நெதர்லாந்தில் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்களில் மூவர் விடுவிப்பு: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

OruvanOruvan

பணயக்கைதிகள் மூவர் விடுவிப்பு

நெதர்லாந்தில் Ede சிறைபிடிக்கப்பட்டிருந்த மூன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எத்தனை பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

நகரின் மையம் மூடப்பட்டுள்ளதாகவும், கலகத் தடுப்புப் பொலிஸார் மற்றும் வெடிபொருள் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நெதர்லாந்து தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன, ஆனால் பிரான்ஸ் அல்லது பிரித்தானியா போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் போன்று அங்கு தாக்குதல்கள் இடம்பெறவில்லை.

2019 ஆம் ஆண்டில், உட்ரெக்ட் நகரில் டிராம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

2019 ஆம் ஆண்டில், தற்கொலை குண்டுகள் மற்றும் கார் குண்டுகளைப் பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஜிஹாதிகள் மீது டச்சு பொலிஸார் குற்றம் சாட்டினர்.

அந்த ஆண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2018 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் ஸ்டேஷனில் இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தில் பலர் பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு

நெதர்லாந்தின் கிழக்கு நகரமான Ede இல் சனிக்கிழமை அதிகாலை பலர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தாங்கிய ஒருவரினால் இவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லையென பொலிஸார் கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், நகரின் மையத்தில் உள்ள ஒரு கட்டடத்திற்கு சிறப்பு பொலிஸ் பிரிவுகள் அழைக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இந்நிலையில், பொதுமக்கள் அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளவர்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.