நேபாளத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்.....

OruvanOruvan

2024.03.30 World news

நேபாளத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி

நேபளாத்தின், சித்வான் மாவட்டத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காணாமல் போயுள்ளனர். சித்வான் மாவட்டத்தில் இன்று ஆறு பயணிகளுடன் காத்மாண்டுவில் இருந்து கோர்க்கா மாவட்டத்தை நோக்கிச் சென்ற கார், பிரித்வி நெடுஞ்சாலையில் இச்சகமானா கிராமப்புற நகராட்சியில் உள்ள திரிசூலி ஆற்றில் 100 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்தது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.17 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

அரபிக்கடலில் 12 மணி நேரம் நீடித்த அதிரடி நடவடிக்கையின் பின்னர் சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து சுமார் 23 பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் நீருக்கும் தட்டுப்பாடு; உதவிய சீனா

காலநிலை மாற்றத்தால் மாலைத்தீவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சீன அரசு 1,500 தொன் குடிநீரை மாலைதீவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.திபெத்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து தண்ணீரை பெற்று சீன அரசு மாலைதீவுக்கு வழங்கியுள்ளது. சீனாவின் இந்த உதவிக்கு மாலைத்தீவு அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

விமானத்தில் துர்நாற்றம்; அதிரடியாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

விமானத்தில் கடும் நாற்றம் அடித்ததால் பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சார்லட் டக்ளஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஒலேண்டோ நோக்கி ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ் புறப்படவிருந்த நிலையில் 226 பயணிகள் விமான இணைப்புப் பாலம் வழியாகவும் வெளியேற்றச் சறுக்கு வழியாக வெளியேற்றப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவுக்கான தென்கொரிய தூதுவர் இராஜினாமா

அவுஸ்திரேலியாவுக்கான தென்கொரிய தூதுவராக நியமிக்கப்பட்ட லீ ஜாங்-சுப் (Lee Jong-sup) , ஒரு மாத காலத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.தென்கொரியாவில் ஊழல் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.இவரின் நியமனத்தை தென்கொரியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.இந்நிலையிலேயெ தற்போது தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருந்து ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவிய டிரோன்களை அமெரிக்க படை சுட்டு வீழ்த்தியது.

கனடாவில் கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

உயர் கல்விக்காக கனாடா செல்லும் இந்தியர்களின் ஆர்வம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் இந்த எண்ணிக்கை பெரிதும் சரிவைச் சந்தித்துள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கனடாவை தேர்வுசெய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது. அதுவே மத்திய மற்றும் தெற்காசியாவைத் தேர்வு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.