கனடாவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்: உலகம் முழுவதும் இருந்து படையெக்கும் இளைஞர்கள்
புலம்பெயர்வோருக்கு அதிக நன்மைகளை வழங்கும் நாடாக கனடா உள்ளது. கனடாவுக்குள் சென்றுவிட்டால் மீண்டும் நாடு திரும்ப வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டில் அதிகளவான இளைஞர், யுவதிகள் அங்கு செல்கின்றனர்.
குடிவரவு-குடியல்வு தளர்வாக உள்ள நாடாக கனடா உள்ளது. கனடா - ரொறன்ரோ பகுதியானது பொருளாதார செயற்பாடுகள், கலாச்சார பல்வகைமை, புத்தாக்கம் போன்ற காரணங்களினால் அதிகளவில் கேள்வியுடைய தொழில்கள் பற்றிய விபரங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ரொறன்ரோவில் சராசரி சம்பளங்களும் தொழில் வாய்ப்புக்களும் அதிகரிக்கப்பட உள்ளதாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த ஆண்டில் ரொறன்ரோ பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும் பத்து தொழிற்துறைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடாவின் தொழில் சந்தை குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்தது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகளை உருவாகியுள்ளன.
போக்குவரத்து, உணவு சேவைகள், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கல்விச் சேவைகள் போன்ற துறைகள், வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கைக்குரிய வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
சராசரியாக 65,000 டொலர்கள் முதல் 130,000 டொலர்கள் வரையில் வருடாந்த சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனால் கனடாவின் பல்வேறு பகுதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் பலர் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.