உயிர்த்த ஞாயிறு: தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கிய பிரான்ஸ்

OruvanOruvan

France protects thousands of churches

பயங்கரவாத தாக்குதல் அச்சம் காரணமாக பாதுகாப்பு கருதி பிரான்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை (29) முதல் இன்று வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புனித வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் அரசாங்கம் நாடு முழுவதும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.

இதன்படி, 4,530 கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 13,500 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொஸ்கோவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து பிரான்ஸ் தமது பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பிரான்ஸில் அண்மைக்காலமாக தொடர்ந்து ஜிஹாதி தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இதன்படி, இந்த ஆண்டின் முதல் பகுதியில் இரண்டு திட்டமிட்ட தாக்குதல்கள் முடியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.