'சமூக பிரள்வான தொழில் செய்யும் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள்': தலிபான் குழு வெளியிட்டுள்ள அதிர்ச்சி காணொளி

OruvanOruvan

"சமூக பிரள்வான தொழில் செய்யும் பெண்கள் மீது கல்லெறிந்து கொல்லப்படுவார்கள்" என கடவுளின் பெயரால் எனப்படும் தலிபான் குழுவின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்சாதா (Hibatullah Akhunzada) தெரிவித்துள்ளமையானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான்களால் நடாத்தப்பட்டு வரும் அரச ஊடகத்தின் செய்தி வெளியீட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2021இல் நாட்டைக் கைப்பற்றிய தலிபான்கள், ஏற்கனவே பொதுக் கசையடிகள் மற்றும் மரணதண்டனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

கல்லால் அடித்து கொலை செய்யப்படும் பெண்களின் காணொளியும் இணையத்தில் வைரல்👇

இஸ்லாமிய ஷரியா சட்டம்

இந்த கொடூரமான தண்டனைகள் திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களுக்கு கூட வழங்கப்படுகின்ற நிலையிலேயே ஹிபத்துல்லா அகுந்த்சாதா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"சமூக பிரள்வான தொழில் செய்யும் பெண்கள் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள். சமூக பிரள்வான தொழிலுக்கு எதிராக தண்டனையை விரைவில் நடைமுறைப்படுத்துவோம்.

பொது இடங்களில் பெண்களுக்கு கசையடி வழங்குவோம். பொதுவெளியில் கல்லெறிந்து கொல்லுவோம். இவை அனைத்தும் உங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது, ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்.

மனித உரிமைகளைப் பொறுத்தவரை, நாங்கள் அதை கடவுளின் பிரதிநிதியாக பாதுகாக்கிறோம். நீங்கள் பிசாசுகளாக அதனை செய்கிறீர்கள்.

பெண்களின் உரிமைகள் பற்றிய மேற்கத்திய கருத்து இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு எதிரானது. நாங்கள் மேற்கத்தேயர்களான உங்களுக்கு எதிராக 20 வருடங்கள் போராடினோம்,

அது நீங்கள் வெளியேறியவுடன் முடிவடையவில்லை. நாம் இப்போது உட்கார்ந்து தேனீர் குடிப்போம் என்று அர்த்தமில்லை. ஷரியாவை இந்த மண்ணில் கொண்டு வருவோம்.” என தெரிவித்துள்ளார்.

முன்பு கடவுளின் பிரதிநிதிகள் என்ற போர்வையில், ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என தலிபான்கள் பெண்களின் உரிமைகளை திரும்பப் பெறுகிறார்கள் மற்றும் அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை கடுமையாகக் குறைத்துள்ளார்கள்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே பெண்கள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு இடைநிலைக் கல்விக்கு தடை விதிக்கப்பட்டது. ஏறக்குறைய அதே நேரத்தில், தலிபான்கள் பெரும்பாலான பணியிடங்களில் இருந்து பெண்களை தடை செய்தனர்.

அது மாத்திரமன்றி, அவர்களது வீடுகளில் இருந்து 72 கிலோமீட்டர்களுக்கு அப்பால் செல்ல ஆண் பாதுகாவலர் ஒருவரை அறிமுகப்படுத்தினர்.

பின்னர், மே 2022 இல், ஷரியா பற்றிய தலிபான்களின் தூய்மையான விளக்கத்தின் கீழ், பெண்கள் தலை முதல் கால் வரை தங்களை மறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், நவம்பர் 2023 இல், பெண்கள் பூங்காக்களில் இருந்து தடை செய்யப்பட்டனர், ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண்கள் பல்கலைக்கழகக் கல்வியும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.