தமிழகத்தில் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைப்பு: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...
தமிழகத்தில் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நாளை(ஏப். 4), மற்றும் நாளை மறுநாள் (ஏப். 5) பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ள இருந்தார். என்றாலும், அவரது பிரசாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வயநாடு எனது வீடு, மக்களே எனது குடும்பம் : வேட்புமனு தாக்கல் செய்த ராகுல்
வயநாடு மக்களுடன் தான் எப்போதும் இருப்பதாகக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். "வயநாடு தனது வீடு" என்றும், "மக்களே தனது குடும்பம்" அதன் அழகிய வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் தனது "வழிபாட்டு ஒளி" எனவும் அவர் கூறினார். மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பன்டாவுக்கு கண்ணீருடன் பிரியாவிடை
தென்கொரியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு பிறந்த மிகப்பெரிய பண்டா சீனாவுக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. இதன்போது, குறித்த பன்டாழைவ பராமரித்தவர்கள், இரசிகர்கள் என பலரும் கண்ணீருடன் அதை வழியனுப்பிவைத்துள்ளதாக த ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் மிக வயதான நபர் காலமானார்
உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜூவான் வின்சென்ட் பெரெஸ் தனது 114 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 2022 ஆம் ஆண்டு இவர் தனது 112 ஆவது வயதில் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து 29 பேர் உயிரிழப்பு
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.மேலும், குறித்த விபத்தில் விடுதியில் பணியாற்றிய ஊழியர்களே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.