அமெரிக்க , சீன ஜனாதிபதிகள் உரையாடல்: இரு நாட்டு உறவை வலுப்படுத்த உத்தேசம்

OruvanOruvan

US and Chinese Presidents

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசி உரையாடல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான சூழலை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அழைப்பின் போது , காலநிலை மாற்றம் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகள் உட்பட ஒத்துழைப்பின் வழிகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தைவான் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தைவானுக்கு ஆதரவை வழங்கினாலும், ஆனால் தென் சீனக் கடலில் அமெரிக்காவின் தலையீடு தேவையற்றது என்று சீன ஜனாதிபதி அமெரிக்காவிற்கு அறிவித்துள்ளார்.

குறித்த அழைப்பின் போது, சீனா மற்றும் சீனாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்தும் சீன அதிபர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலை சீனாவின் பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒடுக்கும் முடிவில்லாத பிரச்சாரமாக இது அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் உயர்தொழில்நுட்ப வளர்ச்சியை அடக்கி, சீனாவின் வளர்ச்சிக்கான சட்டப்பூர்வ உரிமையை பறிக்க அமெரிக்கா வலியுறுத்தினால், அதற்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கும் என்று சீன ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு கொண்ட பகுதிகள் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் உறவை பொறுப்புடன் நிர்வகிக்க எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.