இஸ்தான்புல் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து: 29 பேர் பலி, 13 பேர் படுகாயம்

OruvanOruvan

மத்திய இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நகர ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்தான்புல்லின் பெசிக்டாஸில் உள்ள 16 மாடி கட்டிடத்தில் மதியம் 12:47 மணியளவில் (உள்ளூர் நேரம்) சீரமைப்பு பணியின் போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ அணைக்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.