அதிமுக Archives - Oruvan.com

தமிழக தேர்தல் களம் அமைதியுற்றது – அதிகாரத்தை கைப்பற்றப் போவது யார்?
தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரலாற்று பின்னணி,  புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக கூட்டணியும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தல், வெறும் ஆட்சிப் போட்டி மட்டுமல்ல தலைமுறைகள் மாறிய அரசியலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் தனித்துப் போட்டியிடுவது, இந்தத் தேர்தலை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ளது . இதனால், பாரம்பரிய வாக்கு வங்கிகள் சிதையுமா? புதிய அரசியல் சக்திகள் எழுச்சி காணுமா என்ற கேள்விகள் வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ளன.

கருணாநிதி–ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ள நிலையில், இந்த முறை மக்களின் தீர்ப்பு எந்த திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசியலில் முக்கியமான நாட்களாக 2026 ஏப்ரல் 23 மற்றும் மே 04 ஆகிய திகதிகள் கருதப்படுகின்றன.ஏனெனில் ஆட்சியை தக்க வைக்க முயலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, இழந்த ஆட்சியை கைப்பற்ற விரும்பும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி என இரு பழம்பெரும் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் மோதுகின்றன.

இந்த சூழலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  அதேபோன்று விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

நான்கு முனை போட்டி இந்த தேர்தலை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றி இருக்கிறது. இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை உண்டாக்குமா என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இரு பெரும் அரசியல் ஆளுமைகளாக திகழ்ந்தனர். அவர்களின் மறைவை அடுத்து தமிழ்நாடு சந்திக்கக்கூடிய இரண்டாவது சட்டப்பேரவை தேர்தல் இது.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடத்தப்பட்ட நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 234 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றது.

அந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது. 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைப்பது அதுவே முதன்முறை. 2016 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா அதே ஆண்டில் டிசம்பர் 5 ஆம் திகதி மரணமடைந்தார். அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என அடுத்தடுத்து முதல்வர் பதவி மாறியது. அதன் பின்னர் அதிமுக கட்சிக்குள்ளேயும் பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டன.

இந்த சூழலில் ஜெயலலிதாவும் , கருணாநிதியும் மறைந்த பின்னர் முதன் முறையாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுகவின் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. அதுவும் அதிமுகவுக்கு வெறும் 66 இடங்கள்தான் கிடைத்தன. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை திமுகவுக்கு வட மாவட்டங்களும் காவிரி டெல்டா மாவட்டங்களும் பெருமளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்தன.

குறிப்பாக சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் 64 தொகுதி திமுகவுக்கு கிடைத்தது. திமுக அருதி பெரும்பான்மை பெறுவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது.

அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். அவரது தமிழக வெற்றி கழகம் இந்த முறை 233 தொகுதிகளிலும் களம் காண்கிறது. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், மே மாதம் நான்காம் திகதி முடிவுகள் வெளியாகும். இந்த தேர்தலில் மொத்தம் 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்று மாலை 06 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் களம் அமைதியுற்றுள்ளது.

ஆகவே பழைய ஆதிக்க அரசியலும், புதிய மாற்றத்திற்கான குரலும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தல், தமிழ்நாட்டின் அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்யக்கூடிய தருணமாக பார்க்கப்படுகிறது.

கூட்டணிகளின் கணக்குப் போர்கள், தனித்து நிற்கும் கட்சிகளின் சவால்கள், புதிய தலைமுறையின் அரசியல் ஆசைகள் இவை அனைத்தும் சேர்ந்து இந்தத் தேர்தலை சாதாரணமாக அல்ல, தீர்மானம் மிக்க தேர்தலாக மாற்றியுள்ளன.

மே 4 ஆம் திகதி வெளியாகும் முடிவுகள், வெறும் வெற்றியாளரை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலப் பாதையையும் தீர்மானிக்கப்போகின்றன. மாற்றமா ஏற்படுமா அல்லது தற்போதைய ஆட்சி தொடருமா என்ற இறுதி கேள்விக்கான பதில் மக்கள் கையில்.

