கம்போடியாவில் இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குடிமக்களை மீட்கும் இந்தியா: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World News Updates 31.03.2024

கம்போடியாவில் இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குடிமக்களை மீட்கும் இந்தியா

தொழில் நிமித்தம் கம்போடியாவுக்கு சென்று இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ள தமது நாட்டு பிரஜைகளை மீட்டு வருவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் 75 பேர் உட்பட சுமார் 250 இந்தியர்களை மீட்டு தாயகம் அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்த தடை

அரச நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்நிலையில் செலவினங்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

OruvanOruvan

மெக்சிக்கோவில் அகதிகள் பயணித்த படகு விபத்து- எட்டு பேர் உயிரிழப்பு

மெக்சிகோ வழியாக தெற்கு பசிபிக் பெருங்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்து வீழ்ந்ததில் எட்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 அகதிகள் உயிரிழந்திருப்பதாகவும்,மேலும் சிலர் காணாமல்போயுள்ளதாகவும் மெக்சிகோ கடலோர பொலிஸார் தெரிவித்தனர்.காணாமல்போனோரை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வருவதாகவும் தெரிவிக்கப்புடுகின்றது.

காஸாவில் பஞ்சம் குறித்து எச்சரித்த ஐ.நா அறிக்கை; நிராகரித்த இஸ்ரேல்

காஸாவில் உடனடியாக நிகழக்கூடிய பஞ்சம் குறித்து எச்சரித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.கடந்த வாரம் வெளியிடப்பட்ட அந்தப் பகுப்பாய்வு, காஸா மக்களில் பாதிப் பேர் “பேரழிவு” பட்டினியை எதிர்நோக்குவதாகவும் வடக்கு காஸாவில் பஞ்சம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,அந்த அறிக்கையை இஸ்ரேல் தரப்பு கடுமையாக சாடியுள்ளது.

6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் - சந்தேகநபர் ஏப்ரல் 18 வரை விளக்கமறியலில்

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கனமழை - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழையால் நேற்று இரவு தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

புராரி பிரதீப் விஹார் பகுதியில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

டெல்லி - புராரி பிரதீப் விஹார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஒருவர் காயமடைந்தார் டினவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தை புனர்நிர்மாணம் செய்து மீண்டும் திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில்

பால்டிமோர் பகுதியில் இடிந்துவிழுந்த பாலத்தில் முதல் பகுதியை மீட்கும் பணி நேற்றிரவிலிருந்து நீரிலிருந்து தூக்கும் குழுவினர் அமைக்கப்பட்டு வேலைகள் மன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், கூடிய விரைவில் பாலத்தை புனர்நிர்மானம் செய்து மீண்டும் திறப்பதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு அவசரகால நிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகில் பூரண சூரிய கிரகணம் ஒன்று ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

சூடானில் பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரிப்பு

சூடானில் பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், உடனடி உதவிகள் அவசியமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுக்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக உணவுப் பொருட்களின் விநியோகம் தடைப்பட்டமையே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.