தென்னாபிரிக்காவில் கோர விபத்து: பாரிய மனித உயிரிழப்பு

OruvanOruvan

South Africa

தென்னாபிரிக்காவில் வடக்கு மாகாணமான லிம்போபோவில் (Limpopo) இடம்பெற்ற வாகன விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை விபத்துக் காரணமாக அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கிய எட்டு வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

இதனை தென்னாபிரிக்க போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வாகன சாரதி கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மமற்லகலா (Mamatlakala) பகுதியை அண்டிய பாலத்தில் பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினால் தீப்பரம்பல் ஏற்பட்டிருந்தது. தீப்பரம்பல் காரணமாக பலரது உடல்கள் கருகி நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

போட்ஸ்வானா (Botswana) நகரிலிருந்து மோரியா (Moria) நகரை நோக்கி குறித்த பேருந்து பயணித்திருந்த நிலையில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.