கச்சத்தீவு பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை : எடப்பாடி விமர்சனம்: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World News Updates 02.04.2024

கச்சத்தீவு பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை : எடப்பாடி விமர்சனம்

கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ தகுதியில்லை என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த கட்சி அதிமுகதான். தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்..

OruvanOruvan

நடிகை பார்பரா ரஷ் காலமானார்

கோல்டன் குளோப் விருது பெற்ற 'இட் கேம் ஃப்ரம் அவுட்டர் ஸ்பேஸ்' படத்தில் நடித்ததற்காக அறியப்பட்ட பழம்பெரும் நடிகை பார்பரா ரஷ் தனது 97வது வயதில் காலமானார். கோல்டன் குளோப் வென்ற நடிகர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஈஸ்டர் அன்று இறந்ததை அவரது மகள் கிளாடியா கோவன் உறுதிப்படுத்தினார்.

OruvanOruvan

உலக சந்தையில் பிளாட்டினத்தின் விலை குறைவு

உலக சந்தையில் பிளாட்டினத்தின் விலை குறைவடைந்துள்ளது. இதன்படி, அவுன்ஸொன்றின் பிளாட்டினம் நேற்றைய தினம் 916 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 903 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.

8 விஞ்ஞானிகளின் பணிக்காலம் நீடிப்பு - ஒன்றிய அரசு உத்தரவு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி உட்பட 8 விஞ்ஞானிகளின் பணிக்காலம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதத்துடன் 8 விஞ்ஞானிகளின் பணிக்காலம் நிறைவு பெறுவதால் மேலும் ஓராண்டு பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பைடனின் தீர்மானத்தை எதிர்க்கும் கட்சியினர்

அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும், ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், இஸ்ரேலுக்கு போர்க் கருவிகளை வழங்கக் கூடாது என எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் மஞ்சள் நிறமாக மாறிய வானம்

சுவிட்சர்லாந்தில் வானம் மஞ்சள் நிறமாக மாறியமை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசியே என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகை சரண்யா மீது முறைப்பாடு

கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தமிழ்சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி தனது வீட்டின் கேட்டை திறந்தபோது அது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இருத்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமாக காவல் நிலையம்வரை சென்றுவிட்டது.