பால்டிமோர் இடிபாடுகளை அகற்றும் பணி: பாரிய இயந்திரங்கள் வரவழைப்பு

OruvanOruvan

Massive crane

அமெரிக்காவின் கிழக்கு பால்டிமோர் துறைமுகத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாரிய இயந்திரங்களைக் (crane)கொண்டு இடிபாடுகளை பணியாளர்கள் அகற்றிவருகின்றனர்.

குறித்த இயந்திரம் ஒரே நேரத்தில் சுமார் 1000 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள் தூக்கி அகற்றும் வல்லமை கொண்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து நேற்று நண்பகல் வரை விபரங்கள் சேரிக்கப்பட்டுள்ளன.

கடலில் மூழ்கியுள்ள இடிபாடுகள் சனிக்கிழமை காலை வரை தெடரும் என அமெரிக்க கடல் பாதுகாப்பு பேச்சாளர் கார்மேன் கார்வேர் (Carmen Carver) தெரிவித்துள்ளார்.

கழிவுகளை அகற்றும் பணிக்காக மேலும் ஒரு இயந்திரம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அதிக கப்பல் போக்குவரத்துள்ள குறித்த துறைமுகத்தை மிகவிரைவில் பயன்படுத்தும் வகையில் மீள்கட்டுமானப் பணிகள், இடிபாடுகளை அகற்றிய பின்னர் தொடரும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சரக்கு கப்பல் ஒன்று மின்சார துண்டிப்பினையடுத்து துறைமுகத்தின் பாரிய தூணில் விபத்துக்குள்ளாகியிருந்தது.இதன் போது ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவினைச் சேர்ந்தவர்களாகும்.

பால்டிமோர் துறைமுகத்தில் நாளாந்தம் சுமார் 1500 பணியாளர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

பால்டிமோர் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் பிரான்சின் ஈபிள் கோபுரத்தின் உயரத்திற்கு ஒப்பானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.