்கிச் செல்லும் பேருந்துக, கொழும்பு முதல் அம்பாறை வரை இயக்கப்படும் பேருந்துகள், கடவத்தை முதல் பொரளை வரை இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் மொனராகலை முதல் பிபில வரை இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை முதல் பண்டாரவளை மற்றும் பதுளை முதல் மஹியங்கனை வரை இயக்கப்படும் பேருந்துகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில், தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுமுது ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

ஏழு தனியார் மற்றும் அரசு வங்கிகள் ஏற்கனவே வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதியை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இது பயணிகளின் மீதமுள்ள பணத்தை வழங்குவதில் உள்ள சிக்கலுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்பதுடன், பேருந்து உரிமையாளர்கள் பெறும் வருமானத்தை துல்லியமாக கணக்கிட உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம் appeared first on Oruvan.com.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் நெறிப்படுத்தவும் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு

அனுர கருணாதிலக்க – துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து

சுசில் ரணசிங்க – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பொறுப்பாகவும் பிரதி அமைச்சர்களாக,

ஆச்சார்ய அனில் ஜயசிங்க – திட்டமிடல் பிரதி அமைச்சர்

டி.பி சமன் – வீடமைப்பு, நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

எம்.எம்.மொஹமட் மூனீர் – மதவிவகார கலாசார பிரதி அமைச்சர்

வைத்தியர் மூதித ஹங்சகவிஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்

அரசிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர்.

எச்.எம்.தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்.

யு.டி.திசாந்த ஜயவீர – பொருளாதார பிரதி அமைச்சர்

ஆச்சார்ய கௌசல்ய ஆரியரத்ன – ஊடக பிரதி அமைச்சர்

எம்.ஐ.எம். அர்கம் – மின்சக்தி பிரதி அமைச்சர்

The post தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம்
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை

இந்த ஆண்டுக்குள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் எஞ்சியுள்ள 50% செயல்பாடுகளையும் விரைவாக முடிக்க வேண்டியதன் அவசியத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் கட்டுமானத்தில் உள்ள துறைமுக கிழக்கு முனையத்துக்கு அவசர ஆய்வு பயணமொன்றை மேற்கொண்டு திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர்.

2014 முதல் 2022 வரை எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்த கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகள் 2022 முதல் மந்த நிலையில் இருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அதை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கிழக்கு முனையம் (ECT) துறைமுக ஊழியர்களால் வென்றெடுக்கப்பட்ட ஒரு சொத்து என்றும், அது எந்த வகையிலும் வேறு எந்த தரப்பினருக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் மிகவும் திறமையான மற்றும் நவீன முகாமைத்துவ கட்டமைப்புடன் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

The post கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம் appeared first on Oruvan.com.