சீனாவில் அதிகரிக்கும் வீட்டு விலை: கொள்கைகள் வகுப்பாளர்கள் திண்டாட்டம்

OruvanOruvan

China

சீனாவில் வீடுகளின் விலை உயர்வடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.கடந்த இரண்டரை வருடங்களில் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 0.27 வீதத்தினால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.இந்த உயர்வு நிலையில் சொத்துத்துறையில் பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீலை மாதமும் இத்தகைய ஒரு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

சீனாவின் சொத்துத்துறையானது நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான பங்காகக் காணப்படுகின்றது.

நாணயத்தின் மீதான வீழ்ச்சியும் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை தேசிய கொள்கை வகுப்பாளர்கள் விற்பனையைினை ஊக்குவிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் பிஜிங்ஙில் வீட்டுக் கொள்வனவு தொடர்பான கொள்கை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

பிரதான நகரங்களான சங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஒரு வீதத்தினால் விலைகள் உயர்வடைந்துள்ளன.