பாலகணேஷ் டிலுக்ஷா

The post தமிழக தேர்தல் களம் அமைதியுற்றது – அதிகாரத்தை கைப்பற்றப் போவது யார்? appeared first on Oruvan.com.

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – அதிமுக 170, கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகள்
தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த தமிழகத் தேர்தலுக்கு பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வந்துள்ளார்.

சென்னை வந்துள்ள அவர், தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினருடன் அவர் பேச்சு நடத்தினார்.

170 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது மற்றும் பாஜக உட்பட கூட்டணிக்கு 64 தொகுதிகளை ஒதுக்கும் வகையில் பேச்சுகள் இடம்பெற்றதாக அதிமுகவினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு மற்றும் அமமுகவை இணைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அதிமுகவின் கருத்து வெளியிட்டுள்ளனர்.

The post சூடுபிடிக்கும் தேர்தல் களம் – அதிமுக 170, கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகள் appeared first on Oruvan.com.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது!
சட்ட சபை தேர்தல் நெருக்கி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டபேரவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் கருதப்படுகின்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள், பிரசாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அத்துடன், அதிமுக கட்சி சார்ந்த அரசியல் நிகழ்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றைய கூட்டம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

The post அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது! appeared first on Oruvan.com.

விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்
அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அண்மையில் கட்சியின் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்த அவர் இன்று காலை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நான்கு மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே செங்கோட்டையனை தொடர்ந்து புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் appeared first on Oruvan.com.

நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்?
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி.

தமி​ழ​கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்ட​ணியின் வெற்றி தோல்வி​களுக்கு காரணமாகி இருக்​கின்றன.

2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்கு​களுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்கு​களுடன் 98 தொகுதி​களில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தி​யாசம் 1 சதவீதம்​தான். அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவீதம். தனித்து போட்டி​யிட்ட பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம், நாதக 1.07 சதவீதம் என வாக்குகளை பெற்றன. இதுதான் கூட்டணி கணக்கு. இதில் ஒரு சில கட்சிகள் திமுக பக்கம் போயிருந்தால் ஆட்சியே மாறியிருக்​கலாம்.

2021 தேர்​தலில் திமுக கூட்​டணி 45.38 சதவீத வாக்​கு​களு​டன் 159 தொகு​தி​களில் வென்று ஆட்​சியை பிடித்​தது. அதி​முக கூட்​டணி 39.71 சதவீத வாக்​கு​களு​டன் 75 தொகு​தி​களில் வென்று ஆட்​சியை இழந்​தது. இரு கூட்​ட​ணி​களுக்கு இடையி​லான வித்​தி​யாசம் 6 சதவீதம் தான். அந்​தத் தேர்​தலில் 3-வது இடம்​பிடித்த நாதக பெற்ற வாக்​கு​கள் 6.58 சதவீதம். அதே​போல், அமமுக – தேமு​திக 2.85 சதவீத​மும் மநீம 2.73 சதவீத​மும் வாக்​கு​களை பெற்​றன.

வரும் 2026 தேர்​தலில் திமுக அணி அப்​படியே தொடர்​கிறது. அதி​முக -பாஜக கூட்​ட​ணி​யில் இன்​னும் சில கட்​சிகள் இணை​ய​லாம். வழக்​கம் போல நாதக தனித்து போட்​டி​யிடு​கிறது. தவெக-வுக்​கும் தனித்து போட்​டி​யிடு​வதை தவிர வேறு வழி​யில்​லை. ஒரு​வேளை, நாதக – தவெக கூட்​டணி அமைய​லாம். தற்​போதைய சூழலில் 4 முனைப் போட்டி நிச்​சய​மாகி உள்​ளது.

