இராணுவத்திற்கு கட்டாய ஆள் சேர்ப்பு: ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆணை

OruvanOruvan

Putin

இராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பிற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் (Vladimir Putin) கையேழுத்திட்டுள்ளார்.

இராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்கத்திற்காக 150000 பேரை சேர்ப்பதற்கு திட்டம் வகுப்பட்டுள்ளது.வருடாந்த இராணுவ சேர்ப்பின் செயற்பாடாக இதுவுள்ளது.

இதனை ஜனாதிபதி செயலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் உள்ள ஆண்கள் அனைவரும் குறைந்தது ஒருவருடமானவது இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது 18 வயதினையடைந்த ஆண்கள், இராணுவப் பயிற்சியினைப் பெற்றிருக்க வேண்டும்.

இராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்படும் வயதினை 30 இல் இருந்து 27 ஆக குறைத்து நாடாளுமன்ற சட்டமியற்றிருந்தது. இது கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது.

இராணுவத்தில் கட்டாய சேர்ப்பு என்பது ரஷ்யாவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றது. இதனால் இராணுத்தில் இணையும் ஆண்கள் இரண்டு வருடங்களில் விலகிப் போகும் நிலையுள்ளது.

கட்டாயப்படுத்தி இராணுவத்தில் ஈடுபடுத்தல் சட்டரீதியற்றது என தெரிவிக்கப்படும் நிலையில், நாட்டிற்கு வெளியே அவர்களை போரில் ஈடுபட வைக்கமுடியாது.

இதேவேளை கட்டாய இராணுவ சேர்ப்பில் இணைந்த 300000 பேர் உக்ரைய்ன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மேலும் 150000 பேரை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.