முழு சூரிய கிரகணம் - கனடாவில் நிகழப்போகும் மாற்றம்: நாசா முக்கிய அறிவிப்பு

OruvanOruvan

solar eclipse in Canada

முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

சூரிய கிரகணம்

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது.

எப்போதாவது அரிதாகத்தான் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும்.

இந்நிலையில், வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

அவசரகால நிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகில் பூரண சூரிய கிரகணம் ஒன்று ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாகவே நயாகரா நிர்வீழ்ச்சியைக் காண மக்கள் ஏராளமானோர் கூடும் நிலையில், முழு சூரியகிரகணமும் சேர்ந்துகொள்ள இருப்பதால், அங்கு சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகளை எதிர்கொள்ளும் வகையில், நயாகரா பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8ஆ திகதி, பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

எனவே, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பகல் நேர காப்பகங்களில் விட முன்கூட்டியே தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சாலைகளில் பயணம் செய்வோர் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்காக வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு கீழிறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

OruvanOruvan

பழமை வாய்ந்த செய்தித்தாளில் வெளியான செய்தி

அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளில் இவ்வாண்டிற்கான சூரிய கிரகணம் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தித்தாளில் ஏப்ரல் 8, 2024 அன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி 1970 ஆம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூரியன், நிலவு மற்றும் பூமி அனைத்தும் நேர் கோட்டில் காட்சியளிக்கும் என்றும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

OruvanOruvan