மன்னர் சார்லஸிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு: சிகிச்சைக்கு பின்னர் தோன்றும் முதல் நிகழ்வு

OruvanOruvan

United Kingdom

பிரித்தானிய மன்னர் சார்லஸிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.

வின்சர் கோட்டையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மன்னர் மற்றும் அவரது பாரியார் மகாராணி கமிலா (Camilla) ஆகியோர் மக்களை சந்தித்துக்கொண்டனர்.

புற்றுநோய் கண்டிறியப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்றுவந்த சார்லஸ், சிகிச்சைக்குப் பின்னர் மக்களைச் சந்திக்கும் முதல் நிகழ்வு இதுவாகும்.

புனித ஜோர்ஜ் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடியிருந்த மக்கள், மன்னரை கண்டு ஆர்ப்பரித்து உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.

கடந்த மாதங்களில் மன்னர் சார்லஸ் அரச நிகழ்வுகள் பலவற்றை தவிர்த்திருந்தார். சிகிச்சை பெற்றுவருவதினால் மருத்துவர்கள் மன்னருக்கு ஓய்வு அவசியம் தேவை என வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இளவரசர் வில்லயம், மனைவி இளவரசி கேட் மில்டனுக்கு புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதினால் அவரும் பொது நிகழ்வுகளை தவிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.