அரச நிகழ்வில் கலந்து கொள்ளும் மன்னர் சார்லஸ்: இளவரசர் வில்லியம் குடும்பம் பங்குபற்றாது

OruvanOruvan

King Charles

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் மன்னர் சார்லஸ் (King Charles) எதிர்வரும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று வின்ட்சர் கோட்டை (Windsor Castle) இடம்பெறும் அரச நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது அரச பாரம்பரிய நிகழ்வாகும்.நோய் கண்டிறிந்த பின்னர் மன்னர் கலந்து கொள்ளும் அரச நிகழ்வு இதுவாகும்.இந்த தகவலை பக்கிம்கொம் அரண்மனை (Buckingham Palac) தெரிவித்துள்ளது.

இதேவேளை இளவரசர் வில்லியம் (Prince William) அவரது பாரியார் இளவரசி கேட் (Kate) மற்றும் பிள்ளைகள் ஆகியோர் இந்த அரச நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார்கள் என அறிவிக்கப்படுகின்றது.