இதில் 2024 தேர்​தலின்​படி நிரூபிக்​கப்​பட்ட வாக்கு சதவீதப் ​படி திமுக அணிக்கு 46.97 சதவீத வாக்​கு​கள் உள்​ளன. அதி​முக அணி​யின் 23.05 சதவீதம், பாஜக அணி​யின் 18.28 சதவீத வாக்​கு​களைக் கூட்​டி​னால் 41.33 சதவீதம் வரும். 2024-ல் நாதக தனித்து 8.20 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. இதில் திமுக ஆட்​சிக்கு எதி​ரான மனநிலை கொண்ட வாக்​கு​களை அறு​வடை செய்து எளி​தாக வெற்​றி​பெறலாம் என்​பது அதி​முக – பாஜக​வின் கணக்​கு. ஆனால், புதி​தாக களத்​துக்கு வரும் தவெக யாருடைய வாக்​கு​களைப் பிரிக்​கப்​போகிறது எனத் தெரிய​வில்​லை.

விஜய் கடுமை​யாக திமுக-வை எதிர்க்​கி​றார். எனவே, திமுக-வுக்கு எதி​ரான வாக்​கு​கள் தவெக-வுக்​குப் போகலாம் இது அதி​முக-வுக்கு மைனஸ். அதேசம​யம், விஜய், பாஜக-வை​யும் கடுமை​யாக எதிர்க்​கி​றார். இதனால் பாஜக-வுக்கு எதி​ரான வாக்​கு​கள் விஜய்க்கு வரலாம். இது திமுக-வுக்கு மைனஸ். மேலும், திமுக, பாஜக-வை பிடிக்​காத சிறு​பான்​மை​யினர், அரசு ஊழியர்​கள், பொது​மக்​கள் வாக்​கு​கள் தவெக – நாதக​வுக்கு போகும்.

இது திமுக, அதி​முக அணி​களுக்கு மைனஸ். ஒரு​வேளை, நாதக – தவெக கூட்​டணி அமைந்தால் அது திமுக, அதி​முக அணி​களுக்கு மேலும் சவாலாகும். 2006-ல் விஜய​காந்த் 3-வது அணி​யாக களத்​தில் நின்​றார். அது அப்​போதைய ஆளும் கட்​சி​யான அதி​முக-​வின் ஆட்சி பறி​போக காரண​மானது. 2011-ல் அதே தேமு​தி​க-வை கூட்​ட​ணிக்​குள் இழுத்து திமுக-வை ஆட்​சியி​லிருந்து அகற்​றி​னார் ஜெயலலி​தா. அதேசம​யம், 2016-ல் அமைக்​கப்​பட்ட மக்​கள் நலக்​கூட்​டணி எதிர்க்​கட்​சி​யான திமுக-வுக்​குப் போகவேண்​டிய வாக்​கு​களை அறு​வடை செய்​து, மீண்​டும் அதி​முக ஆட்​சி​யமைய காரண​மானது. 2021-ல் நாதக பிரித்த வாக்​கு​கள் அதி​முக ஆட்​சியை இழக்க வழியமைத்​தது.

எப்​படிப் பார்த்​தா​லும் தற்​போதைய 4 முனைப் போட்​டி, திமுக-வுக்​கும், அதி​முக-வுக்​கும் கத்​தி​மேல் நடக்​கும் பாதை​தான். தேர்​தலுக்கு இன்​னும் ஒரு வருடம் இருப்​ப​தால் அதற்​குள்​ளாக காட்​சிகள் மாறுகிறதா எனப் பார்​ப்​போம்​.

The post நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்? appeared first on Oruvan.com.

நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு
சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளயதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் நகர்வுகள் பாஜகவை நோக்கி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், சீமான் நேற்று இரவு நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.

நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின்போது சீமான் அரசியல் தொடர்பாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பு 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான சந்திப்பா? அல்லது பாஜகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இணையுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததில்லை. கட்சி தொடங்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு appeared first on Oruvan.com.