இம்ரான் கானின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World News Updates 01.04.2024

இம்ரான் கானின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் மேல்முறையீட்டின் பிரகாரம் இந்த உத்தரவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் பிரபித்துள்ளது.

OruvanOruvan

துருக்கி உள்ளாட்சி தேர்தல் - எதிர்க்கட்சி முன்னிலை

துருக்கியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முக்கியமான மேயர் பதவியாக கருதப்படும் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் எர்டோகன் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளனர். இஸ்தான்புல்லில் குடியரசு மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய மேயர் எக்ரேம் இமாமோக்லு முன்னிலை பெற்றுள்ளார். மான்சுர் யவாஸ் அங்காராவில் மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வீதத்தில் அதிகரிப்பு

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள் தொகையில் 13.7 வீதமானோர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 22 இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அண்மையில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை துரத்திச்சென்று கைது செய்த குதிரைப்படை வீரர்கள்

அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள அல்புகுவெர்க்யூ என்ற நகரிலுள்ள வணிக வளாகமொன்றில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை குதிரைப் படை வீரர்கள் விரட்டிச்சென்று கைது செய்துள்ளனர். இதன்போது பிடிபட்ட சந்தேக நபரிடமிருந்து போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரக அறுவை சிகிச்சையில் முதியவர் கின்னஸ் சாதனை

கனடா ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த வோல்டர் என்ற 88 வயதான முதியவருக்கு, கடந்த 2023ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. பத்து மாதங்கள் கடந்தும் அவரது சிறுநீரகம் நல்ல முறையில் செயற்பட்டு வருவதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட உலகின் வயது மூத்தவர் என்ற உலக சாதனையை வோல்டர் டவுரோ நிலைநாட்டியுள்ளார்.

பால்டிமோர் இடிபாடுகள் அகற்றலில் 200 டன் பாகங்கள்

அமெரிக்காவின் கிழக்கு பால்டிமோர் துறைமுகத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 200 டன் மதிக்கத்தக்க பாலத்தின் பாகங்கள் மீட்க்கப்பட்டன. ஆற்றில் சரிந்து விழுந்த பாலத்தை அதிநவீன உபகரணங்கள் கொண்டு சிறுசிறு பாகங்களாக வெட்டி எடுக்கும் நடவடிக்கையும் தற்போது இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.