தாய்வான் நிலநடுக்கம் - இடிபாடுகளுக்குள் சிக்குண்ட பேருந்துகள்: பயணிகளுடனான தொடர்பு துண்டிப்பு

OruvanOruvan

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட பேருந்துகள் - பயணிகளுடனான தொடர்பு துண்டிப்பு

தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆகவும் காணாமற்போனோரின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தேசிய பூங்காவிற்குள் 50 பயணிகளுடன் பயணித்த 04 மினி பேருந்துகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் பயணிகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

OruvanOruvan

பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு - 700 பேர் படுகாயம்

தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என த ரொய்ரர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், 700ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

Update - தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நால்வர் உயிரிழப்பு

UPDATE - தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக த ரொய்ரட்ர்ஸ் யெ்தி வெளியிட்டுள்ளது. மேலும், 50ற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அடிபாடுகளுக்குள் சிக்கி வெளியில் வரமுடியாமல் தவிப்பவர்களை மீட்பு பணியினர் தொடர்ந்து வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபபட்டுள்ளனர்.

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தாய்வான் நாட்டில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாய்வான் தலைநகர் தைபேயில் ஹுவாலியன் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பாரிய நிலநடுக்கம் காரணமாக பல கட்டங்கள் இடிந்து கடுமையான சேதமேற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேதத்திற்குள்ளான கட்டிடடங்களில் வசித்த பொதுமக்களை தற்போது மீட்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன், பலர் கட்டிடங்களின் ஜன்னல்களில் இருந்து பாய்ந்து தப்பிசெல்லும் காட்சிகளையும் தற்போது த ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

மேலும், தாய்வான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட் ஒரு பாரிய நிலநடுக்கம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.